Powered by Blogger.
RSS
Showing posts with label அவசர சமையல். Show all posts
Showing posts with label அவசர சமையல். Show all posts

கறிவேப்பிலை சாதம்

தேவைப்படும் பொருட்கள்
சாதம்- 2 கப்
நெய்-2 ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- கால் கப்
வெங்காயம்-1
பூடு- 10 பல்
வரமிளகாய்-4
உளுந்து- 4 ஸ்பூன்
கடலைபருப்பு-4 ஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
முந்திரி- 10
கடுகு- அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு




கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.



அதே நெய்யில் பூடு, வரமிளகாய், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.





ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.





கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்.




நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.



பின் சாதத்தை கொட்டி வதக்கவும். பின்னர் பொடியை தூவி ஒரு சேர கிளறவும். இறக்கும் போது முந்திரி சேர்க்கவும்.





எளிமையாக செய்து முடிக்க கூடிய கறிவேப்பிலை சாதம் தயார்.




பின் குறிப்பு:

எளிமையாக செய்து முடிக்கலாம். பொடியை அதிகமாக செய்து வைத்து ப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால் அவ்வபோது உடனடியாக செய்து விடலாம்

தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். படத்தில் காட்டியிருப்பது மாசி தொககு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

டொமெட்டோ நூடுல்ஸ்/ tomato noodles


தேவைப்படும் பொருட்கள்
சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்
தக்காளி-4
வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை- ஒருகொத்து
டொமெட்டோ சாஸ்-ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- 2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தாளிக்க தகுந்தபடி



வெங்காயம்,தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.


ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.


நன்கு கொதித்ததும் அணைத்துவிட்டு நூடுல்ஸை சேர்த்து மூடிவிடவும்.


2 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி நீரை முழுவதுமாக வடிக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.


பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும்  வரை வதக்கிய பின் தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்கவும்


கலவையை ஓரங்களில் ஒதுக்கி நடுவில் முட்டையை  உடைத்தூற்றி கிளறவும். பின் மொத்தமாக எல்லா கலவையும் ஒரு சேர கிளறவும்.


தக்காளி சாஸ், சோயா சாஸ் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.


கலவையில் எண்ணெய் பிரிந்து வந்ததும் நூடுல்ஸை சேர்க்கவும்.


உடையாமல் மசாலா கலவை நூடுல்ஸில் சேரும்படி கிளறவும்.


டொமெட்டோ நூடுல்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.






குறிப்புகள்
  • கரண்டிக்கு பதில் இடுக்கி உபயோகப்படுத்தலாம். இதனால் உடையாமல் இருக்கும். அனுபவம் இருந்தால் குலுக்கி விட்டு மசாலா ஒருசேர ஆகும்படி செய்யலாம்.
  • மேலே சொன்ன பக்குவப்படி நூடுல்ஸ் வேகவைத்து எடுத்தால் உதிரியாகவும், குழையாமலும் வரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொத்து புரோட்டா

தேவையான பொருட்கள்
புரோட்டா-2
முட்டை-1
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
உப்பு-தேவைக்கு
என்ணெய்-4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா- 1 1/2 குழிகரண்டி
பூடு-8 பல்
கறிவேப்பிலை- ஒரு கொத்து






புரோட்டாவை கையால் பிய்த்துக்கொள்ளவும்.




வெங்காயம், தக்காளி, பூடு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,





கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூடு சேர்த்து தாளிக்கவும்.




பூடு நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் முட்டை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.





அதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும்.தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.





சால்னா ஒருசேர சுருண்டதும் புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி பிரட்டவும்.




கொத்து புரோட்டா தயார். 
(கடைகளில் கொத்துவது போல் தோசைகரண்டி மூலமும் கொத்தலாம். அடுப்பு உடைந்து போனால் பஞ்சாயத்துக்கு வரக்கூடாது :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆனியன் ரைஸ்


செய்முறை விளக்கம் காண அறுசுவை செல்லவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

டொமெட்டோ ரைஸ்



செய்முறை விளக்கம் காண இங்கே கிளிக்கவும்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS