Powered by Blogger.
RSS

பலாபழ போண்டா மற்றும் தோசை

தேவையான பொருட்கள்
பலாப்பழம்-15 முதல் 20
மைதா மாவு- 400 கிராம்
சீனி- 200 கிராம் (விருப்பத்திற்கு ஏற்ப)
ஏலக்காய்-3
உப்பு-சிறிதளவு
சோடா உப்பு-ஒரு பின்ச்
எண்ணெய்- பொரிக்க தகுந்தபடி



நன்கு கனிந்த பலாபழங்களை தேர்ந்தெடுத்து கொட்டைகளை நீக்கிவிடவும்.



எண்ணெயினை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.



பழங்களை கைகளாலேயே நன்கு மசித்து  நீர் ஊற்றி மாவினை சற்று கெட்டியாக பினைந்துக்கொள்ளவும்.



6 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு நுரைத்து பொங்கி  வரும். இது தான் சரியான பதம்.



கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போடவும்.



இரு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.  போண்டா தயார்.



தோசைக்கல்லை சுட  வைத்து எண்ணெய் தடவி 2 கரண்டி மாவு விட்டு  தோசையாக வார்க்கவும்.திருப்பி போட்டு வேக விடவும்.



பலாப்பழ தோசையும் தயார்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

Asiya Omar said...

புதுசாக இருக்கு.அருமை.பார்க்கவே ஆசையாக இருக்கு.

அஸ்மா said...

ஸலாம் ஆமினா! வாழைப்பழ போண்டாதான் செய்து, போட்டோவும் எடுத்து வைத்துள்ளேன் :) பலாப்பழத்திலுமா? கைவசம் பலாச்சுளைகள் உள்ளது, செய்து பார்த்துவிட வேண்டியதுதான் :)

Radha rani said...

ஆமி..நேற்றே குறிப்பை படித்தேன்.பலாப்பழம் கைவசம் இருந்தது. இன்று காலையில் செய்து பார்த்தேன்.நல்ல சுவையுடன் அருமையாக வந்தது.பகிர்வுக்கு நன்றி!

Menaga Sathia said...

கடவுளே,இப்படி பலாப்பழத்தை காண்பிச்சு ஆசையை கிளப்புறீங்களே நியாயமா?? நீங்களே செய்து பார்சல் அனுப்பிடுங்க எனக்கு...

மனோ சாமிநாதன் said...

அருமையான சமையல் குறிப்புகள்!!

Post a Comment