Powered by Blogger.
RSS

புடலங்காய் சாதம்



புடலங்காய் சாதம்

தேவைப்படும் பொருட்கள்:

புடலங்காய் : ஒரு கப்
கறிவேப்பிலை : ஒரு கொத்து

பெருங்காயம் : சிறிதளவு

தாளிக்க

கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)
நிலக்கடலை- ஒரு மேசைகரண்டி
வரமிளகாய்-2

அரைக்க:
தேங்காய்-கால் மூடி
மிளகு-கால் ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
கொத்தமல்லி- 2 கொத்து
பூண்டு- முழுதாக

செய்முறை:

புடலங்காயை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வேகவிட்டு எடுக்கவும்.


அரைக்க கொடுத்த பொருட்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிக்கவும்.


பின் பெருங்காயத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.


பொன்னிறமாக வெங்காயம் மாறியதும் புடலங்காயை சேர்த்து பாதியாக வேகும் வரை மூடிவைக்கவும்.


பின்னர் அரைத்த விழுது,தக்காளி சேர்த்து நன்கு வேகவிடவும்.


நன்கு சுருளும் வரை வதக்கவும்.


பின்னர் சாதத்தை கொட்டி கிளறவும்.


சுவையான புடலங்காய் சாதம் தயார்!

250
4 5


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாசிகோரிங்

தேவைப்படும் பொருட்கள்
சாதம்-2 கப்
முட்டை-3
தக்காளி-3
வெங்காயம்-4
பச்சை மிளகாய்-3
கொத்தமல்லி-கால் கப்
உப்பு-தேவைக்கு
வெள்ளை பூடு- 1


சாத்தை உதிர்த்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.  தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளைபூடு அனைத்தையும் பொடியாய் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், பூடு சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இப்போது முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
முட்டையானது எண்ணெயுடன் சேர்ந்து  நுரை பொங்கி வருவது போல் வரும்.அந்த  நேரத்தில் தக்காளி, கொத்தமல்லி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
பின்னர் சாதத்தை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும்.
டொமெட்டோ சாஸ், சிக்கன்65, பொரித்த மீன் உடன் அருமையான காம்பினேஷனாக இருக்கும்











குறிப்பு: மீதமான சாதத்தில் இவ்வாறு செய்யலாம். சாதம் மட்டும் குழையாமல் இருக்க வேண்டும். இல்லையேல் முட்டையின் வாசம் வரும். டிபன் பாக்ஸில் கொடுத்துவிட எளிமையாக செய்ய கூடியது.


நாசி- சாதம்,ரைஸ்
கோரிங்- பொரித்தல்,பிரைட்
ஆக இதுவும் நாசி கோரிங் தானே  :-))

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெண்டைக்காய் புளிகறி/ வெண்டைக்காய் மண்டி


 தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்- 100 கிராம்
புளி -ஒரு நெல்லிகாய் அளவு (ஊற வைத்தது)
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
பூடு-முழுதாக ஒன்று
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கடுகு, ஊளுந்து,கடலைபருப்பு-1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
சாம்பார் பொடி-2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- ஒரு குழி கரண்டி
 வெண்டைக்காயை  சுத்தம் செய்து நீரை துடைத்து விட்டு 2 இன்ச் அளவுக்கு வெட்டவும். அதை  வாணலியில் சிறிது  எண்ணெய் விட்டு 5 நிமிடம் வதக்கவும். இதன் மூலம் பிசிபிசிப்பு தன்மை ஓரளவுக்கு நீங்கும் :-)
 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, கடலைபருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்து முடித்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உரித்த பூடுகள் சேர்த்து வதக்கவும்
 பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். குழைந்ததும் வதக்கிய வெண்டிக்காயை சேர்க்கவும்.
 அதன் பின்னர் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்
 மசாலா ஒன்றோடொன்று சேர்ந்ததும் புளி கரைசலை சேர்த்து வேகவிடவும்.
 மசாலா நீர் பாதியாக வற்றி சுருண்டதும் இறக்கிவிடவும்.

வெண்டைக்காய் புளிக்கறி (வெண்டைக்காய் மண்டி) தயார். வெரைட்டி ரைஸ், சாம்பார் சாதம் உடன் அருமையாக இருக்கும். மிக முக்கியமாக பழைய கஞ்சிக்கு சூப்பர் காம்பினேஷன். சுண்ட வச்ச குழம்பு இல்லையென்று நினைப்பவர்களுக்கு உடனடியாக இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் :-) 

குறிப்பு- புளியை நீரில் ஊற வைப்பதற்கு பதில் அரிசி கலைந்த நீரில் ஊற வைத்து உபயோகித்தால் இன்னும் சுவை கூடும். வீட்டுல மண்சட்டி இருந்தா மிஸ் பண்ணாதீங்க. அதுல செஞ்சா இன்னும் கிராமிய மணமும், மண் வாசனையும்  சேர்ந்து  கூடுதலா 2 கோப்பை கஞ்சி உள்ளே போகும் :-))

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நண்டு மசாலா

நண்டு - 1 கிலோ
தேங்காய் பால்- ஒரு கப் 
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மிளகுதூள்-  அரை ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
பிரிஞ்சி-1


நண்டை மேல் ஓடு நீக்கி இரண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி மட்டும் வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கவும்.

 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை,ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி சேர்க்கவும். பட்டை முறிந்து வந்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் வெங்காயம்,உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின்னர்  மிளகாய் தூள்  சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் வாசம் (நெடி) போனதும் தக்காளியை பிசைந்து/நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்

 எண்ணெய் பிரிந்து ஓரத்தில் வரும் ஸ்டேஜில் நண்டை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். மசாலா அனைத்திலும் ஒட்டியவுடன் தேங்காய் பாலை சேர்த்து வேகவிடவும்.

 15 நிமிடங்கள் லோ ப்ளேமில் வேக வைத்த பின் மிளகுதூளை சேர்த்து 5 நிமிடம்  ஹை ப்ளேமில் நீர் வற்ற  கிளறி பின்னர் இறக்கவும்.
 சுவையான நண்டு மசாலா தயார். கிரேவியின் அளவு  அவரவர் விருப்பத்திற்கு தகுந்தது போல் மாற்றிக்கொள்ளலாம். அதிகமாக வற்ற விடாமல் குழம்பாகவும் உபயோகிக்கலாம். சாம்பார், ரசம் உடனும் வெறும் மசாலவை சாதத்தில் பினைந்தும் சாப்பிடலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள், 1 வருடம் பூர்த்தியாகாத குழந்தைகளை தவிர மற்ற அனைவரும் சாப்பிட கூடியது.  சளி வந்தா ஒடனே நண்ட வாங்கி சாப்பிடுங்க....... டாக்டர்க்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சம் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இறால் 65


இறால்- அரை கிலோ
 இஞ்சி- 3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் (காரத்திற்கேற்ப குறைக்கலாம்)
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
ஆரஞ்ச் கலர்- ஒரு பின்ச் (காஷ்மிரி மிளகாய் தூள் என்றால் தேவைப்படாது)
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- பொரிக்க தகுந்த அளவு


இறாலை சுத்தம் செய்து வைக்கவும். அதில் எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களை சேர்த்து கலந்து வைக்கவும்

இந்த கலவை அரை மணி நேரம் ஊற வேண்டும் (விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து ஊற வைக்கலாம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் இறாலை மொத்தமாக  சேர்க்கவும்.  10 நிமிடம் சிறு தீயில்  மூடியிட்டு வேக விடவும். பின் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.

சிம்பிள் இறால் 65 தயார்.  சாம்பார், ரசம், வெரைட்டி ரைஸ் உடன்  நல்ல காம்பினேன்
                                         __________________________________________ 
குறிப்பு
  • இறாலை முதலில் எண்ணெயில் போட்டதும் ரப்பர் போல் இறைச்சி மாறிவிடும்.
  • அடுத்த சில நிமிடங்களில் மெருதுவாய் இருக்கு. இந்த ஸ்டேஜில் தான் எண்ணெயில் இருந்து எடுக்க வேண்டும்
  • மெருதுவாய் ஆன பிறகு இன்னும் வேகட்டும் என விட்டு வைத்தால் பழையபடி ரப்பர் ஸ்டேஜ்ஜுக்கு போய்டும் :-)
  • இறால் செய்யும் போது இது மட்டும் தான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பெரிய இறாலை விட பொடி இறாலில் சுவை அதிகமாக இருக்கும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெப்பர் சிக்கன்

தேவைப்படும் பொருட்கள்

    * சிக்கன் -1 கிலோ
    * மிளகு- 2 ஸ்பூன்
    * வரமிளகாய்- 6
    * உப்பு-தேவைக்கு
    * வெங்காயம்-3
    * தக்காளி-4
    * கறிவேப்பிலை- ஒரு கொத்து
    * இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
    * எண்ணெய்- 2 குழி கரண்டி

செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து நீரை முழுவதுமாக வடித்து வைக்கவும்.

பட்டை,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்யவும்.மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

சிக்கனில் மிளகு தூள்,உப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து பின்னர்  15 நிமிடம் ஊற வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடித்த வாசனை தூளை சேர்த்து வதக்கவும்.
பின் ஊற வைத்த கோழியை சேர்த்து கிளறவும். நீர் சேர்க்க தேவையில்லை. கறி விடக்கூடிய  நேரே போதுமானது.
கோழி வேகும் வரை மிதமான தீயில் வைத்து முக்கால் பாகம் வெந்ததும்  ஹை ப்ளேமில் சுருள சுருள கிளறவும்.வெறும் தக்காளி மற்றும் மிளகுதூள் கொடுக்கும் கலரே இதற்கு போதுமானது. (மஞ்சள் தூளோ, மிளகாய் தூளோ சேர்க்க வேண்டாம்.
பெப்பர் சிக்கன் தயார். தேங்காய் சாதம், பிரியாணி போன்றவற்றுடனும் ரசம், சாம்பார் போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். செமி கிரேவி பதத்தில் இருக்க வேண்டும்.


***************************

சாதிகா அக்காவுக்காக அவசரம் அவரசமாய் இந்த பதிவு.  போன பதிவில் பலருக்கும் படம் தெரியவில்லை. என்ன காரணம்னு தெரியல (என்ன காரணம்னு கூகுள்க்கே தெரியலையாம், நம்மலாம் எம்மாத்திரம் ஹி..ஹி...ஹி...). இன்னும் சிலருக்கு ஒரே போட்டோ இரு முறை வருவதாக சொன்னார்கள். விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என நினைக்கிறேன் (இறைவன் நாடினால்).


இந்த குறிப்பிலும் படங்கள் தெரியவில்லை எனில் தெரியப்படுத்தவும். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் படங்களை தவிர்த்து வெறும்  எழுத்து குறிப்பு மட்டும் கொடுத்து பிரச்சனை சரியானதும் மீள் பதிவிடலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS