Powered by Blogger.
RSS

சுட்ட கத்தரிக்காய் சம்பல் (பேச்சுலர்ஸ் சமையல்)





தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்-1
தக்காளி-2
வெங்காயம்-3
பச்சைமிளகாய்-1
கேரட், வெள்ளரிக்காய்- விரும்பினால்
உப்பு-தேவைக்கு






நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்)




ஆறியதும் தோல் நீக்கி பிசைந்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும்.




பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
சுட்டகத்திரிக்காய் சம்பல் தயார்.
இதிலேயே நிறைய வகை உள்ளன. கருவாட்டை சுட்டு முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல் :-) கத்தரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல் :-)  கத்தரிக்காயும்  தக்காளியும் சுட அலுப்பா இருக்கா??? புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்.... வெங்காய சம்பல் தயார் :-))) உடனடி சைட் டிஷ் ரெடி...



இதனை ஜலீலா அக்க நடத்தும் பேச்சுலர்ஸ் ஈவெண்டுக்க அனுப்புகிறேன் Bachelors feast :-)

இத்துடன் ரவா தோசை குறிப்பையும் அனுப்புகிறேன் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7 comments:

Nizam said...

மாஷா அல்லாஹ் அருமை சகோதரி.. 5 to 10 நிமிஷத்தில் தயார் செய்து விடலாம் போல இருக்கிறது. சாப்பத்திக்கு இந்த ரெசிபி நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்கள் பதிவை சுட்டு விடுகிறேன்..... ஜெஸக்கல்லாஹ் ஹைர். சகோதரி

குறையொன்றுமில்லை. said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

Unknown said...

Romba nalla iruku. Naaga brinjal mathum sothu kuskaku sapiduvoom.. Ippadi seithathu illai.. Romba easy ya iruku vetri perra valthukal amina

சசிகலா said...

இவ்வளவு சமையல் குறிப்பு இருக்கா பார்க்காமல் இருந்துவிட்டேனே வருகிறேன்.

Asiya Omar said...

குறிப்பு நல்லாயிருக்கு ஆமினா.

Unknown said...

சலாம் அக்கா

Really Different Approach for cooking recipes .. :)

நான் சமையல் கத்து கிட்டு இருக்கேன் .. உங்க பதிவ பார்த்து சமைத்தால் நல்லா வருமா சமையல் ?

ஆமினா said...

@சுல்தான்...

//சலாம் அக்கா

Really Different Approach for cooking recipes .. :)

நான் சமையல் கத்து கிட்டு இருக்கேன் .. உங்க பதிவ பார்த்து சமைத்தால் நல்லா வருமா சமையல் ?
//

வ அலைக்கும் சலாம்... தாராளமா ட்ரை பண்ணுங்க :-)

Post a Comment