Powered by Blogger.
RSS

பிஸ் ப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப்
பொரித்த மீன் -2 துண்டுகள்
வெங்காயம்-2
முட்டை-1
கேரட்,பீன்ஸ், கோஸ்- ஒரு கப்
பச்சைமிளகாய்-1
பூடு-7 பல்

ப்ரைட் ரைஸ் பொடி-1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
டொமெட்டோ சாஸ்- ஒரு குழிகரண்டி
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 5 ஸ்பூன்




மீன் முள்ளை நீக்கி உதிர்த்துவைக்கவும்.



கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பூடு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.



உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.



பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.


காய்கறி பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.



சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.



கலவை நன்கு சுருண்டதும் சாதத்தை கொட்டி 3 நிமிடங்கள் கிளறவும்.



பிஸ் ப்ரைட் ரைஸ் தயார் :-)





குறிப்பு :
                இவை அனைத்தும் ஹை ப்ளேமில்  வைத்தே செய்ய வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 comments:

இந்திரா said...

//ஹைப்ளேமில் // அப்படினா?

தக்காளி தேவையில்லையா?

உப்பு ரெண்டு தடவை சொல்லியிருக்கீங்க.. ரெண்டு தடவை போடணுமா?

மீனை உதிர்த்துவிடும்போதே சாப்ட்ருவேனே.. என்ன செய்ய?? அவ்வ்வ்வ்...

ஆமினா said...

////ஹைப்ளேமில் // அப்படினா?//

அவ்வ்வ்வ் வேகமான தீயில்

தக்காளி தேவையில்லை. சேர்த்தாலும் தவறில்லை :-)

//உப்பு ரெண்டு தடவை சொல்லியிருக்கீங்க.. ரெண்டு தடவை போடணுமா?//
வை திஸ் கொலவெறி... இருங்க மாத்திடுறேன். ஒரு முறை தான்.

//மீனை உதிர்த்துவிடும்போதே சாப்ட்ருவேனே.. என்ன செய்ய?? அவ்வ்வ்வ்...//
ப்ளாஸ்ட்டர் வாங்கி வாய்க்கு பூட்டு போட்டா சரியாய்டும்.

Radha rani said...

வித்தியாசமான குறிப்பு ஆமி..நல்லாயிருக்கு.நாளை செய்து பார்த்து சொல்கிறேன்.:)

ஹாலிவுட்ரசிகன் said...

ஐ ரோம்ப ஈஸியா இருக்கே ... வீட்டுல தனியா இருக்கற டைம்ல சைலண்டா செஞ்சு பாக்கணும்.

Aashiq Ahamed said...

assalaamu alaikum,

very colorful and looks good. insha allah will show this to my mother. she is always interested in new recipes

wassalam..

Asiya Omar said...

நல்லாயிருக்கு ஆமினா.

நிரூபன் said...

சிக்கன் ப்ரைட் ரைஸ்,
வெயிட்டபிள் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டிருக்கேன். ஆனா மொத தடவையா அக்காச்சி அருமையா மீன் ப்ரைட் ரைஸ் ரெசிப்பி கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா...

நிரூபன் said...

நல்ல குறிப்பு.

ஜெய்லானி said...

எல்லாமே கிடைச்சுப்போச்சு ஆனா ’பூடு-7 பல்’மட்டும் எந்த கடையிலும் கிடைக்கல ...அதனால
வெயிட்டிங்க் ஃபார் ஒன் மோர்(இது வேற டைப் மோர் )) கொஸ்டின் :-)))))))

ஆமினா said...

@ராதா ராணி
/வித்தியாசமான குறிப்பு ஆமி..நல்லாயிருக்கு.நாளை செய்து பார்த்து சொல்கிறேன்.:)/

நன்றி ராதா

ஆமினா said...

//ஹாலிவுட்ரசிகன் said...

ஐ ரோம்ப ஈஸியா இருக்கே ... வீட்டுல தனியா இருக்கற டைம்ல சைலண்டா செஞ்சு பாக்கணும்.
//

வாங்க ஹாலிவுட் ரசிகன்
இது செய்யும் போது அதிகமா சத்தம் வராது! சோ நீங்க கவலப்படதேவையில்லை ஹி..ஹி..ஹி..

செய்துட்டு சொல்லுங்க
நன்றி

ஆமினா said...

@Aashiq Ahamed

assalaamu alaikum,

very colorful and looks good. insha allah will show this to my mother. she is always interested in new recipes

wassalam..//

வ அலைக்கும் சலாம் வரஹ்...

கண்டிப்பா செய்து பார்த்துட்டு அம்மாவின் கமென்டை என்னிடம் சொல்லுங்கள் :-)

ஆமினா said...

@Asiya Omar said...

நல்லாயிருக்கு ஆமினா.//

மிக்க நன்றி ஆசியா

ஆமினா said...

@நிரூபன்

சிக்கன் ப்ரைட் ரைஸ்,
வெயிட்டபிள் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டிருக்கேன். ஆனா மொத தடவையா அக்காச்சி அருமையா மீன் ப்ரைட் ரைஸ் ரெசிப்பி கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா...//


எதார்த்தமாக ட்ரை பண்ண போக உருவாகிடுச்சு :-)

நன்றி நிரூ

ஆமினா said...

நிரூபன் said...

நல்ல குறிப்பு.
//

வேலை,படிப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து நீங்க கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி நிரூ

ஜெய்லானி said...

//எதார்த்தமாக ட்ரை பண்ண போக உருவாகிடுச்சு :-)//

எதுக்கும் இன்னொரு இன்ஸுரன்ஸ் எடுத்துக்கிறேன் ..உயிர் மேலே அம்புட்டு பிரியம் எனக்கு :-)))

ஆமினா said...

@ஜெய்லானி
// எல்லாமே கிடைச்சுப்போச்சு ஆனா ’பூடு-7 பல்’மட்டும் எந்த கடையிலும் கிடைக்கல ...அதனால
வெயிட்டிங்க் ஃபார் ஒன் மோர்(இது வேற டைப் மோர் )) கொஸ்டின் :-)))))))
//

ஊரில் பல் டாக்டர் இருப்பாங்களே... அவங்க கிட்ட கேட்டா கொடுப்பாங்க ஜெய் ;-)
(பூண்டு ஹி..ஹி..ஹி..)

ஆமினா said...

@ஜெய்லானி

////எதார்த்தமாக ட்ரை பண்ண போக உருவாகிடுச்சு :-)//

எதுக்கும் இன்னொரு இன்ஸுரன்ஸ் எடுத்துக்கிறேன் ..உயிர் மேலே அம்புட்டு பிரியம் எனக்கு :-)))//

நீங்க எதையும் தாங்கும் இதயம் :-) என தெரியும் ஜெய்..

கவலப்படாம செய்யுங்க.

செய்யும் போது ஆமினா சொல்லி கொடுத்த சமையல்ன்னு மட்டும் எங்கேயும் சொல்லப்படாது சொல்லிட்டேன் :-)

Raj said...

ஆமினா மேடம் உங்கள் இஸ்லாமிய குறிப்புகள் அனைத்தும் மிகவும் அருமை.இஸ்லாமிய உணவுகள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம்.
என் நெருங்கிய இஸ்லாமிய நண்பர் வீட்டில் சிறு வயது முதலே பண்டிக்கைக்கு பிரியாணி,எண்ணெய் கத்திரிக்காய்,தால்சா போன்றவை சுவைத்திருக்கிறேன்.இந்த combo எனக்கு அலாதி விருப்பம்.இந்தியாவில் இருக்கும்போது இந்த செய்முறை தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ,செய்து சுவைக்க வேண்டும் என்றோ தோன்றியதில்லை,கிடைக்க கூடிய ஒன்று என்பதால்.இப்போது உங்கள் எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பை பார்க்கும்போது உடனே செய்ய தூண்டுகிறது.இப்போதுதான் வெளிநாடு வந்திருக்கிறேன்,மேலும் சமையலில் அனுபவமில்லை.இக்குறிப்பில் சில சந்தேகங்கள் உள்ளன,தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
http://www.arusuvai.com/tamil/node/16285 என்ற உங்கள் குறிப்பில்
1.கத்திரிக்காய்(4),பெரிய வெங்காயம் (2) போன்றவை தோராய கிராம் அளவில் தர இயலுமா.
2.சின்ன வெங்காய விழுது கால்கப்,தக்காளி விழுது கால்கப் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.அதாவது 250ml கப்பிற்கு கால்கப் தானே.இல்லையென்றால் ஒரு கப் எவ்வளவு ml என்று சொல்லவும்.
3.இஞ்சி பூடு விழுது எத்தனை ஸ்பூன் என்று குறிப்பிடவும்.
4.நீங்கள் ஸ்பூன் அளவு என்று அளவுகளில் குறிப்பிட்டிருப்பது எல்லாம் டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.
5.தாளிப்பிற்கு சீரகம்,கடலைப்பருப்பு போன்றவை தலா எத்தனை ஸ்பூன் சேர்க்கவேண்டும்.

உங்களின் பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.
இது நீங்கள் படங்களுடன் குறிப்பிடாத எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பு,இதுவும் நன்றாகவே புரிகிறது ,இதையே செய்கிறோம்.Thanks a lot.

ஆமினா said...

@raj
ஹாய் ராஜ். எல்லா குறிப்புகளையும் பார்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க.

1.கத்திரிக்காய்(4),பெரிய வெங்காயம் (2) போன்றவை தோராய கிராம் அளவில் தர இயலுமா.

-கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம்- 100 கிராம்

2.சின்ன வெங்காய விழுது கால்கப்,தக்காளி விழுது கால்கப் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.அதாவது 250ml கப்பிற்கு கால்கப் தானே.இல்லையென்றால் ஒரு கப் எவ்வளவு ml என்று சொல்லவும்.

ஒரு கப் என்பது தோராயமாக 250 ml வரும். சோ அதன்படி கணக்கு பண்ணிக்கோங்க. இவ்வளவுதான் போட வேண்டும் என கட்டாயம் அல்ல. மசாலா அதிகம் வேண்டுமானால் இன்னும் அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை.

3.இஞ்சி பூடு விழுது எத்தனை ஸ்பூன் என்று குறிப்பிடவும்.
-இஞ்சி பூண்டு சேர்க்கலாம். இல்லையென்றாலும் சுவையில் மாற்றம் இருக்காது. போடுவதாக இருந்தால் ஸ்பூன் போடுங்க.

4.நீங்கள் ஸ்பூன் அளவு என்று அளவுகளில் குறிப்பிட்டிருப்பது எல்லாம் டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.
டீஸ்பூன் தான்.

5.தாளிப்பிற்கு சீரகம்,கடலைப்பருப்பு போன்றவை தலா எத்தனை ஸ்பூன் சேர்க்கவேண்டும்.
கால் டீஸ்பூன் அளவுக்கு சேருங்க.

வேறு ஏதேனும் சந்தேகம்னா கேளுங்க.

http://www.arusuvai.com/tamil/node/19438 இந்த லிங்கில் இருப்பது படங்களுடன். தெளிவா இல்ல இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக்கோங்க :-)

வருகைக்கு நன்றிங்க

Raj said...

தெளிவான உடனடி விளக்கத்திற்கு மிக மிக நன்றி மேடம்.ஞாயிற்றுக்கிழமை இங்கு கடைகள் கிடையாது.நீங்கள் எப்படியும் பதில் தருவீங்க என்ற நம்பிக்கையில் எல்லா பொருட்களும் இன்றே வாங்கி வைத்து விட்டேன்.நாளை செய்ததும் உடனே அந்த குறிப்பின் கீழ் பின்னூட்டம் கொடுக்கிறேன்.உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.
http://www.arusuvai.com/tamil/node/16285
இது நீங்கள் படங்களுடன் குறிப்பிடாத எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பு,இதுவும் நன்றாகவே புரிகிறது ,இதையே செய்கிறோம்.

1.//இஞ்சி பூடு விழுது எத்தனை ஸ்பூன் என்று குறிப்பிடவும்.
-இஞ்சி பூண்டு சேர்க்கலாம். இல்லையென்றாலும் சுவையில் மாற்றம் இருக்காது. போடுவதாக இருந்தால் ஸ்பூன் போடுங்க.//
ஸ்பூன் போடுங்க என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
எத்தனை டீஸ்பூன் சேர்க்கலாம் மேடம்.

2.இந்தக் குறிப்பிற்கு காரத்திற்கு என்று மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன்,பச்சைமிளகாய் 1 மட்டும் தான் வருமா.

3.இந்தக் குறிப்பில் மசாலாக்கள் என சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்,மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன் மட்டும் தான் வருமா.

என்னை திட்டிடாதீங்க மேடம். recipe தந்த உங்களிடம் doubt clear பண்ணி விட்டு செய்தால் நன்றாக வரும் என்று நம்பிக்கையுடன் செய்வோம்.அதனால்தான்.நன்றி.

ஆமினா said...

ஓ அப்படியா

ரொம்ப நன்றிங்க!

//ஸ்பூன் போடுங்க என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
எத்தனை டீஸ்பூன் சேர்க்கலாம் மேடம்.//
ஆகா.... 3 என்ற வார்த்தை மட்டும் என் கீபோர்ட்டில் மக்கர் பண்ணும் :-) நா கவனிக்கல! 3 டீஸ்பூன் போடுங்க.

//2.இந்தக் குறிப்பிற்கு காரத்திற்கு என்று மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன்,பச்சைமிளகாய் 1 மட்டும் தான் வருமா.//

நீங்க கூட போட்டுக்கிட்டாலும் சரி தான். பிரியாணில காரம் ஏற்கனவே அதிகமா இருக்கும் என்பதால் இதில் கம்மியாக இந்த அளவு மட்டுமே சேர்ப்பேன் :-)


3.இந்தக் குறிப்பில் மசாலாக்கள் என சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்,மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன் மட்டும் தான் வருமா.

ஆமாங்க :-)

ஹி..ஹி..ஹி.. திட்டலாம் மாட்டேன் ராஜ்! உங்களுக்கு வேற சந்தேகம்னாலும் கேளுங்க! நிச்சயம் பதில் சொல்றேன் :-)

Raj said...

ஆமினா மேடம்,

உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி.எண்ணெய் கத்திரிக்காய் வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக சுவையுடன் இருந்தது.எங்கள் அனைவரின் சார்பிலும் மனதார்ந்த நன்றி மேடம்.
அறுசுவையில் பின்னூட்டம் அளித்து ரேட்டிங்கும் கொடுத்து விட்டோம்.

சுவையான குறிப்புக்கும்,மேலும் இதை செய்து பார்க்க நீங்கள் பதிலளித்து உதவியதற்கும் நன்றி.

Post a Comment