தேவைப்படும் பொருட்கள்:
நாட்டுத் தக்காளி- அரை கிலோஅரிசி- அரை கிலோ
வெங்காயம்- கால் கிலோ
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்- சிறிதளவு
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- 2 குழிகரண்டி
தண்ணீர்- ஒரு கப் அரிசிக்கு 2 கப் என்ற விகிதத்தில்
தாளிக்க-
கடுகு
உளுந்து
கறிவேப்பிலை
வரமிளகாய்
செய்முறை :
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
தூள் வாசம் போகும் வரை வதக்கிய பின் பொடியாய் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.நீர் விடாமல் பாதி சுருளும் வரை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வெளியே வரும் பக்குவத்தில் இருக்கும் போது கழுவிய அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்த பின் 2 நிமிடங்கள் கிளறவும்.
தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பாதி நீர் பாதி அரிசி என இருக்கும் இது போன்ற பக்குவத்தில் வரும் வரை high flameல் வைத்திருக்க வேண்டும்.
அதன் பின் தம்மில் போடவும். தம்மில் போட முன்பே நன்கு சூடாக்கப்பட்ட தோசைக்கல்லில் அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடியிட்டு அதன் மேல் கனமான பாத்திரத்தில் நீரை நிரப்பி , slow flame 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
அவ்வளவுதான்! தக்காளிசாதம் தயார்!
ஏதேனும் ஒரு பொரியல், அப்பளம், ஊறுகாய் உடன் பரிமாறுங்கள்.
9 comments:
தக்காளி சாதம் படத்துடன் அழகான விளக்கம்...
என்ன அக்கா சனி எண்டா...சமையல்ல தான் பொழுது போகுது போல....
செய்து பார்க்கிரேன்..அக்காகிட்ட சொல்லி
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கை ஆமினா
மிக எளிமையான எங்களை போல் வெளிநாட்டில் வாழ்கின்ற தனிக்கட்டைகள் ஈஸியாக செய்யக் கூடிய உணவு வகை
பகிர்வுக்கு ரொம்ப நன்றிம்மா
ஆமினா தக்காளி சாதம் வித்யாசமா இருக்கே, சன் டே டிரை பண்ணி பாக்குறேன் :)
நான்-வெஜ்ஜாச்சே ?
அடேங்கப்பா என் ஆத்துக்காரி செல்லம்மாவுக்கு மட்டும்தான் தக்காளிசாதம் செய்ய தெரியும் என்று நினைத்தேன். ஆமினா அசத்தலான தக்காளிசாத செய்முறை சொல்லியிருக்கிறியள்.
தக்காளிசாதம் பரிமாறின தட்டு அழகா இருக்கே எங்கை எடுத்தது.
இல்லை இல்லை எங்க வாங்கினது என்று கேட்க வெந்தான்.
சிம்பிளா ஒரு தக்காளி சாதம். தாளிக்கும் வாசனை இங்கே மணக்குது.
My first visit here. Super recipes. I luv it.
I like tomaato rice very much.
byw www.vijisvegkitchen.blogspot.com
Post a Comment