Powered by Blogger.
RSS

ஷாஹி வெஜ் பிரியாணி


தேவையான பொருட்கள்:
பாஸ்மதி- அரை கிலோ
பெரிய வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி,புதினா- சிறிதளவு
மீல் மேக்கர்- 20 உருண்டைகள்
நெய்-6 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தக்காளி-4
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
தயிர்- 100 கிராம்
தேங்காய் பால்- 250 மில்லி
இஞ்சி பூண்டு விழுது-3 ஸ்பூன்
புலாவ் மசாலா தூள்- 2 ஸ்பூன்





அரிசியை உப்பு சேர்த்து அரை வேக்காடாக அவித்து வடித்துக்கொள்ளவும்.





தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும். இதனால் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.




தனியாக ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கறிவேப்பிலை, மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.




இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.





தக்காளியை அரைத்து  அதனை சேர்க்கவும்.




ஒரு சேர வதங்கியதும் புலாவ் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.





சுடுநீரில் 5 நிமிஷம் போட்டு பிழிந்தெடுத்த மீல்மேக்கரை சேர்த்து வதக்கவும்.




தயிர் சேர்த்து ஒரு சேர வதக்கவும்.




தேங்காய் பால் சேர்த்து க்ரேவி பதம் வரும் வரை வேகவிடவும்.


சாதத்தை இரண்டாக பிரிக்கவும். முதல் பாதியை பாத்திரத்தில் பரப்பவும். அதன் மேல் கிரேவி மற்றும் கொத்தமல்லி புதினா சேர்க்கவும். அதன் மேல் மீதி சாதம் சேர்த்து மூடியிட்டு ஒரு முறை குலுக்கி விட்டு 15 நிமிடம் தம்மில் போடவும்.



ரைத்தா, எள்கத்திரிக்காய் மசாலா, தாளிச்சா, அவித்த முட்டை செம காம்பினேஷன் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 comments:

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

பிரியாணியோடு சைடு டிஷ்ஷும் சூப்பர் ஆமினா..:-))

ஹாலிவுட்ரசிகன் said...

எப்படியோ சொன்ன மாதிரி மண்டைய குடைஞ்சு புதுசா எப்படி பிரியாணி செய்து காட்டலாம்னு யோசிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள் ஆமினாக்கா.

vanathy said...

super biryani.

K said...

அழகான சமையல் குறிப்பு!எப்படியோ, நாங்கள் செய்து பார்க்கப்போறதில்ல! ( நமக்குத்தான் சமையல் அலர்ஜி ஆச்சே )

பகிர்வுக்கு நன்றி ஆமினா!

K said...

கடைசியாக இருக்கும் படத்தில் 4 சைடிஸ்களும், மஞ்சள் நிறத்தில் இருக்கே! அப்போ நாங்களும் மஞ்சள் நிற டிஸ்கள்தான் பாவிக்கணுமா? நீல நிற டிஸ்களில் போட்டால் என்ன ஆகும்? :-))))))))

Radha rani said...

நல்லா உதிரியா ஒன்னோட ஒன்னு ஒட்டாம பிரியாணி பார்க்க அழகா இருக்கு ஆமி..வெரைட்டியா சைட் டிஷ் வச்சு பிரியாணி சாப்பிட்டா உள்ள போயிட்டே இருக்கும்மில்ல..பிரியாணி,சைட் டிஷ் ரெண்டுமே சூப்பர்.:)

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

ஜசாக்கல்லாஹ்

நாகா ராம் said...

எப்படி இப்படிலாம்??? ச்ச... எனக்கு இதெல்லாம் வரதே இல்ல. பிரியாணி, புலாவ்னு சொன்னாலே வயிறு சரியில்ல், பசி இல்ல, சிம்பிளா எதாவது செய்னு பதில் வருது :(

இத சொல்லாமலே செய்ய போறேன் :)

Post a Comment