தேவைப்படும் பொருட்கள்
மேகி- 1 பாக்கெட்
கைமா- 50 கிராம்
வெங்காயம் - 2
கேரட்,பீன்ஸ்,பட்டாணி, முட்டைகோஸ்- எல்லாம் சேர்ந்து ஒரு கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- 5 இலை
பச்சை மிளகாய் -1
பெப்பர் - கால் ஸ்பூன்
முட்டை- 1
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- தாளிக்க
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- அதன்பின் இஞ்சிபூண்டு சேர்த்து , பச்சைவாசனை போனதும் கைமா சேர்த்து நன்கு வதக்கவும்
- மேகியில் கொடுத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- இப்போது காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். அரைபாகம் வெந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- நீர் நன்கு கொதித்ததும் மேகியை உடைத்து நன்கு கிளறிவிட்டு மூடிவிடவும்...
- சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் குழையாமல் பார்த்துக்கொள்ளவும். நீர் முழுக்க வற்றியதும் இறக்கிவிடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி முட்டை மற்றும் மிளகுதூள் சேர்த்து பொடிமாஸ் மாதிரி செய்து மேகி கலவையில் சேர்த்து பிரட்டவும்.
- இப்போது பரிமாறவும் :-)
9 comments:
ஆஹா! எளியமுறையில் ஒரு உணவு ரெடி!! சூப்பர்!!
நன்றி !!
எளிய முறையில் ஒரு உணவு செய்முறை...
வாழ்த்துக்கள் அக்கா.....
nice
nice.
உங்களின் வலைப்பூவினை வலச்சரத்தில் இன்று அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
http://blogintamil.blogspot.com/
SALAM,
முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.
கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html
Looks Yummy!!:)I will definitely try this!!
வணக்கம் !
தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் முடிந்தால் தங்களின் வருகையினை உறுதிப் படுத்துங்கள் .தங்களை அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பதனை
நான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன் .மிக்க நன்றி படைப்பிற்கு !
http://blogintamil.blogspot.ch/2013/07/3.html
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment