Powered by Blogger.
RSS

கைமா நூடுல்ஸ்






தேவைப்படும் பொருட்கள்
மேகி- 1  பாக்கெட்
கைமா- 50 கிராம்
வெங்காயம் - 2
கேரட்,பீன்ஸ்,பட்டாணி, முட்டைகோஸ்- எல்லாம் சேர்ந்து ஒரு கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- 5 இலை
பச்சை மிளகாய் -1
பெப்பர் - கால் ஸ்பூன்
முட்டை- 1
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- தாளிக்க

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  • அதன்பின் இஞ்சிபூண்டு சேர்த்து , பச்சைவாசனை போனதும் கைமா சேர்த்து நன்கு வதக்கவும்
  • மேகியில் கொடுத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  • இப்போது காய்கறிகளையும்  சேர்த்து வதக்கவும். அரைபாகம் வெந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  • நீர் நன்கு கொதித்ததும் மேகியை உடைத்து நன்கு கிளறிவிட்டு மூடிவிடவும்...
  • சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் குழையாமல் பார்த்துக்கொள்ளவும். நீர் முழுக்க வற்றியதும்  இறக்கிவிடவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி முட்டை மற்றும் மிளகுதூள் சேர்த்து பொடிமாஸ் மாதிரி செய்து  மேகி கலவையில் சேர்த்து பிரட்டவும்.
  • இப்போது பரிமாறவும் :-)



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுட்ட கத்தரிக்காய் சம்பல் (பேச்சுலர்ஸ் சமையல்)





தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்-1
தக்காளி-2
வெங்காயம்-3
பச்சைமிளகாய்-1
கேரட், வெள்ளரிக்காய்- விரும்பினால்
உப்பு-தேவைக்கு






நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்)




ஆறியதும் தோல் நீக்கி பிசைந்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும்.




பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
சுட்டகத்திரிக்காய் சம்பல் தயார்.
இதிலேயே நிறைய வகை உள்ளன. கருவாட்டை சுட்டு முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல் :-) கத்தரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல் :-)  கத்தரிக்காயும்  தக்காளியும் சுட அலுப்பா இருக்கா??? புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்.... வெங்காய சம்பல் தயார் :-))) உடனடி சைட் டிஷ் ரெடி...



இதனை ஜலீலா அக்க நடத்தும் பேச்சுலர்ஸ் ஈவெண்டுக்க அனுப்புகிறேன் Bachelors feast :-)

இத்துடன் ரவா தோசை குறிப்பையும் அனுப்புகிறேன் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோழிக்குழம்பு

ஊற வைக்க
சிக்கன் -அரைகிலோ
குழம்புத்தூள்- 3 ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
கொத்தமல்லி, புதினா- சிறிதளவு
பட்டை, ஏலக்காய், இலவங்கம்- 1:2:3
தேங்காய் விழுது-4 ஸ்பூன்
தக்காளி-2
சின்ன வெங்காய விழுது-3 ஸ்பூன்
உப்பு- சிறிதளவு

தாளிக்க:
கறிவேப்பிலை-5 இதழ்
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி





தேங்காய் விழுது தவிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும் .






பின்னர் தேங்காய் விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.




கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.



பச்சை வாசனை போனதும் ஊற வைத்த கலவையை சேர்த்து கிளறி விட்டு பின்னர் மூடிவிடவும்.




நீர் விடத்தேவையில்லை.. எண்ணெய் வெளியேறும் பக்குவத்தில் இறக்கிவிடவும்.




கோழிக்குழம்பு தயார். புலாவ் வகைகளுக்கு அருமையாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மிளகுக்கறி (பேச்சுலர்ஸ் சமையல்)

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி- அரைகிலோ
தேங்காய்-  கால்மூடி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை- சிறிதளவு
இஞ்சிபூண்டு-3 ஸ்பூன்
தக்காளி- 3
மிளகுதூள்- 1 1/2  ஸ்பூன்
வரமிளகாய்- 3




குக்கரில் எண்ணெய் 2 குழிகரண்டி விட்டு, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.



பச்சை வாசனை போனதும் தக்காளி மற்றும் பொடியாய் நறுக்கிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.




தக்காளி குழைந்ததும்  சுத்தம் செய்த கறி மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விட்டு வேகவிடவும்.




கறி நன்கு வெந்து இறக்க போகும் 5 நிமிடத்திற்கு முன் மிளகுதூள் தூவி நன்கு பிரட்டி நீர் வற்றும் வரை கிளறவும்.




அவ்வளவுதான்... சுவையான... எளிமையான தேங்காய் மிளகுக்கறி தயார் :-)
இதனை ஜலீலா அக்க நடத்தும் பேச்சுலர்ஸ் ஈவெண்டுக்க அனுப்புகிறேன் Bachelors feast :-)

இத்துடன் ரவா தோசை குறிப்பையும் அனுப்புகிறேன் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இறால் மசாலா

தேவையான பொருட்கள்:
இறால் -அரைகிலோ
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ்- 2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

வறுத்து அரைக்க:
தனியா- ஒரு கைப்பிடி
வரமிளகாய்-4
பட்டை, ஏலக்காய்,கிராம்பு- 1:2:3
தேங்காய் கால் மூடி

தனியாக அரைக்க
தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
முந்திரி-10

தாளிக்க:
வெங்காயம்-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-3
இஞ்சிபூண்டு விழுது- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
தக்காளி-3
புட் கலர்- சிறிதளவு



 இறால்லை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.



வறுக்க கொடுத்த பொருட்களை தேங்காய் தவிர்த்து மற்றவற்றை வறுத்து, பின் தேங்காய் சேர்த்து நீர் விட்டு மைய்யாக அரைத்துக்கொள்ளவும்.




இறால்லில் அரைத்த விழுதையும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.




கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கவும்.




இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.




அத்துடன் மிளகாய் தூள், புட்கலர், உப்பு, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




இப்போது ஊறிய இறால்லை சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.




பாதி வெந்ததும்  தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து மீண்டும் மூடிவிட்டு இறக்கிவிடவும்.





சுவையான இறால் மசாலா தயார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

தேவைப்படும் பொருட்கள் :
கத்திரிக்காய்- பத்து
தக்காளி-2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
பூடு-பத்து
தேங்காய்- கால் மூடி
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- நான்கு குழிகரண்டி

வறுக்க :
பட்டை- சிறு துண்டு
மிளகு-10
சீரகம்- கால் ஸ்பூன்
மல்லி-2 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கைப்பிடி


தாளிக்க
கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
பூடு
கறிவேப்பிலை
வெங்காயம்

கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.


நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

.

கத்திரிக்காயின் மேல் பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை கீறிகொள்ளவும். காம்பை நீக்க வேண்டாம்.  மசாலா கலவையை கத்திரிக்காயில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.





கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காம் நன்கு நிறம் மாறியதும் கத்திரிக்காய் கலவையை சேர்க்கவும். அத்துடன் தக்காளி மற்றும் புளியை சேர்த்து மூடி வைக்கவும். சிறுதீயில் வைத்து 5 நிமிடத்திற்கொருமுறை அடிபிடிக்காதவண்ணம் கிளறவும்.
மசாலாவில் நீர் வற்றி,  கத்திரிக்காய் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இறக்கிவிடவும். எல்லா வகை குழம்புகளுடனும், சப்பாத்தி,பூரி மற்றும் புலாவ் வகைகளுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
எண்ணெய் கத்திரிக்காய் என்பதை தான் ஆந்திராவில் நூனே ஓங்காய் (நூனொங்காய்) என சொல்வார்கள்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)

மாமியும் (கணவரின் அம்மா) இப்பலாம் வித்தியாசமா சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஸ்கூல் போக கூடிய தன் பேரபிள்ளைகளுக்கு கொடுத்துவிட நித்தமும் வெரைட்டியாக சமைக்கிறாங்க. சென்னை போயிருக்கும் போது அவர் செய்த சமையலை போட்டோ எடுத்தேன்!  செம டேஸ்ட்டா இருந்துச்சு... உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்....
முட்டை-10
கொத்தமல்லி,புதினா, கறிவேப்பிலை- சிறிதளவு
சின்ன வெங்காயம்-20
தக்காளி-3
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
கடுகு.உளுந்து- சிறிதளவு
உப்பு-தேவைக்கு





முட்டைகளை அவித்து மேல்பகுதியில் கால்பகுதியளவுக்கு மட்டும் கீறிவைக்கவும். இது மசாலா உள்ளே சேர வைக்கும்.


சின்னவெங்காயம் அரைத்துவைக்கவும். இஞ்சிபூண்டு தனியாக அரைத்து வைக்கவும். தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தமல்லிபுதினா ஆய்ந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளித்து பின்னர் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பின் வெங்காய விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும்.




பச்சைவாசனை போனதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.




தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




அவித்த முட்டைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை  அடுப்பில் வைத்திருக்கவும்.



விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடலாம். 5 நிமிடங்கள் கழித்து மசாலா ஒரு சேர வந்ததும் இறக்கி பரிமாறவும்.




அவிச்சமுட்டை கிரேவி தயார்.
சாதத்தில் பிரட்டி சாப்பிடவும், சாம்பார்,ரசம், புளிகுழம்பு வகைகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS