தேவைப்படும் பொருட்கள்
பீர்க்கங்காய்- ஒரு கப்காராமணி(தட்டைபயறு/ருதியா/அல்சந்தர்;-)-50 கிராம்
புளி- நெல்லிக்காய் அளவு
புளிகுழம்பு தூள்- 4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
பச்சைமிளகாய்-3
கறிவேப்பிலை-ஒருகொத்து
பூடு- 20 பல்
உப்பு-தேவைக்கு
கடுகு,உளுந்து- ஒரு ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2
காராமணியை 6 மணிநேரம் ஊறவிடவும்
குக்கரில் உப்பு சேர்த்து முக்கால் பாகம் அளவுக்கு வேகவைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளிக்கவும்.பின்னர் பூடு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நறுக்கிவைத்த பீர்க்கங்காய் துண்டு, தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.
பீர்க்கங்காய் பாதியளவு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்க்கவும். அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் புளிகுழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஊற வைத்த புளியில் தேவைக்கு ஏற்ப நீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். அதை மசாலாவில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
காராமணியை வேக வைத்த நீருடனே சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் இறக்கவும்.
சுவையான பீர்க்கங்காய் காராமணி குழம்பு தயார். ஆம்லேட், பொரியல்,கீரையுடன் அருமையாக இருக்கும்.







