Powered by Blogger.
RSS

மாசி தொக்கு

தேவையான பொருட்கள்:

  • மாசித்தூள் - 3 டீஸ்பூன்

  • பெரிய  வெங்காயம் - 100 கிராம்

  • பழுத்த தக்காளி - 100 கிராம்

  • பச்சை மிளகாய் - 1

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • எண்ணெய் -ஒரு குழிகரண்டி

  • கடுகு,உளுந்து - தலா அரைடீஸ்பூன்

  • கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது

  • உப்பு - தேவைக்கு




மாசி கருவாட்டு துண்டை அம்மியில் பொடித்துக் கொள்ளவும்.






வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் பச்சைமிளகாயும் நறுக்கிக்கொள்ளவும்.




கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து சேர்த்து வெடிக்கவிடவும்.




பின்னர் கறிவேப்பிலை பச்சைமிளயா சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.




வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.


பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர்  சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் இறக்கவும்.



சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட் டிஸ்









ஆசியா ஒமர் அவர்களின் மாசிபிரட்டல் குறிப்பை பார்த்து செய்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஓட்ஸ் ரவா தோசை oats dhosa

  • ஓட்ஸ் - ஒரு கப்  
  • அரிசி மாவு– ¼ கப் 
  • ரவை– ¼ கப்
  • தயிர்- ஒரு கப்
  • உப்பு-தேவைக்கு





ஓட்ஸ் மற்றும் ரவையை இரண்டு கப்பு தண்ணீர் மற்றும் தயிருடன் சேர்த்து   குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் வரை
ஊற வைக்கவும்.




ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை  தேவையான அளவு உப்பு சேர்த்து  மிக்ஸ்சியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும்.







அத்துடன் அரிசி மாவு சிறுக சிறுக சேர்த்து கலக்கவும்.




தோசை மாவு பதத்திற்கு கலக்கி விட்டு  அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின் தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊற்றி நடுவில் கொண்டு வர வேண்டும். மாவும் தண்ணீர் போல் இருப்பதால்  தானாக நடுவில் வந்து கூடிவிடும். எண்ணெய் விட்டு வார்த்து திருப்பி போட்டு எடுக்கவும்.




மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி
. இதில் வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து கலந்தும் அடை போல் செய்து சாப்பிடலாம்.




இக்குறிப்பை எனக்கு  கற்றுதந்த யாஸ்மின்க்கு என் மனமார்ந்த நன்றி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கறிவேப்பிலை சாதம்

தேவைப்படும் பொருட்கள்
சாதம்- 2 கப்
நெய்-2 ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- கால் கப்
வெங்காயம்-1
பூடு- 10 பல்
வரமிளகாய்-4
உளுந்து- 4 ஸ்பூன்
கடலைபருப்பு-4 ஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
முந்திரி- 10
கடுகு- அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு




கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.



அதே நெய்யில் பூடு, வரமிளகாய், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.





ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.





கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்.




நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.



பின் சாதத்தை கொட்டி வதக்கவும். பின்னர் பொடியை தூவி ஒரு சேர கிளறவும். இறக்கும் போது முந்திரி சேர்க்கவும்.





எளிமையாக செய்து முடிக்க கூடிய கறிவேப்பிலை சாதம் தயார்.




பின் குறிப்பு:

எளிமையாக செய்து முடிக்கலாம். பொடியை அதிகமாக செய்து வைத்து ப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால் அவ்வபோது உடனடியாக செய்து விடலாம்

தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். படத்தில் காட்டியிருப்பது மாசி தொககு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலிப்ளவர் பிரியாணி


தேவைப்படும் பொருட்கள்

பாஸ்மதி - அரைகிலோ
நெய்- 3 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி- முறையே 1,2,3,2
தயிர்- 100 கிராம்
தக்காளி விழுது-200 கிராம்
வெங்காயம்-  2
கொத்தமல்லி- அரை கப்
புதினா- அரை கப்
உப்பு- தேவைக்கு
பிரியாணி தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பச்சைமிளகாய் -2

காலிப்ளவர் பொரிக்க:
காலிப்ளவர்- நார்மலான சைஸில் ஒன்று
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
அஜினோ மோட்டோ- கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுந்து - 2 ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 100 கிராம்



பாஸ்மதியை  தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பாதி வேக்காட்டிலேயே வடித்துவிடவும்.



எண்ணெய் தவிர காலிப்ளவர்க்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து  கலந்துக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.




எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.




கடாயில் நெய் விட்டு வாசனை பொருட்கள் சேர்த்து பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




பின்னர் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.



அதில் பிரியாணி தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




தக்காளி விழுந்தையும் தயிரையும் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிய வதக்கவும்.




கொத்தமல்லி, புதினா சேர்த்து பாதியாக  வதங்கும் வரை வதக்கவும்.




பொரித்த பூக்களை சேர்த்து 1 நிமிடம் மட்டும் வைத்திருந்து பின் இறக்கவும்.




சாதத்தில் கொட்டி மூடியிட்டு லேசாக குலுக்கி விட்டு  10 நிமிடங்கள் தம்மில் போடவும்.




பிரியாணி தயார். ரைத்தா உடன் பரிமாறவும். அசைவ கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிரியாணி பிரட் ஆம்லெட்

பிரட் - 4 துண்டு

முட்டை-2

வெங்காயம்- 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

உப்பு-தேவைக்கு

பிரியாணி தூள்- ஒரு ஸ்பூன்

வெண்ணெய்- தேவைக்கு

வெங்காயம், புதினா, கொத்தமல்லி, மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.


பொடி மற்றும் உப்பு சேர்த்து முட்டை உடைத்தூற்றி நுரை பொங்க கலக்கவும்.

தோசை கல்லில் வெண்ணெய் விட்டு முட்டை கலவையை ஊற்றி வார்க்கவும்.


தனியாக தோசைக்கல்லில் பிரட்டை வெண்ணெய் தடவி லேசாக சுட வைத்து எடுக்கவும்.


முட்டை கலவை பாதியாக வெந்ததும் அதில் பிரட்டை வைக்கவும்.

பின்னர் முட்டையை திருப்பி போட்டு மறு பக்கம் வேக வைக்கவும்.

பிரியாணி பிரட் ஆம்லேட் தயார்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோபி ரைஸ்


தேவையான பொருட்கள்

சாதம்- ஒரு கப்
காலிப்ளவர் - சின்ன பூவாக ஒன்று
வெங்காயம்-1
தக்காளி-2
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
பிரியாணி தூள்- ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நெய்- 3 டீஸ்பூன்

செய்முறை

சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும்.

பூவை சிறிய பூக்களாக பிரித்து கொதிநீரில் 3 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நீர் வடித்து எடுக்கவும்.தண்டு இல்லாமல் வெறும் சிறு சிறு பூக்கள் மட்டும் இருக்கும் படி நறுக்கிக்கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் தாளிக்கவும்.

அதன் பின்னர் பொடியதாக நறுக்கிய தக்காளியை  வதக்கவும்.

அதன் பின் பூக்களை சேர்த்து வதக்கி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பிரியாணி தூள் சேர்த்து வதக்கவும்.

2 குழி கரண்டி நீர் விட்டு வேகும் வரை மூடி வைக்கவும்.

நன்கு வதங்கி நீர் முழுவதும் வற்ற வைத்த பின் சாதத்தை கொட்டி கிளறவும்.

கோபி ரைஸ் தயார். ரைத்தா உடன் பரிமாறவும்.

(ஸ்கூல் போகும் பசங்களுக்கு இது போல் மிக எளிதாக செய்து கொடுக்கலாம்:-)




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழைப்பூ பீட்ரூட் வடை


 கடலைபருப்பு- 100 கிராம்
வாழைப்பூ-100 கிராம்
பீட்ரூட்- 50 கிராம்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி- ஒரு கொத்து
இஞ்சி- சிறியதுண்டு
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை
பச்சைமிளகாய்- 4
கடலைபருப்பை ஒரு மணி நேரம் ஊற விடவும். உரலில் அல்லது மிக்ஸியில் நீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். கடைசி சுற்றில் இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்கவும்.
வாழைப்பூவின் உள்ளே இருக்கும் நரம்பு போன்ற  காம்பினை நீக்கிவிடவும்.
பொடியாக நறுக்கிக்கொள்ளவும். துவர்ப்பு தன்மை பிடிக்காதவர்கள் மோரில் அரைமணி நேரம் ஊறவிடலாம்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைபருப்பு, நறுக்கிய பூ, துருவிய பீட்ரூட், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசையவும்.
கையிலோ அல்லது வாழை இலையிலையிலோ/ ப்ளாஸ்டிக் கவரிலோ லேசாக எண்ணெய் தடவி சிறு உருண்டை எடுத்து லேசாக அழுத்தவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கி தட்டிய மாவினை விட்டு இருபக்கமும் சிவக்க பொரித்தெடுக்கவும்.
சட்னி உடன் சேர்த்து பரிமாறுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS