Powered by Blogger.
RSS

இறால் மசாலா

தேவையான பொருட்கள்:
இறால் -அரைகிலோ
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ்- 2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

வறுத்து அரைக்க:
தனியா- ஒரு கைப்பிடி
வரமிளகாய்-4
பட்டை, ஏலக்காய்,கிராம்பு- 1:2:3
தேங்காய் கால் மூடி

தனியாக அரைக்க
தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
முந்திரி-10

தாளிக்க:
வெங்காயம்-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-3
இஞ்சிபூண்டு விழுது- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
தக்காளி-3
புட் கலர்- சிறிதளவு



 இறால்லை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.



வறுக்க கொடுத்த பொருட்களை தேங்காய் தவிர்த்து மற்றவற்றை வறுத்து, பின் தேங்காய் சேர்த்து நீர் விட்டு மைய்யாக அரைத்துக்கொள்ளவும்.




இறால்லில் அரைத்த விழுதையும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.




கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கவும்.




இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.




அத்துடன் மிளகாய் தூள், புட்கலர், உப்பு, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




இப்போது ஊறிய இறால்லை சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.




பாதி வெந்ததும்  தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து மீண்டும் மூடிவிட்டு இறக்கிவிடவும்.





சுவையான இறால் மசாலா தயார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

வலையுகம் said...

//இறால்லை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.//

சரி
//வறுக்க கொடுத்த பொருட்களை தேங்காய் தவிர்த்து மற்றவற்றை வறுத்து நீர் விட்டு மைய்யாக அரைத்துக்கொள்ளவும்.//

சரி

//இறால்லில் அரைத்த விழுதையும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.//

சரி

//கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கவும்.//

சரி

//இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.//

இந்த பச்சைவாசனை போக வேண்டும் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்

///அத்துடன் மிளகாய் தூள், புட்கலர், உப்பு, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.//

சரி

//இப்போது ஊறிய இறால்லை சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.//

சரி

///பாதி வெந்ததும் தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து மீண்டும் மூடிவிட்டு இறக்கிவிடவும்.///

சரி
தங்கச்சி சமீபகாலமாக சவூதியில் சமைச்சு சாப்பிட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

மிக எளிமையாக சொல்லித் தந்து இருக்கிங்க இதை செய்ய முயற்சிக்கிறேன்



Unknown said...

Prawn na ennaku romba pidikum... ithu romba easy ya iruku seithu parkuren... Next post ready

Sivakumar said...

ப்ளாக் ஓனருக்கு,

தாங்கள் சமையல் செய்யும் கடாய், கரண்டி, ஸ்பூன், குக்கர் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் நடுவிலும் samayalexpress.blogspot.in எனும் லேபிள் ஒட்டப்பட்டு வருகிறது. அதையும் சேர்த்து சாப்பிடும் பட்சத்தில் அப்பாவி பதிவர்கள் நிலை கவலைக்கிடம் ஆக வாய்ப்புகள் அதிகம் ndtv கருத்துக்கணிப்பு அடித்து சொல்கிறது. ஆகவே ஆவன செய்யுமாறு மன்றாடி, குச்சிப்புடி, பரதநாட்டியம் ஆடி
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆமினா said...

@சிவா

எப்பா ராசாக்களா... ரொம்ப நாளைக்கு பொறவு ஏதோ ஒரு ஆசைல மறுபடியும் தூசு தட்டியிருக்கேன் இந்த ப்ளாக்கை!!!

கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா :-)

திண்டுக்கல் தனபாலன் said...

படத்துடன் விளக்கம்...

நன்றி...

Post a Comment