Powered by Blogger.
RSS
Showing posts with label மாலை நேர உணவுகள். Show all posts
Showing posts with label மாலை நேர உணவுகள். Show all posts

வாழைப்பூ பீட்ரூட் வடை


 கடலைபருப்பு- 100 கிராம்
வாழைப்பூ-100 கிராம்
பீட்ரூட்- 50 கிராம்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி- ஒரு கொத்து
இஞ்சி- சிறியதுண்டு
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை
பச்சைமிளகாய்- 4
கடலைபருப்பை ஒரு மணி நேரம் ஊற விடவும். உரலில் அல்லது மிக்ஸியில் நீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். கடைசி சுற்றில் இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்கவும்.
வாழைப்பூவின் உள்ளே இருக்கும் நரம்பு போன்ற  காம்பினை நீக்கிவிடவும்.
பொடியாக நறுக்கிக்கொள்ளவும். துவர்ப்பு தன்மை பிடிக்காதவர்கள் மோரில் அரைமணி நேரம் ஊறவிடலாம்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைபருப்பு, நறுக்கிய பூ, துருவிய பீட்ரூட், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசையவும்.
கையிலோ அல்லது வாழை இலையிலையிலோ/ ப்ளாஸ்டிக் கவரிலோ லேசாக எண்ணெய் தடவி சிறு உருண்டை எடுத்து லேசாக அழுத்தவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கி தட்டிய மாவினை விட்டு இருபக்கமும் சிவக்க பொரித்தெடுக்கவும்.
சட்னி உடன் சேர்த்து பரிமாறுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பலாபழ போண்டா மற்றும் தோசை

தேவையான பொருட்கள்
பலாப்பழம்-15 முதல் 20
மைதா மாவு- 400 கிராம்
சீனி- 200 கிராம் (விருப்பத்திற்கு ஏற்ப)
ஏலக்காய்-3
உப்பு-சிறிதளவு
சோடா உப்பு-ஒரு பின்ச்
எண்ணெய்- பொரிக்க தகுந்தபடி



நன்கு கனிந்த பலாபழங்களை தேர்ந்தெடுத்து கொட்டைகளை நீக்கிவிடவும்.



எண்ணெயினை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.



பழங்களை கைகளாலேயே நன்கு மசித்து  நீர் ஊற்றி மாவினை சற்று கெட்டியாக பினைந்துக்கொள்ளவும்.



6 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு நுரைத்து பொங்கி  வரும். இது தான் சரியான பதம்.



கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போடவும்.



இரு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.  போண்டா தயார்.



தோசைக்கல்லை சுட  வைத்து எண்ணெய் தடவி 2 கரண்டி மாவு விட்டு  தோசையாக வார்க்கவும்.திருப்பி போட்டு வேக விடவும்.



பலாப்பழ தோசையும் தயார்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS