Powered by Blogger.
RSS
Showing posts with label கத்திரிக்காய். Show all posts
Showing posts with label கத்திரிக்காய். Show all posts

சுட்ட கத்தரிக்காய் சம்பல் (பேச்சுலர்ஸ் சமையல்)





தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்-1
தக்காளி-2
வெங்காயம்-3
பச்சைமிளகாய்-1
கேரட், வெள்ளரிக்காய்- விரும்பினால்
உப்பு-தேவைக்கு






நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்)




ஆறியதும் தோல் நீக்கி பிசைந்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும்.




பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
சுட்டகத்திரிக்காய் சம்பல் தயார்.
இதிலேயே நிறைய வகை உள்ளன. கருவாட்டை சுட்டு முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல் :-) கத்தரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல் :-)  கத்தரிக்காயும்  தக்காளியும் சுட அலுப்பா இருக்கா??? புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்.... வெங்காய சம்பல் தயார் :-))) உடனடி சைட் டிஷ் ரெடி...



இதனை ஜலீலா அக்க நடத்தும் பேச்சுலர்ஸ் ஈவெண்டுக்க அனுப்புகிறேன் Bachelors feast :-)

இத்துடன் ரவா தோசை குறிப்பையும் அனுப்புகிறேன் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

தேவைப்படும் பொருட்கள் :
கத்திரிக்காய்- பத்து
தக்காளி-2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
பூடு-பத்து
தேங்காய்- கால் மூடி
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- நான்கு குழிகரண்டி

வறுக்க :
பட்டை- சிறு துண்டு
மிளகு-10
சீரகம்- கால் ஸ்பூன்
மல்லி-2 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கைப்பிடி


தாளிக்க
கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
பூடு
கறிவேப்பிலை
வெங்காயம்

கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.


நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

.

கத்திரிக்காயின் மேல் பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை கீறிகொள்ளவும். காம்பை நீக்க வேண்டாம்.  மசாலா கலவையை கத்திரிக்காயில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.





கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காம் நன்கு நிறம் மாறியதும் கத்திரிக்காய் கலவையை சேர்க்கவும். அத்துடன் தக்காளி மற்றும் புளியை சேர்த்து மூடி வைக்கவும். சிறுதீயில் வைத்து 5 நிமிடத்திற்கொருமுறை அடிபிடிக்காதவண்ணம் கிளறவும்.
மசாலாவில் நீர் வற்றி,  கத்திரிக்காய் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இறக்கிவிடவும். எல்லா வகை குழம்புகளுடனும், சப்பாத்தி,பூரி மற்றும் புலாவ் வகைகளுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
எண்ணெய் கத்திரிக்காய் என்பதை தான் ஆந்திராவில் நூனே ஓங்காய் (நூனொங்காய்) என சொல்வார்கள்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS