Powered by Blogger.
RSS

நூனே ஓங்காய் (ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய்)

தேவைப்படும் பொருட்கள் :
கத்திரிக்காய்- பத்து
தக்காளி-2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
பூடு-பத்து
தேங்காய்- கால் மூடி
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- நான்கு குழிகரண்டி

வறுக்க :
பட்டை- சிறு துண்டு
மிளகு-10
சீரகம்- கால் ஸ்பூன்
மல்லி-2 ஸ்பூன்
நிலக்கடலை- ஒரு கைப்பிடி


தாளிக்க
கடுகு
உளுந்து
கடலைபருப்பு
சீரகம்
பூடு
கறிவேப்பிலை
வெங்காயம்

கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.


நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

.

கத்திரிக்காயின் மேல் பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை கீறிகொள்ளவும். காம்பை நீக்க வேண்டாம்.  மசாலா கலவையை கத்திரிக்காயில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.





கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காம் நன்கு நிறம் மாறியதும் கத்திரிக்காய் கலவையை சேர்க்கவும். அத்துடன் தக்காளி மற்றும் புளியை சேர்த்து மூடி வைக்கவும். சிறுதீயில் வைத்து 5 நிமிடத்திற்கொருமுறை அடிபிடிக்காதவண்ணம் கிளறவும்.
மசாலாவில் நீர் வற்றி,  கத்திரிக்காய் நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இறக்கிவிடவும். எல்லா வகை குழம்புகளுடனும், சப்பாத்தி,பூரி மற்றும் புலாவ் வகைகளுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
எண்ணெய் கத்திரிக்காய் என்பதை தான் ஆந்திராவில் நூனே ஓங்காய் (நூனொங்காய்) என சொல்வார்கள்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

Sivakumar said...

நூனே ஓங்காய்..பாக உந்தி. ட்ரை சேஸ்தாம். ஆந்திராகாரு எவருனா டேஸ்ட் சேசி செப்புத்தனே நம்புத்தாமு. அதிதாக வைட்டிங் லிஸ்ட்லோ பெட்தாமு.

ஆஷா பர்வீன் said...

அருமை .....பார்க்கவே அழகா இருக்கு....

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் அருமை... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

நன்றி சகோ...

ஸாதிகா said...

எண்ணெய் கத்தரிக்காய் என்று சொல்லி விட்டு எண்ணெய் மினுமினுப்பையே காணுமே?உண்மையை சொல்லுங்க ஆமினா இது நீங்கள் சமைத்ததா?இல்லை அம்மாவீட்டில் இருந்து வந்ததா?இப்படிக்கூட நல்லா சமை[ப்பீர்களா?

Unknown said...

Wow.. romba nalla iruku..

Unknown said...

Wow.. romba nalla iruku..

Post a Comment