தேவையான பொருட்கள்
சாதம்- ஒரு கப்
காலிப்ளவர் - சின்ன பூவாக ஒன்று
வெங்காயம்-1
தக்காளி-2
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
பிரியாணி தூள்- ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நெய்- 3 டீஸ்பூன்
செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
பூவை சிறிய பூக்களாக பிரித்து கொதிநீரில் 3 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நீர் வடித்து எடுக்கவும்.தண்டு இல்லாமல் வெறும் சிறு சிறு பூக்கள் மட்டும் இருக்கும் படி நறுக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் தாளிக்கவும்.
அதன் பின்னர் பொடியதாக நறுக்கிய தக்காளியை வதக்கவும்.
அதன் பின் பூக்களை சேர்த்து வதக்கி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பிரியாணி தூள் சேர்த்து வதக்கவும்.
2 குழி கரண்டி நீர் விட்டு வேகும் வரை மூடி வைக்கவும்.
நன்கு வதங்கி நீர் முழுவதும் வற்ற வைத்த பின் சாதத்தை கொட்டி கிளறவும்.
கோபி ரைஸ் தயார். ரைத்தா உடன் பரிமாறவும்.
(ஸ்கூல் போகும் பசங்களுக்கு இது போல் மிக எளிதாக செய்து கொடுக்கலாம்:-)
14 comments:
//(ஸ்கூல் போகும் பசங்களுக்கு இது போல் மிக எளிதாக செய்து கொடுக்கலாம்:-) //
இதைதான் முதல்ல போட்டு இருக்கனும் ஹா..ஹா.. :-)))))
//கறிவேப்பிலை- ஒரு கொத்து// ஒரு கப் சாத்துக்கு ஒரு கொத்து ..அவ்வ்வ்வ்வ்வ்வ் பாவம் ஷாம் :-)))
////(ஸ்கூல் போகும் பசங்களுக்கு இது போல் மிக எளிதாக செய்து கொடுக்கலாம்:-) //
இதைதான் முதல்ல போட்டு இருக்கனும் ஹா..ஹா.. :-)))))//
பதிவை முழுசா படிக்கட்டும்னுதேன் :-) ஹி..ஹி..ஹி..
//கறிவேப்பிலை- ஒரு கொத்து// ஒரு கப் சாத்துக்கு ஒரு கொத்து ..அவ்வ்வ்வ்வ்வ்வ் பாவம் ஷாம் :-)))//
வாசனைக்காக சேர்ப்பேன். ஒரு கொத்தில் பத்து இலை இருக்குமா? ;-)
அப்பறம் ஷாம்க்கு கறிவேப்பிலை, கடுகு பிடிக்காது... அதனால பொருக்கி எடுத்து அனுப்புவேன் :-)
அருமையான கோபி ரைஸ் சூப்பர்.
கோபி ரைஸ்...பேர் புதுசா இருக்கு.காய்கறி அதிகம் சேர்க்காம சிம்பிளான குறிப்பா இருக்கு ஆமி...செய்து பார்த்துடறேன்.:)
Nice recipe Amina.
Gopi permission illaamal eludhiya padhivu. kandanangal.
@விஜி
ரொம்ப நன்றி மா
@ராதா
//கோபி ரைஸ்...பேர் புதுசா இருக்கு.காய்கறி அதிகம் சேர்க்காம சிம்பிளான குறிப்பா இருக்கு ஆமி...செய்து பார்த்துடறேன்.:)//
கண்டிப்பா செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லணும் :-)
நன்றி ராதா
@சிவா
//Gopi permission illaamal eludhiya padhivu. kandanangal.//
அவுக கேரளா விஷயமா மெட்ராஸ்பவன் ப்ளாக்கில் பிசியா இருக்குறதா கேள்விபட்டேன். அதான் பெர்மிஷன் வாங்க முடியல ;-)
வருகைக்கு நன்றி சிவா
இதெல்லாம் என் மனைவி கண்ணில் படாதே:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(
@தாத்தா
இது பயம்மா வருத்தமா :-)
It is very tasty
Post a Comment