Powered by Blogger.
RSS

மிளகுக்கறி (பேச்சுலர்ஸ் சமையல்)

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி- அரைகிலோ
தேங்காய்-  கால்மூடி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை- சிறிதளவு
இஞ்சிபூண்டு-3 ஸ்பூன்
தக்காளி- 3
மிளகுதூள்- 1 1/2  ஸ்பூன்
வரமிளகாய்- 3




குக்கரில் எண்ணெய் 2 குழிகரண்டி விட்டு, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.



பச்சை வாசனை போனதும் தக்காளி மற்றும் பொடியாய் நறுக்கிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.




தக்காளி குழைந்ததும்  சுத்தம் செய்த கறி மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விட்டு வேகவிடவும்.




கறி நன்கு வெந்து இறக்க போகும் 5 நிமிடத்திற்கு முன் மிளகுதூள் தூவி நன்கு பிரட்டி நீர் வற்றும் வரை கிளறவும்.




அவ்வளவுதான்... சுவையான... எளிமையான தேங்காய் மிளகுக்கறி தயார் :-)
இதனை ஜலீலா அக்க நடத்தும் பேச்சுலர்ஸ் ஈவெண்டுக்க அனுப்புகிறேன் Bachelors feast :-)

இத்துடன் ரவா தோசை குறிப்பையும் அனுப்புகிறேன் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

Unknown said...

Romba easy ya iruku

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... சூப்பர்...

Nizam said...

ஸலாம்

நல்ல சுவையான சமையால் குறிப்பு. ஜெஸக்கல்லாஹ் ஹைர் .... சகோதரி

Sivakumar said...

//பச்சை வாசனை போனதும் //

பச்சை நிறம் போனதும். பொருட்குற்றம் உள்ளது.

Sivakumar said...

//கறி நன்கு வெந்து இறக்க போகும் 5 நிமிடத்திற்கு முன்//

கறி ஏற்கனவே இறந்துதானே இருக்கும்??

Post a Comment