Powered by Blogger.
RSS
Showing posts with label கிரேவி. Show all posts
Showing posts with label கிரேவி. Show all posts

மிளகுக்கறி (பேச்சுலர்ஸ் சமையல்)

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி- அரைகிலோ
தேங்காய்-  கால்மூடி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை- சிறிதளவு
இஞ்சிபூண்டு-3 ஸ்பூன்
தக்காளி- 3
மிளகுதூள்- 1 1/2  ஸ்பூன்
வரமிளகாய்- 3




குக்கரில் எண்ணெய் 2 குழிகரண்டி விட்டு, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.



பச்சை வாசனை போனதும் தக்காளி மற்றும் பொடியாய் நறுக்கிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.




தக்காளி குழைந்ததும்  சுத்தம் செய்த கறி மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விட்டு வேகவிடவும்.




கறி நன்கு வெந்து இறக்க போகும் 5 நிமிடத்திற்கு முன் மிளகுதூள் தூவி நன்கு பிரட்டி நீர் வற்றும் வரை கிளறவும்.




அவ்வளவுதான்... சுவையான... எளிமையான தேங்காய் மிளகுக்கறி தயார் :-)
இதனை ஜலீலா அக்க நடத்தும் பேச்சுலர்ஸ் ஈவெண்டுக்க அனுப்புகிறேன் Bachelors feast :-)

இத்துடன் ரவா தோசை குறிப்பையும் அனுப்புகிறேன் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இறால் மசாலா

தேவையான பொருட்கள்:
இறால் -அரைகிலோ
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ்- 2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

வறுத்து அரைக்க:
தனியா- ஒரு கைப்பிடி
வரமிளகாய்-4
பட்டை, ஏலக்காய்,கிராம்பு- 1:2:3
தேங்காய் கால் மூடி

தனியாக அரைக்க
தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
முந்திரி-10

தாளிக்க:
வெங்காயம்-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-3
இஞ்சிபூண்டு விழுது- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
தக்காளி-3
புட் கலர்- சிறிதளவு



 இறால்லை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.



வறுக்க கொடுத்த பொருட்களை தேங்காய் தவிர்த்து மற்றவற்றை வறுத்து, பின் தேங்காய் சேர்த்து நீர் விட்டு மைய்யாக அரைத்துக்கொள்ளவும்.




இறால்லில் அரைத்த விழுதையும் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.




கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கவும்.




இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.




அத்துடன் மிளகாய் தூள், புட்கலர், உப்பு, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




இப்போது ஊறிய இறால்லை சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும்.




பாதி வெந்ததும்  தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து மீண்டும் மூடிவிட்டு இறக்கிவிடவும்.





சுவையான இறால் மசாலா தயார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

தேவைப்படும் பொருட்கள் :
கத்திரிக்காய்- பத்து
தக்காளி-2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
பூடு-பத்து
தேங்காய்- கால் மூடி
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- நான்கு குழிகரண்டி

வறுக்க :
பட்டை- சிறு துண்டு
மிளகு-10
சீரகம்- கால் ஸ்பூன்
மல்லி-2 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கைப்பிடி


தாளிக்க
கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
பூடு
கறிவேப்பிலை
வெங்காயம்

கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.


நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

.

கத்திரிக்காயின் மேல் பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை கீறிகொள்ளவும். காம்பை நீக்க வேண்டாம்.  மசாலா கலவையை கத்திரிக்காயில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.





கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காம் நன்கு நிறம் மாறியதும் கத்திரிக்காய் கலவையை சேர்க்கவும். அத்துடன் தக்காளி மற்றும் புளியை சேர்த்து மூடி வைக்கவும். சிறுதீயில் வைத்து 5 நிமிடத்திற்கொருமுறை அடிபிடிக்காதவண்ணம் கிளறவும்.
மசாலாவில் நீர் வற்றி,  கத்திரிக்காய் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இறக்கிவிடவும். எல்லா வகை குழம்புகளுடனும், சப்பாத்தி,பூரி மற்றும் புலாவ் வகைகளுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
எண்ணெய் கத்திரிக்காய் என்பதை தான் ஆந்திராவில் நூனே ஓங்காய் (நூனொங்காய்) என சொல்வார்கள்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)

மாமியும் (கணவரின் அம்மா) இப்பலாம் வித்தியாசமா சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஸ்கூல் போக கூடிய தன் பேரபிள்ளைகளுக்கு கொடுத்துவிட நித்தமும் வெரைட்டியாக சமைக்கிறாங்க. சென்னை போயிருக்கும் போது அவர் செய்த சமையலை போட்டோ எடுத்தேன்!  செம டேஸ்ட்டா இருந்துச்சு... உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்....
முட்டை-10
கொத்தமல்லி,புதினா, கறிவேப்பிலை- சிறிதளவு
சின்ன வெங்காயம்-20
தக்காளி-3
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
கடுகு.உளுந்து- சிறிதளவு
உப்பு-தேவைக்கு





முட்டைகளை அவித்து மேல்பகுதியில் கால்பகுதியளவுக்கு மட்டும் கீறிவைக்கவும். இது மசாலா உள்ளே சேர வைக்கும்.


சின்னவெங்காயம் அரைத்துவைக்கவும். இஞ்சிபூண்டு தனியாக அரைத்து வைக்கவும். தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தமல்லிபுதினா ஆய்ந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளித்து பின்னர் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பின் வெங்காய விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும்.




பச்சைவாசனை போனதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.




தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




அவித்த முட்டைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை  அடுப்பில் வைத்திருக்கவும்.



விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடலாம். 5 நிமிடங்கள் கழித்து மசாலா ஒரு சேர வந்ததும் இறக்கி பரிமாறவும்.




அவிச்சமுட்டை கிரேவி தயார்.
சாதத்தில் பிரட்டி சாப்பிடவும், சாம்பார்,ரசம், புளிகுழம்பு வகைகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நண்டு மசாலா

நண்டு - 1 கிலோ
தேங்காய் பால்- ஒரு கப் 
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மிளகுதூள்-  அரை ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
பிரிஞ்சி-1


நண்டை மேல் ஓடு நீக்கி இரண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி மட்டும் வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கவும்.

 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை,ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி சேர்க்கவும். பட்டை முறிந்து வந்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் வெங்காயம்,உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின்னர்  மிளகாய் தூள்  சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் வாசம் (நெடி) போனதும் தக்காளியை பிசைந்து/நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்

 எண்ணெய் பிரிந்து ஓரத்தில் வரும் ஸ்டேஜில் நண்டை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். மசாலா அனைத்திலும் ஒட்டியவுடன் தேங்காய் பாலை சேர்த்து வேகவிடவும்.

 15 நிமிடங்கள் லோ ப்ளேமில் வேக வைத்த பின் மிளகுதூளை சேர்த்து 5 நிமிடம்  ஹை ப்ளேமில் நீர் வற்ற  கிளறி பின்னர் இறக்கவும்.
 சுவையான நண்டு மசாலா தயார். கிரேவியின் அளவு  அவரவர் விருப்பத்திற்கு தகுந்தது போல் மாற்றிக்கொள்ளலாம். அதிகமாக வற்ற விடாமல் குழம்பாகவும் உபயோகிக்கலாம். சாம்பார், ரசம் உடனும் வெறும் மசாலவை சாதத்தில் பினைந்தும் சாப்பிடலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள், 1 வருடம் பூர்த்தியாகாத குழந்தைகளை தவிர மற்ற அனைவரும் சாப்பிட கூடியது.  சளி வந்தா ஒடனே நண்ட வாங்கி சாப்பிடுங்க....... டாக்டர்க்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சம் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS