- ஓட்ஸ் - ஒரு கப்
- அரிசி மாவு– ¼ கப்
- ரவை– ¼ கப்
- தயிர்- ஒரு கப்
- உப்பு-தேவைக்கு
ஓட்ஸ் மற்றும் ரவையை இரண்டு கப்பு தண்ணீர் மற்றும் தயிருடன் சேர்த்து குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும்.
அத்துடன் அரிசி மாவு சிறுக சிறுக சேர்த்து கலக்கவும்.
தோசை மாவு பதத்திற்கு கலக்கி விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின் தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊற்றி நடுவில் கொண்டு வர வேண்டும். மாவும் தண்ணீர் போல் இருப்பதால் தானாக நடுவில் வந்து கூடிவிடும். எண்ணெய் விட்டு வார்த்து திருப்பி போட்டு எடுக்கவும்.
மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி
. இதில் வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து கலந்தும் அடை போல் செய்து சாப்பிடலாம்.
இக்குறிப்பை எனக்கு கற்றுதந்த யாஸ்மின்க்கு என் மனமார்ந்த நன்றி
3 comments:
step by step ஆக மிக தெளிவாக இருக்கிறது.. அருமை.. ஓர் சந்தேகம் மொரு மொருனு வருமா?
ஆமினா !! உங்க ரெசிப்பி ஓட்ஸ் ரவா தோசை செய்து பார்த்து எனதுப்லாகிலும் போட்டாச்சு நேரம் கிடைச்ச வந்துபாருங்க
ரொம்ப நல்ல இருக்கு ஆமினா
Post a Comment