Powered by Blogger.
RSS

பிஸ் ப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப்
பொரித்த மீன் -2 துண்டுகள்
வெங்காயம்-2
முட்டை-1
கேரட்,பீன்ஸ், கோஸ்- ஒரு கப்
பச்சைமிளகாய்-1
பூடு-7 பல்

ப்ரைட் ரைஸ் பொடி-1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
டொமெட்டோ சாஸ்- ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 5 ஸ்பூன்




மீன் முள்ளை நீக்கி உதிர்த்துவைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பூடு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.



உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.



பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.


காய்கறி பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.



சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.



கலவை நன்கு சுருண்டதும் சாதத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.



பிஸ் ப்ரைட் ரைஸ் தயார் :-)





குறிப்பு :
                இவை அனைத்தும் ஹை ப்ளேமில்  வைத்தே செய்ய வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பலாபழ போண்டா மற்றும் தோசை

தேவையான பொருட்கள்
பலாப்பழம்-15 முதல் 20
மைதா மாவு- 400 கிராம்
சீனி- 200 கிராம் (விருப்பத்திற்கு ஏற்ப)
ஏலக்காய்-3
உப்பு-சிறிதளவு
சோடா உப்பு-ஒரு பின்ச்
எண்ணெய்- பொரிக்க தகுந்தபடி



நன்கு கனிந்த பலாபழங்களை தேர்ந்தெடுத்து கொட்டைகளை நீக்கிவிடவும்.



எண்ணெயினை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.



பழங்களை கைகளாலேயே நன்கு மசித்து  நீர் ஊற்றி மாவினை சற்று கெட்டியாக பினைந்துக்கொள்ளவும்.



6 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு நுரைத்து பொங்கி  வரும். இது தான் சரியான பதம்.



கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போடவும்.



இரு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.  போண்டா தயார்.



தோசைக்கல்லை சுட  வைத்து எண்ணெய் தடவி 2 கரண்டி மாவு விட்டு  தோசையாக வார்க்கவும்.திருப்பி போட்டு வேக விடவும்.



பலாப்பழ தோசையும் தயார்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

டொமெட்டோ நூடுல்ஸ்/ tomato noodles


தேவைப்படும் பொருட்கள்
சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்
தக்காளி-4
வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை- ஒருகொத்து
டொமெட்டோ சாஸ்-ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- 2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தாளிக்க தகுந்தபடி



வெங்காயம்,தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.


ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.


நன்கு கொதித்ததும் அணைத்துவிட்டு நூடுல்ஸை சேர்த்து மூடிவிடவும்.


2 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி நீரை முழுவதுமாக வடிக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.


பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும்  வரை வதக்கிய பின் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்


கலவையை ஓரங்களில் ஒதுக்கி நடுவில் முட்டையை  உடைத்தூற்றி கிளறவும். பின் மொத்தமாக எல்லா கலவையும் ஒரு சேர கிளறவும்.


தக்காளி சாஸ், சோயா சாஸ் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.


கலவையில் எண்ணெய் பிரிந்து வந்ததும் நூடுல்ஸை சேர்க்கவும்.


உடையாமல் மசாலா கலவை நூடுல்ஸில் சேரும்படி கிளறவும்.


டொமெட்டோ நூடுல்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.






குறிப்புகள்
  • கரண்டிக்கு பதில் இடுக்கி உபயோகப்படுத்தலாம். இதனால் உடையாமல் இருக்கும். அனுபவம் இருந்தால் குலுக்கி விட்டு மசாலா ஒருசேர ஆகும்படி செய்யலாம்.
  • மேலே சொன்ன பக்குவப்படி நூடுல்ஸ் வேகவைத்து எடுத்தால் உதிரியாகவும், குழையாமலும் வரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொத்து புரோட்டா

தேவையான பொருட்கள்
புரோட்டா-2
முட்டை-1
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
உப்பு-தேவைக்கு
என்ணெய்-4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா- 1 1/2 குழிகரண்டி
பூடு-8 பல்
கறிவேப்பிலை- ஒரு கொத்து






புரோட்டாவை கையால் பிய்த்துக்கொள்ளவும்.




வெங்காயம், தக்காளி, பூடு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,





கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூடு சேர்த்து தாளிக்கவும்.




பூடு நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் முட்டை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.





அதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும்.தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.





சால்னா ஒருசேர சுருண்டதும் புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி பிரட்டவும்.




கொத்து புரோட்டா தயார். 
(கடைகளில் கொத்துவது போல் தோசைகரண்டி மூலமும் கொத்தலாம். அடுப்பு உடைந்து போனால் பஞ்சாயத்துக்கு வரக்கூடாது :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பீர்க்கங்காய் காராமணி குழம்பு

தேவைப்படும் பொருட்கள்
பீர்க்கங்காய்- ஒரு கப்
காராமணி(தட்டைபயறு/ருதியா/அல்சந்தர்;-)-50 கிராம்
புளி- நெல்லிக்காய் அளவு
புளிகுழம்பு தூள்- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
பச்சைமிளகாய்-3
கறிவேப்பிலை-ஒருகொத்து
பூடு- 20 பல்
உப்பு-தேவைக்கு
கடுகு,உளுந்து- ஒரு ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2







காராமணியை 6 மணிநேரம் ஊறவிடவும்






குக்கரில் உப்பு சேர்த்து முக்கால் பாகம்  அளவுக்கு வேகவைத்து வைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளிக்கவும்.பின்னர் பூடு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




 நறுக்கிவைத்த பீர்க்கங்காய் துண்டு, தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.



பீர்க்கங்காய் பாதியளவு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்க்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.




தக்காளி குழைந்ததும்  புளிகுழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.



பின்னர் ஊற வைத்த புளியில்  தேவைக்கு ஏற்ப நீர் சேர்த்து  கரைத்துக்கொள்ளவும். அதை மசாலாவில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.




காராமணியை  வேக வைத்த நீருடனே சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் இறக்கவும்.



சுவையான பீர்க்கங்காய் காராமணி குழம்பு தயார். ஆம்லேட், பொரியல்,கீரையுடன் அருமையாக இருக்கும்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆப்பம்


கண்டிப்பா எல்லாருக்கும் இத எப்படி செய்யணும்னு தெரிஞ்சுருக்கும். தெரியாதவர்களுக்காக....

பச்சரிசி-2 டம்ளர்
புழுங்கல் அரிசி-1 டம்ளர்
உளுந்து- அரை டம்ளர்
வெந்தயம்- கால் ஸ்பூன்
தேங்காய்-கால் மூடி
சாதம்- கால் கப்
சோடா உப்பு-சிறிதளவு
உப்பு-தேவைக்கு
தேங்காய் தண்ணீர்- தேவைக்கு

அரிசி வெந்தயம் சேர்த்து 4 மணி நேரமும் உளுந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.  கிரைண்டரில் தேங்காய், சாதம் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். அரிசியை சேர்த்து ஆட்டி ரவைபோல் வந்ததும் தனியே எடுத்துவைக்கவும். உளுந்தை மைபோல் அரைத்து எடுக்கவும். அனைத்தையும் உப்பு மற்றும் சோடா உப்பு கலந்து 8 மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தோசைமாவைவிட நீர்த்திருக்கும் பதத்தில் இருக்க தேவைக்கு தகுந்தது போல் தேங்காய் நீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து துணிகொண்டு எண்ணெய் தடவி நன்கு சூடானதும் 1 1/2 குழிகரண்டி மாவு விடவும்
 
 இரு கைப்பிடிகளையும் பிடித்து எல்லா இடங்களிலும் பரவிவிடவும்
 ஓரங்களில் லேசாக மாவு பட்டால் போதும். மீதம் மாவு நடுவில் வந்து நிற்கும்.

வேகும் வரை மூடிவைக்கவும். ஓரங்கள் நன்கு சிவந்ததும் லேசாக கரண்டி கொண்டு ஓரங்களில் எடுத்துவிட்டு பின்னர்  தட்டில் எடுத்துவைக்கவும்.
ஆப்பம் தயார். தேங்காய் சட்னி, தாளிச்சா, சாம்பார், ஆகியவை நல்ல காம்பினேஷன்.










டிப்ஸ்
ஆப்பம் வார்த்த பின் எண்ணெய் விடவேண்டாம். ஆங்காங்கே திட்டுதிட்டாக நிற்கும்.

முதல் நாள் மதியம் ஊறவைத்து சாயங்காலம் கிரண்டரில் ஆட்டினால் அடுத்த நாள் காலையில் டிபனுக்கு உபயோகிக்கலாம்:-)

ஆப்பம் சுடப்போகும் போது தேங்காய் நீர் சேர்க்கவும்.

தண்ணீருக்கு பதில் தேங்காய் நீர் சேர்த்து கரைத்தால் சுவை அதிகமாகும். உடைக்கும் தேங்காயின் நீரை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் இதுபோல் உபயோகித்துக்கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS