Powered by Blogger.
RSS
Showing posts with label சாத வகைகள். Show all posts
Showing posts with label சாத வகைகள். Show all posts

கறிவேப்பிலை சாதம்

தேவைப்படும் பொருட்கள்
சாதம்- 2 கப்
நெய்-2 ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- கால் கப்
வெங்காயம்-1
பூடு- 10 பல்
வரமிளகாய்-4
உளுந்து- 4 ஸ்பூன்
கடலைபருப்பு-4 ஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
முந்திரி- 10
கடுகு- அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு




கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.



அதே நெய்யில் பூடு, வரமிளகாய், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.





ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.





கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்.




நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.



பின் சாதத்தை கொட்டி வதக்கவும். பின்னர் பொடியை தூவி ஒரு சேர கிளறவும். இறக்கும் போது முந்திரி சேர்க்கவும்.





எளிமையாக செய்து முடிக்க கூடிய கறிவேப்பிலை சாதம் தயார்.




பின் குறிப்பு:

எளிமையாக செய்து முடிக்கலாம். பொடியை அதிகமாக செய்து வைத்து ப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால் அவ்வபோது உடனடியாக செய்து விடலாம்

தொக்கு வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். படத்தில் காட்டியிருப்பது மாசி தொககு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலிப்ளவர் பிரியாணி


தேவைப்படும் பொருட்கள்

பாஸ்மதி - அரைகிலோ
நெய்- 3 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி- முறையே 1,2,3,2
தயிர்- 100 கிராம்
தக்காளி விழுது-200 கிராம்
வெங்காயம்-  2
கொத்தமல்லி- அரை கப்
புதினா- அரை கப்
உப்பு- தேவைக்கு
பிரியாணி தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பச்சைமிளகாய் -2

காலிப்ளவர் பொரிக்க:
காலிப்ளவர்- நார்மலான சைஸில் ஒன்று
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
அஜினோ மோட்டோ- கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுந்து - 2 ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 100 கிராம்



பாஸ்மதியை  தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பாதி வேக்காட்டிலேயே வடித்துவிடவும்.



எண்ணெய் தவிர காலிப்ளவர்க்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து  கலந்துக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.




எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.




கடாயில் நெய் விட்டு வாசனை பொருட்கள் சேர்த்து பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.




பின்னர் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.



அதில் பிரியாணி தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




தக்காளி விழுந்தையும் தயிரையும் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிய வதக்கவும்.




கொத்தமல்லி, புதினா சேர்த்து பாதியாக  வதங்கும் வரை வதக்கவும்.




பொரித்த பூக்களை சேர்த்து 1 நிமிடம் மட்டும் வைத்திருந்து பின் இறக்கவும்.




சாதத்தில் கொட்டி மூடியிட்டு லேசாக குலுக்கி விட்டு  10 நிமிடங்கள் தம்மில் போடவும்.




பிரியாணி தயார். ரைத்தா உடன் பரிமாறவும். அசைவ கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தக்காளி சாதம்

தேவைப்படும் பொருட்கள்:

நாட்டுத் தக்காளி- அரை கிலோ
அரிசி- அரை கிலோ
வெங்காயம்- கால் கிலோ
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- 2 குழிகரண்டி
தண்ணீர்- ஒரு கப் அரிசிக்கு 2 கப் என்ற விகிதத்தில்
தாளிக்க-
கடுகு
உளுந்து
கறிவேப்பிலை
வரமிளகாய்

செய்முறை :

 



பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.





பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து  நிறம் மாறும் வரை வதக்கவும்




மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.





தூள் வாசம் போகும் வரை வதக்கிய பின் பொடியாய் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.நீர் விடாமல் பாதி சுருளும் வரை வதக்கவும்.




எண்ணெய் பிரிந்து  வெளியே வரும் பக்குவத்தில் இருக்கும் போது கழுவிய அரிசியை சேர்க்கவும்.





அரிசியை சேர்த்த பின்  2 நிமிடங்கள் கிளறவும்.




தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.




பாதி நீர் பாதி அரிசி என இருக்கும் இது போன்ற பக்குவத்தில் வரும் வரை  high flameல் வைத்திருக்க வேண்டும்.


அதன் பின் தம்மில் போடவும். தம்மில் போட முன்பே நன்கு சூடாக்கப்பட்ட தோசைக்கல்லில் அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து  மூடியிட்டு அதன் மேல் கனமான பாத்திரத்தில் நீரை நிரப்பி , slow flame  15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.




அவ்வளவுதான்! தக்காளிசாதம் தயார்! 
ஏதேனும் ஒரு பொரியல், அப்பளம், ஊறுகாய் உடன் பரிமாறுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிஸ் ப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப்
பொரித்த மீன் -2 துண்டுகள்
வெங்காயம்-2
முட்டை-1
கேரட்,பீன்ஸ், கோஸ்- ஒரு கப்
பச்சைமிளகாய்-1
பூடு-7 பல்

ப்ரைட் ரைஸ் பொடி-1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
டொமெட்டோ சாஸ்- ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 5 ஸ்பூன்




மீன் முள்ளை நீக்கி உதிர்த்துவைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பூடு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.



உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.



பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.


காய்கறி பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.



சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.



கலவை நன்கு சுருண்டதும் சாதத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.



பிஸ் ப்ரைட் ரைஸ் தயார் :-)





குறிப்பு :
                இவை அனைத்தும் ஹை ப்ளேமில்  வைத்தே செய்ய வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காஜர் ரைஸ்



செய்முறை விளக்கப்படத்துடன் காண  இங்கே கிளிக்கவும்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிக்கன் லேயர் பிரியாணி




தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அல்லது சீரகசம்பா- அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது-4 ஸ்பூன்
சிக்கன் - அரைகிலோ
வெங்காயம்-3
தக்காளி-5
பச்சை மிளகாய்-3
பிரியாணி பொடி-50 கிராம்
தயிர்-ஒரு கப்
கொத்தமல்லி-அரை கப்
புதினா-அரைகப்
உப்பு-தேவைக்கு
எலுமிச்சை சாறு-3
ஆரஞ்ச் கலர்- சிறிதளவு
நெய்- 3 குழிகரண்டி

செய்முறை:-
சிக்கனை சுத்தம் செய்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சைமிளகாயின் காம்பு மட்டும் நீக்கவும். எலுமிச்சை சாறு எடுத்து தயாராக வைக்கவும். புதினா கொத்தமல்லி நறுக்கி வைக்கவும்.
அரிசியை உப்பு சேர்த்து அரைவேக்காடாக வடித்து வைக்கவும். பின் தனியாக ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். இவ்வாறு செய்தால் இன்னும் ஒட்டாமல் உதிரியாக வரும்.
நெய்யில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியதும் கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும். சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு வாசனை போனதும் தக்காளியை சேர்த்து உடைக்காமல் கிளறவும்.
பின்னர் பிரியாணி பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
பின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை மிதமான தீயிலேயே வேகவிடவும். இறைச்சி விடும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் மட்டுமே நீர் சேர்க்கவும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் எலுமிச்சை சாறு கலந்து 2 நிமிடம் கிளறி விட்டும் பின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாதம் சிறிதளவு கொட்டவும். அதற்கு மேல் சிக்கன் கிரேவியை சிறிதளவு சேர்க்கவும். கொத்தமல்லி புதினா தூவவும்.இப்படியாக சாதம் முடியும் வரை அடுக்கடுக்காக செய்யவும்.
கடைசியாக மேலே சாதம் வரும்படி லேயர் உருவாக்கி   சாதத்தின் மேல் ஆரஞ்ச் பொடி கலந்த நீரை ஆங்காங்கே ஊற்றவும். அல்லது வட்ட வடிவில் ஊற்றவும். பின் இதனை 5 நிமிடம் தம்மில் வைக்கவும்.
இறக்கும் போது நன்கு மூடியிட்டு ஒரு முறை மேலே உள்ள சாதம் கீழிறங்கும் படியாக குலுக்கவும். அவ்வளவு தான் லேயர் சிக்கன் பிரியாணி தயார். எள்கத்திரிக்காய் கிரேவி, வெங்காய ரைத்தா உடன் பரிமாறவும்.






கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:-

  • கடைகளில் விற்கும் பிரியாணி பொடி உபயோகிக்கலாம். இல்லையேல் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,etc முதலிய வாசனை பொருட்களை பொடி செய்து அத்துடன் மிளகாய் தூளும் சேர்த்து வதக்க வேண்டும். 
  •  அவ்வாறு வீட்டிலேயே பொடி செய்வதாய் இருந்தால் நேர்பட்டையை உபயோகிக்கவும்.சுருள் பட்டையை விட நேர்பட்டை வாசம் கொடுக்கும். 
  • பட்டையை லேசாக ஓரத்தில் கடித்தால் இனிப்பு சுவையுடன் சட்டென காரத்தன்மை கொடுத்தால் அது தான் தரமான பட்டை வகை. அப்படியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
  • அடிக்கடி கரண்டி உபயோகிக்க வேண்டாம். சாதம் உடைந்துவிடக் கூடும். 
  • நாட்டு தக்காளி நல்ல புளிப்பு சுவை கொடுக்கும். கிடைக்கவில்லை என்றால் பெங்க்ளூர் தக்காளி 1 அல்லது 2 அதிகமாக சேர்க்கவும்.
  • பச்சை மிளகாயை நறுக்க தேவையில்லை. காம்பு மட்டும் நீக்கவும். அதுவே போதுமான காரம் கொடுத்துவிடும்.
  • நெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் குறைத்துக்கொள்ளலாம். அல்லது பாதி ரீபைண்ட் ஆயில் சேர்க்கலாம். டால்டா சேர்க்க வேண்டாம். 
  • எலுமிச்சையை அதிகமாக பிழிய கூடாது. லேசாக சாறு வரும்வரை மட்டும் பிழியவும். ஏனென்றால் கசப்பை ஏற்படுத்தும். 
  • வெறும் கொத்தமல்லி இலை, புதினா இலை மட்டும் எடுக்காமல் தண்டும் சேர்க்கவும். அதாவது கொத்தமல்லி (வேரை தவிர),புதினா (கடினமான தண்டு தவிர) கடைசி வரை ஆய்ந்து உபயோகிக்கவும். தண்டும் வாசனை கொடுக்கும் என்பதால்.

தம் போடும் முறை:-
தீயை சிம்மில் வைத்து, அதன் மேலே தோசைகல்லை வைத்து, அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடியிட்டு, மூடியின் மேல் தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்க வேண்டும்.
இப்படி தான் தம் போடணும். சரியா 5 லிருந்து 10 நிமிடம் வரை சிறுதீயில் இருக்கணும் (அல்லது பாத்திரத்தில் நீர் வற்றியதும் சிர்சிர்ன்னு மெல்லிய சவுண்ட் கேக்கும். அப்ப அடுப்ப அணைச்சுடுங்க). இறக்கியதும் மூடியை திறக்காமல் 10 நிமிடம் கழித்து அல்லது பரிமாறும் போது திறங்க.
*****************
இப்படி இல்லாமல் சிறுதீயில் தோசைகல்லை வைத்து அதன் மேலே பிரியாணி பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் வாய் பகுதியில் பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு கொண்டு அப்பி(பசைபோல் பாவித்து) மூடியிடலாம். இவ்வாறு தான் ஹைதரபாத் பிரியாணி தம் போடுகிறார்கள்.
****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS