Powered by Blogger.
RSS

பீர்க்கங்காய் காராமணி குழம்பு

தேவைப்படும் பொருட்கள்
பீர்க்கங்காய்- ஒரு கப்
காராமணி(தட்டைபயறு/ருதியா/அல்சந்தர்;-)-50 கிராம்
புளி- நெல்லிக்காய் அளவு
புளிகுழம்பு தூள்- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
பச்சைமிளகாய்-3
கறிவேப்பிலை-ஒருகொத்து
பூடு- 20 பல்
உப்பு-தேவைக்கு
கடுகு,உளுந்து- ஒரு ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2







காராமணியை 6 மணிநேரம் ஊறவிடவும்






குக்கரில் உப்பு சேர்த்து முக்கால் பாகம்  அளவுக்கு வேகவைத்து வைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளிக்கவும்.பின்னர் பூடு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




 நறுக்கிவைத்த பீர்க்கங்காய் துண்டு, தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.



பீர்க்கங்காய் பாதியளவு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்க்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.




தக்காளி குழைந்ததும்  புளிகுழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.



பின்னர் ஊற வைத்த புளியில்  தேவைக்கு ஏற்ப நீர் சேர்த்து  கரைத்துக்கொள்ளவும். அதை மசாலாவில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.




காராமணியை  வேக வைத்த நீருடனே சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் இறக்கவும்.



சுவையான பீர்க்கங்காய் காராமணி குழம்பு தயார். ஆம்லேட், பொரியல்,கீரையுடன் அருமையாக இருக்கும்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 comments:

Asiya Omar said...

ஆஹா,அருமை.

நாகா ராம் said...

ஆஹா இவ்ளோ அருமையா சமைக்கிறீங்களே எப்படி?? :( எனக்கும் சொல்லிதாங்க

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஆமினா,
ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆஆஆ.... ஓஓஓஓஓஓஓ.....ஊஊஊஊஊ.....
மிளகாய்த்தூள்... ஜாஸ்தி சகோ.
இந்த சட்டிக்கு இந்த அளவு சேர்த்தா...
....ம்ம்ம்ம்ஹூம்...நல்லதில்லை..!
மற்றபடி காம்பினேஷன் சூப்பர்.

ஆமினா said...

மிக்க நன்றி ஆசியா

ஆமினா said...

@நாகா

ஆஹா... நானே தினமும் 5 குறிப்ப்புகள் கொடுத்து அசத்தும் நாகாவிடம் டியூசன் போகலாம்னு இருக்கேன் :-)

ஆமினா said...

@சகோ ஆஷிக்

வ அலைக்கும் சலாம் வரஹ்....

மல்லிதூள்க்கு பதிலா மிளகாய் தூள் 4 ஸ்பூன் போட்டுட்டீங்களா :-)

காஷ்மிரி மிளகாய் தூள் 1 ஸ்பூன் என்பதே கம்மி தான் சகோ :-) நாங்களாம் ஆந்திராக்காரங்களாக்கும் :-)

வருகைக்கு மிக்க நன்றி சகோ

Jaleela Kamal said...

பீர்க்கங்காயில் கடலை பருப்பு போட்டு தான் செய்வேன்,.
காராமணி காயுடன் பொரியல் + புளிகுழம்பு , இனிப்பு மற்றும் கார சுண்டல்.

இதுவும் வித்தியாசமாக இருக்கு ஆமினா.

ஆமினா said...

@ஜலீலாக்கா.

காராமணி வடை செய்ய ஊற வைத்தேன். சோம்பேறிதனத்தால அப்படியே குழம்புல போட்டுட்டேன் :-) பீர்க்கங்காயும் அப்படி தான் :-)

மிக்க நன்றி அக்கா

குறையொன்றுமில்லை. said...

ஆமி செய்தே பார்த்தாச்சு. நல்லா இர்ந்தது.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான குறிப்பு.. செஞ்சுட்டு சொல்றேன் :-)

Ayushabegum said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

தட்டப்பயறு(காராமணி) குழம்பு தெரியும்.ஆனால் இதில் பீர்க்கங்காய் போட்டு பழக்கம் இல்லை.ஆனால் கருவாடு போடுவோம்.உங்கள் செய்முறை அருமை....:-)

ராஜி said...

செய்து சாப்பிட்டு பார்த்தாச்சு அருமையான ருசி. பகிர்வுக்கு நன்றி

Post a Comment