Powered by Blogger.
RSS

புடலங்காய் சாதம்



புடலங்காய் சாதம்

தேவைப்படும் பொருட்கள்:

புடலங்காய் : ஒரு கப்
கறிவேப்பிலை : ஒரு கொத்து

பெருங்காயம் : சிறிதளவு

தாளிக்க

கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)
நிலக்கடலை- ஒரு மேசைகரண்டி
வரமிளகாய்-2

அரைக்க:
தேங்காய்-கால் மூடி
மிளகு-கால் ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
கொத்தமல்லி- 2 கொத்து
பூண்டு- முழுதாக

செய்முறை:

புடலங்காயை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வேகவிட்டு எடுக்கவும்.


அரைக்க கொடுத்த பொருட்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிக்கவும்.


பின் பெருங்காயத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.


பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் புடலங்காயை சேர்த்து பாதியாக வேகும் வரை மூடிவைக்கவும்.


பின்னர் அரைத்த விழுது,தக்காளி சேர்த்து நன்கு வேகவிடவும்.


நன்கு சுருளும் வரை வதக்கவும்.


பின்னர் சாதத்தை கொட்டி கிளறவும்.


சுவையான புடலங்காய் சாதம் தயார்!

250
4 5


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

11 comments:

F.NIHAZA said...

புடலங்காயினால் இப்படியெல்லாம் கூட செய்வாங்களா.....
நம்பமுடியலை ஆமினா....

ம்...நல்லாத்தான் இருக்கும்...

Jaleela Kamal said...

புடலங்காயில் கூட்டு பொரியதான் அதையும் சாதமா? சூப்பர்

Aashiq Ahamed said...

சலாம்..

சிம்பிளான அருமையான ரெசிபி...ஜசாக்கல்லாஹ்.

SURYAJEEVA said...

புடலங்காய் சாதமா? நம்பி இறங்கலாமில்ல..

Asiya Omar said...

நான் என்ன காய் செய்தாலும் முதலில் சாதத்தில் பிரட்டி ஒரு பிடி சாப்பிடுவேன்,அப்படி பார்த்தால் இதுவும் நிச்சயம் அருமையாக இருக்கும்...

விச்சு said...

பார்க்கவே அழகா இருக்கு...

Unknown said...

சூப்பர் சாதம்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

சே.குமார் said...

ம்...நல்லாத்தான் இருக்கும்...

MohamedAli said...

அன்புச்சகோதரி ஆமீனா அவர்களுக்கு அன்புடன் அஸ்ஸலாமு அலைக்கும்! தங்களின் கருத்துக்கள் கண்ணுற்றேன். pettagum.blospot ல்-விரைவில் followers இணைக்கின்றேன். தொடர்ந்து கருத்துக்களை நாடும் அன்பன் A.S. முஹம்மது அலி

ஹேமா said...

அருமையான ரெசிபி.குழந்தைகளுக்கு ஏற்றமாதிரி இருக்கு.என் தோழிக்குச் சொல்லித்தருகிறேன் ஆமினா !

உலக சினிமா ரசிகன் said...

"அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா" என வேண்டுகோள் விடுத்து
பதிவிட்டுள்ளேன்.வருகை தந்து எனது கருத்துக்கு வலுவூட்டும்படி அன்போடு அழைக்கிறேன்.

Post a Comment