Powered by Blogger.
RSS

தேங்காய் சாதம் (ப்ரைட் ரைஸ்)


தேவையான பொருட்கள்

சாதம்-  ஒரு கப்
வெங்காயம்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பச்சைமிளகாய்-3
கொத்தமல்லி- சிறிதளவு
வெள்ளைபூடு-10
தேங்காய்- கால்மூடி
வரமிளகாய்-2
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 4 ஸ்பூன்

தாளிக்க
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைபருப்பு
நிலக்கடலைபருப்பு-விரும்பினால் மட்டும்




வெங்காயம், கொத்தமல்லி, பூடு,   ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நான்காக நறுக்கிக்கொள்ளவும்.




 தேங்காயை துருவிக்கொள்ளவும். அல்லது நீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.



 கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களுடன் பூடு, பச்சைமிளகாயை  சேர்த்து வதக்கவும்.




வாசனை மாறியதும் கறிவேப்பிலை, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.





பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.




மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடங்கள் மட்டும் வதக்கிவிடவும்.






தீயை அணைத்துவிட்டு சாதம் கொட்டி கிளறவும்.





காரமான கிரேவி வகைகள், தாளிச்சா,  பொரியல் வகைகள்,  வறுத்த மீன், சிக்கன் 65 முதலியவை நல்ல காம்பினேஷன் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தக்காளி சாதம்

தேவைப்படும் பொருட்கள்:

நாட்டுத் தக்காளி- அரை கிலோ
அரிசி- அரை கிலோ
வெங்காயம்- கால் கிலோ
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- 2 குழிகரண்டி
தண்ணீர்- ஒரு கப் அரிசிக்கு 2 கப் என்ற விகிதத்தில்
தாளிக்க-
கடுகு
உளுந்து
கறிவேப்பிலை
வரமிளகாய்

செய்முறை :

 



பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.





பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து  நிறம் மாறும் வரை வதக்கவும்




மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.





தூள் வாசம் போகும் வரை வதக்கிய பின் பொடியாய் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.நீர் விடாமல் பாதி சுருளும் வரை வதக்கவும்.




எண்ணெய் பிரிந்து  வெளியே வரும் பக்குவத்தில் இருக்கும் போது கழுவிய அரிசியை சேர்க்கவும்.





அரிசியை சேர்த்த பின்  2 நிமிடங்கள் கிளறவும்.




தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.




பாதி நீர் பாதி அரிசி என இருக்கும் இது போன்ற பக்குவத்தில் வரும் வரை  high flameல் வைத்திருக்க வேண்டும்.


அதன் பின் தம்மில் போடவும். தம்மில் போட முன்பே நன்கு சூடாக்கப்பட்ட தோசைக்கல்லில் அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து  மூடியிட்டு அதன் மேல் கனமான பாத்திரத்தில் நீரை நிரப்பி , slow flame  15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.




அவ்வளவுதான்! தக்காளிசாதம் தயார்! 
ஏதேனும் ஒரு பொரியல், அப்பளம், ஊறுகாய் உடன் பரிமாறுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஷாஹி வெஜ் பிரியாணி


தேவையான பொருட்கள்:
பாஸ்மதி- அரை கிலோ
பெரிய வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி,புதினா- சிறிதளவு
மீல் மேக்கர்- 20 உருண்டைகள்
நெய்-6 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தக்காளி-4
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
தயிர்- 100 கிராம்
தேங்காய் பால்- 250 மில்லி
இஞ்சி பூண்டு விழுது-3 ஸ்பூன்
புலாவ் மசாலா தூள்- 2 ஸ்பூன்





அரிசியை உப்பு சேர்த்து அரை வேக்காடாக அவித்து வடித்துக்கொள்ளவும்.





தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும். இதனால் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.




தனியாக ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கறிவேப்பிலை, மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.




இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.





தக்காளியை அரைத்து  அதனை சேர்க்கவும்.




ஒரு சேர வதங்கியதும் புலாவ் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.





சுடுநீரில் 5 நிமிஷம் போட்டு பிழிந்தெடுத்த மீல்மேக்கரை சேர்த்து வதக்கவும்.




தயிர் சேர்த்து ஒரு சேர வதக்கவும்.




தேங்காய் பால் சேர்த்து க்ரேவி பதம் வரும் வரை வேகவிடவும்.


சாதத்தை இரண்டாக பிரிக்கவும். முதல் பாதியை பாத்திரத்தில் பரப்பவும். அதன் மேல் கிரேவி மற்றும் கொத்தமல்லி புதினா சேர்க்கவும். அதன் மேல் மீதி சாதம் சேர்த்து மூடியிட்டு ஒரு முறை குலுக்கி விட்டு 15 நிமிடம் தம்மில் போடவும்.



ரைத்தா, எள்கத்திரிக்காய் மசாலா, தாளிச்சா, அவித்த முட்டை செம காம்பினேஷன் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ப்ளைன் சிக்கன் பிரியாணி





தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி- ஒரு கிலோ
சிக்கந் ஒரு கிலோ
நெய்- 2 குழிகரண்டி
எண்ணெய்-ஒரு குழிகரண்டி
வாசனை பொருட்கள் (பட்டை,ஏலம்,கிராம்பு etc)- தேவைக்கு
முந்திரி-10
வெங்காயம்-3
கொத்தமல்லி- ஒரு கப்
புதினா- ஒருகப்
பச்சைமிளகாய்-5
இஞ்சிபூண்டு விழுது- 3 குழிகரண்டி
தக்காளி-5
தயிர்- ஒரு கப்
தேங்காய் பால்- 4 கப்
தண்ணீர்- 4 கப்
பிரியாணி எசன்ஸ்- 2 ஸ்பூன்
ஆரஞ்ச் கலர்- சிறிதளவு
எலுமிச்சை -3



குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு வாசனை பொருட்கள் மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.





அதன் பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.





கொத்தமல்லி,புதினா, மிளகாய் சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.




இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.





பின்னர் தக்காளி மற்றும் தயிர் சேர்த்து  உடைபடாமல் வதக்கவும்.





இப்போது சிக்கனை சேர்த்து கால் மணி நேரம்(அரை வேக்காடாக) வதக்கவும்.




அதன் பின்னர் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.





கொதிக்கும் முன்பே (நுரை பொங்கி வரும் போதே) சுத்தம் செய்த அரிசியை சேர்க்கவும்.




முக்கால் வாசி நீர் வற்றியதும் எசன்ஸ், எலுமிச்சை சாறு விட்டு ஒருசேர எல்லா இடங்களிலும் படும்படிகிளறவும்.





அதன் பின் ஆரஞ்சு கலரில் நீர் விட்டு கலந்து சுற்றி ஊற்றிவிட்டு கிளறாமல் அப்படியே தம்மில் போடவும்.


 10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு ஆவி அடங்கியதும் பரிமாறவும்.
பிரியாணிக்கு என்னன்ன சைட்டிஸ் மெய்ன் டிஸ்ன்னு நா சொல்லியா தெரியணும் ;-)

















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிக்கன் கிரேவி நூடுல்ஸ்





தேவையான பொருட்கள்
ப்ளைன் நூடுல்ஸ் -  1 கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
பட்டை,ஏலக்காய், கிராம்பு- ஒவ்வொன்றிலும் 2
பச்சைமிளகாய்-2
எண்ணெய்- 4 ஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
சின்ன வெங்காயம்- 20
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
தக்காளி-3
தயிர்-3 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
மல்லிதூள்- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- கால் ஸ்பூன்
மிளகுதூள்- கால் ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு-தேவைக்கு

செய்முறை





குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய் சேர்க்கவும்.





கறிவேப்பிலை, பொடியாய் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.





இஞ்சி பூண்டு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.





பின்னர் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.





பின்னர் கெட்டித்தயிர் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.





தூள் வகைகளை சேர்த்து  வதக்கி வேகவிடவும்.





சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி சுருளும் வரை வதக்கிவிடவும்.



வேக வைத்த எடுத்த  நூடுல்ஸை சேர்த்து ஒருசேர  கிளறவும்.  3 நிமிடங்கள் நன்கு  மசாலா சேர கிளறி விட்டு பின்னர் இறக்கவும்.





சிக்கன் க்ரேவி நூடுல்ஸ் தயார்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS