Powered by Blogger.
RSS

ஆப்பம்


கண்டிப்பா எல்லாருக்கும் இத எப்படி செய்யணும்னு தெரிஞ்சுருக்கும். தெரியாதவர்களுக்காக....

பச்சரிசி-2 டம்ளர்
புழுங்கல் அரிசி-1 டம்ளர்
உளுந்து- அரை டம்ளர்
வெந்தயம்- கால் ஸ்பூன்
தேங்காய்-கால் மூடி
சாதம்- கால் கப்
சோடா உப்பு-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
தேங்காய் தண்ணீர்- தேவைக்கு

அரிசி வெந்தயம் சேர்த்து 4 மணி நேரமும் உளுந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.  கிரைண்டரில் தேங்காய், சாதம் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். அரிசியை சேர்த்து ஆட்டி ரவைபோல் வந்ததும் தனியே எடுத்துவைக்கவும். உளுந்தை மைபோல் அரைத்து எடுக்கவும். அனைத்தையும் உப்பு மற்றும் சோடா உப்பு கலந்து 8 மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தோசைமாவைவிட நீர்த்திருக்கும் பதத்தில் இருக்க தேவைக்கு தகுந்தது போல் தேங்காய் நீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து துணிகொண்டு எண்ணெய் தடவி நன்கு சூடானதும் 1 1/2 குழிகரண்டி மாவு விடவும்
 
 இரு கைப்பிடிகளையும் பிடித்து எல்லா இடங்களிலும் பரவிவிடவும்
 ஓரங்களில் லேசாக மாவு பட்டால் போதும். மீதம் மாவு நடுவில் வந்து நிற்கும்.

வேகும் வரை மூடிவைக்கவும். ஓரங்கள் நன்கு சிவந்ததும் லேசாக கரண்டி கொண்டு ஓரங்களில் எடுத்துவிட்டு பின்னர்  தட்டில் எடுத்துவைக்கவும்.
ஆப்பம் தயார். தேங்காய் சட்னி, தாளிச்சா, சாம்பார், ஆகியவை நல்ல காம்பினேஷன்.










டிப்ஸ்
ஆப்பம் வார்த்த பின் எண்ணெய் விடவேண்டாம். ஆங்காங்கே திட்டுதிட்டாக நிற்கும்.

முதல் நாள் மதியம் ஊறவைத்து சாயங்காலம் கிரண்டரில் ஆட்டினால் அடுத்த நாள் காலையில் டிபனுக்கு உபயோகிக்கலாம்:-)

ஆப்பம் சுடப்போகும் போது தேங்காய் நீர் சேர்க்கவும்.

தண்ணீருக்கு பதில் தேங்காய் நீர் சேர்த்து கரைத்தால் சுவை அதிகமாகும். உடைக்கும் தேங்காயின் நீரை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் இதுபோல் உபயோகித்துக்கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

17 comments:

விச்சு said...

தேங்காய் பால் ஆப்பம் சுவையானதாக இருக்கும். நல்ல சுவையான பதிவு.

Angel said...

இதை கண்ணால் பார்த்தே பல வருஷமாகுது .செய்து பார்த்து சொல்கிறேன் .
உங்க ரெசிப்பி தக்காளி சாதம் அடிக்கடி செய்றேன் ஆமினா .

Asiya Omar said...

//முதல் நாள் மதியம் ஊறவைத்து சாயங்காலம் கிரண்டரில் ஆட்டினால் அடுத்த நாள் காலையில் டிபனுக்கு உபயோகிக்கலாம்:-)//

சூப்பர்.

Avargal Unmaigal said...

அம்மாவின் மறைவிற்கு பிறகு நல்ல ஆப்பம் சாப்பிட்டு ஆண்டுகள் பல ஒடிவிட்டன. உங்கள் ஆப்ப குறிப்பு & படங்கள் அருமை அடுத்த தடவை இந்தியா வரும் போது உங்கள் வீட்டு வாசலில் வந்து அம்மா தாயே ஒரு ஆப்பம் இருந்தா போடுங்க என்று என்னை கேட்கும் நிலமைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்

ஆமினா said...

@விச்சு

மிக்க நன்றி விச்சு

ஆமினா said...

@ஏஞ்சலின்

அடடா... அப்படியா...

மிக்க நன்றி ஏஞ்சலின். என்னைய விட நீங்க அருமையா செஞ்சுருப்பீங்க. அதான் அடிக்கடி செய்ய சொல்றாங்க போல ;-)

மிக்க நன்றி ஏஞ்சலின்

ஆமினா said...

@ஆசியா

;-)

எப்ப ஊற போடணும்னு எனக்கும் ஆரம்ப காலங்களில் தெரியாம இருந்துச்சு. அதான் இப்படி :-)

ஆமினா said...

@அவர்கள் உண்மைகள்

இறைவன் நாடினால் அடுத்த முறை வாங்க :-)

நாகா ராம் said...

நான் இதுவரை ஆப்பம் செய்ததில்லை. இந்த வாரம் செய்யப்போகிறேன் ஆமினாவின் தயவால் :-)

ம.தி.சுதா said...

அக்கா கீ போட்டை நனைய வச்சிட்டிங்களே...

ragikaran said...

நல்ல குறிப்புக்கள்...சமைத்து அனுபவித்து மீதி சொல்லுகின்றன்.

நிரூபன் said...

வணக்கம் அக்கா,

பால் அப்பம் பற்றிய ரெசிப்பி அருமை,
நம்ம ஊரில இந்த அப்பத்தில் முட்டையும் அடிச்சு ஊற்றி சேர்ப்போம்!

காட்டான் said...

வணக்கம் ஆமினா!

என்னுடைய ஆச்சி  இரண்டு அப்பம் சுட்டு நடுவில் தேங்காய் பாலும் சீனியும்(சர்கரை?)யும் போட்டு இரண்டையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி தருவாங்க.. அருமையான ருசி.. இப்ப நான் அப்பம் சாப்பிட்டே 20 வருசமாச்சு..!!:-) 

goma said...

ஹாய்
இத்தனை நாளா பார்க்கவே இல்லையே ......அருமையான சமையலறை

Raj said...

ஆமினா அக்கா,

கடைசி படத்தைப் பார்க்கும்போது,ப்ளேட்டோட எடுத்துக்கணும் போல இருக்கு.நாவூற வைக்கும் ரெசிப்பி.
படங்களைப் பார்க்கும் போதே செய்யும் ஆவல் அதிகரிக்கிறது.ஈஸ்டர் ஹாலிடேஸ் வருகிறது,அதில் செய்து பார்க்க விருப்பம்.ஆப்பம் என்றால் மிகவும் இஷ்டம்,ஆனால் நாங்களாக இதுவரை முயற்சித்ததில்லை.

1.//பச்சரிசி௨ டம்ளர்
புழுங்கல் அரிசி௧ டம்ளர்
உளுந்து- அரை டம்ளர்//
ஒரு டம்ளர் அளவு என்பது 200ml or 250ml.
ஒரு டம்ளர் அளவை mlல் தாருங்கள் .

2.//வெந்தயம்- கால் ஸ்பூன்//
ஸ்பூன் என்பது டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.

3.//சாதம்- கால் கப்//
250ml கப்பில் தானே கால்கப்.பச்சரிசி சாதமா,புழுங்கலரிசி சாதமா.எது போட்டால் சுவையாக இருக்கும்.

4.//சோடா உப்பு-சிறிதளவு//
எத்தனை சிட்டிகை சேர்க்கலாம்.

நீங்கள் மேலே தந்திருக்கும் recipeக்கு ஏற்ப பதில் தாங்க அக்கா.எங்களால் முதல்முறை திறம்பட செய்ய முடிந்தால் ,அடுத்த தடவை ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவுகளை கூட்டி செய்து கொள்கிறோம்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது,எப்போதும்போல் தெளிவாக பதில்தாருங்கள் அக்கா.எங்களுக்கு சுவைபட செய்வதற்கு உதவியாக இருக்கும்.cooking knowledge
உள்ளவங்க ரெஸிப்பி கண்ணால பார்த்தாலே செய்துடுவாங்க,என்னைப்போல் சமையலில் மூளையில்லாதவங்களுக்கு கஷ்டம்தான்.

உங்கள் பதிலை நாங்கள் அனைவரும் மிகமிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.ரொம்ப நன்றி அக்கா.

ஆமினா said...

@ராஜ்

மிக்க நன்றி :-)

வேலை பளு! அதான் லேட்டான பதில் :-)

//1.//பச்சரிசி௨ டம்ளர்
புழுங்கல் அரிசி௧ டம்ளர்
உளுந்து- அரை டம்ளர்//
ஒரு டம்ளர் அளவு என்பது 200ml or 250ml.
ஒரு டம்ளர் அளவை mlல் தாருங்கள் .
//
பச்சரிசி- 400 கிராம்
புழுங்கல் அரிசி- 200 கிராம்
உளுந்து-100 கிராம்

//2.//வெந்தயம்- கால் ஸ்பூன்//
ஸ்பூன் என்பது டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.
//
டீஸ்பூன்

//3.//சாதம்- கால் கப்//
250ml கப்பில் தானே கால்கப்.//
ஆமாம்

//பச்சரிசி சாதமா,புழுங்கலரிசி சாதமா.எது போட்டால் சுவையாக இருக்கும்.//
புழுங்கல் அரிசி சாதம்

//4.//சோடா உப்பு-சிறிதளவு//
எத்தனை சிட்டிகை சேர்க்கலாம்.//
ஒரு சிட்டிகை


செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க ராஜ்

வருகைக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி

Raj said...

ஆமினா அக்கா,

முதலில் உங்களின் பதிலுக்கு மிக மிக நன்றி.

அக்கா என்ன சொல்வதுன்னே தெரியலை.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.ரொம்ப சூப்பரா ஆப்பம் வந்தது,டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமை.

ஆப்பம் எங்களால செய்ய முடியுமான்னு தயங்கிட்டே தான் இருந்தோம்,ஆனால் எங்களாலயே நம்பமுடியலை நாங்கதான் செய்தாமான்னு.அனைத்தும் உங்களையே சாரும்,உங்கள் தெளிவான குறிப்பும்,நீங்கள் பதிலளித்து உதவியதுமே அன்றி வேறில்லை.எங்கள் நண்பர் குழுவின் சார்பில் மனதார்ந்த நன்றிகள் அக்கா.

இங்கு படித்துக்கொண்டிருக்கும் என் cousin brother, Easter holidays 5 days இருந்ததால் வந்திருந்தான்.அவனுக்கு ஆப்பம் ரொம்ப பிடித்திருந்தது.ஊரில் சாப்பிடுவது போலவே இருந்தது என்று சொன்னான்.தனது நன்றியை உங்களிடம் தெரிவிக்க சொன்னான்.

Post a Comment