Powered by Blogger.
RSS

வாழைப்பூ பீட்ரூட் வடை


 கடலைபருப்பு- 100 கிராம்
வாழைப்பூ-100 கிராம்
பீட்ரூட்- 50 கிராம்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி- ஒரு கொத்து
இஞ்சி- சிறியதுண்டு
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை
பச்சைமிளகாய்- 4
கடலைபருப்பை ஒரு மணி நேரம் ஊற விடவும். உரலில் அல்லது மிக்ஸியில் நீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். கடைசி சுற்றில் இஞ்சி, கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்கவும்.
வாழைப்பூவின் உள்ளே இருக்கும் நரம்பு போன்ற  காம்பினை நீக்கிவிடவும்.
பொடியாக நறுக்கிக்கொள்ளவும். துவர்ப்பு தன்மை பிடிக்காதவர்கள் மோரில் அரைமணி நேரம் ஊறவிடலாம்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைபருப்பு, நறுக்கிய பூ, துருவிய பீட்ரூட், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசையவும்.
கையிலோ அல்லது வாழை இலையிலையிலோ/ ப்ளாஸ்டிக் கவரிலோ லேசாக எண்ணெய் தடவி சிறு உருண்டை எடுத்து லேசாக அழுத்தவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கி தட்டிய மாவினை விட்டு இருபக்கமும் சிவக்க பொரித்தெடுக்கவும்.
சட்னி உடன் சேர்த்து பரிமாறுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 comments:

Asiya Omar said...

ஆமினா நல்லாயிருக்கு.வாழைப்பூ பீட்ரூட் சேர்ப்பது புதுசு.

ஜெய்லானி said...

//வாழைப்பூவின் உள்ளே இருக்கும் நரம்பு போன்ற காம்பினை நீக்கிவிடவும். //

விருந்தாளிக்கு குடுக்குறதுக்கு எதுக்கு அதை நீக்கனும் ஹி..ஹி.. :-))

ஜெய்லானி said...

//என்னையும் நம்பி வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் //

இதுல ரத்த கலர் கத்தி எதுக்கு ..??? !!! :-)))))

Radha rani said...

ஆரோக்கியமான நல்ல குறிப்பு ஆமி..வாழைப்பூ விரும்பாத குழந்தைகளுக்கு உங்க குறிப்பை செஞ்சு தரலாம்..:)

விச்சு said...

வாழைப்பூவடை சாப்பிடுள்ளேன். அதில் பீட்ரூட் கலந்து புதுமையாக உள்ளது. என் மனைவியிடம் இதனை படிக்கச் சொல்லிவிட்டேன். அலுத்துக்கொண்டாள்... இந்த ஆமினா அக்கா புதிதாக ஏதாவது எழுதி எனக்கு வேலை வைக்கிறார் என்று.

Unknown said...

சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்


இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்

Anonymous said...

பீட்ரூட் வடையா..? விஞ்ஞானம் ரொம்பத்தான் முன்னேறி இருக்கு..ம்ம்..!!

Anonymous said...

//ஜெய்லானி said...
//என்னையும் நம்பி வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் //

இதுல ரத்த கலர் கத்தி எதுக்கு ..//


ஒரு வேளை ஆட்டு கிட்னி வடையா இருக்குமோ..

Jaleela Kamal said...

சத்தான் வடை

அது போல கட்டிங் போர்டு ஊரில் விற்குதா?
அப்படியே காய்நருக்கி தள்ளி விடுவது போல்?

குறையொன்றுமில்லை. said...

இப்ப போனமாசம் ஈரோடு போனேன் இல்லியா அங்கதான் இந்த வாழைப்பூ, வாழைத்தண்டெல்லாம் பாக்கவே முடிந்தது. இங்க நான் இருக்கும் இடத்ல கிடைக்காது. நான் ஈரோட்ல இருக்கும்போதே இந்தப்பதிவு போட்டிருக்கமாட்டியோ?

Anonymous said...

//Jaleela Kamal said...
சத்தான் வடை //

சத்தான் வடை....புதுசா இருக்கே!!!

ஆமினா said...

@ஆசியா

//ஆமினா நல்லாயிருக்கு.வாழைப்பூ பீட்ரூட் சேர்ப்பது புதுசு.//

நன்றி ஆசியா

ஆமினா said...

@ஜெய்லானி
////வாழைப்பூவின் உள்ளே இருக்கும் நரம்பு போன்ற காம்பினை நீக்கிவிடவும். //

விருந்தாளிக்கு குடுக்குறதுக்கு எதுக்கு அதை நீக்கனும் ஹி..ஹி.. :-)///

எங்க வீட்டுக்கு நீங்க வரும் போது இந்த டிப்ஸ் தேவைப்படும் ஹி..ஹி..ஹி..

ஆமினா said...

@ஜெய்லானி
////என்னையும் நம்பி வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் //

இதுல ரத்த கலர் கத்தி எதுக்கு ..??? !!! :-)))))//

கொலையா கொல்லுவோம்ல :-)

ஆமினா said...

@ராதா
//ஆரோக்கியமான நல்ல குறிப்பு ஆமி..வாழைப்பூ விரும்பாத குழந்தைகளுக்கு உங்க குறிப்பை செஞ்சு தரலாம்..:)//
நன்றி ராதா..
கண்டிப்பா... ஸ்கூல் விட்டு வந்ததும் இப்படி சத்தான விஷயங்கள் செஞ்சு கொடுக்கலாம்

ஆமினா said...

@விச்சு
//வாழைப்பூவடை சாப்பிடுள்ளேன். அதில் பீட்ரூட் கலந்து புதுமையாக உள்ளது. என் மனைவியிடம் இதனை படிக்கச் சொல்லிவிட்டேன். அலுத்துக்கொண்டாள்... இந்த ஆமினா அக்கா புதிதாக ஏதாவது எழுதி எனக்கு வேலை வைக்கிறார் என்று.//

ஹா..ஹா..ஹா...
உங்க வைப் என் மேல கொலவெறியோட இருக்காங்கன்னு சொல்லுங்க :-)

ஆமினா said...

@வைரை சதீஷ்

நன்றி சதீஷ்

ஆமினா said...

@சிவகுமார்
//பீட்ரூட் வடையா..? விஞ்ஞானம் ரொம்பத்தான் முன்னேறி இருக்கு..ம்ம்..!!//

அடடே... அப்படியா??

சொல்லவே இல்ல...

இதெல்லாம் எப்பேலிருந்து???

(நாங்களும் சம்மந்தமில்லாம பேசுவோம்ல )

ஆமினா said...

@ஜலீலாக்கா

//சத்தான் வடை

அது போல கட்டிங் போர்டு ஊரில் விற்குதா?
அப்படியே காய்நருக்கி தள்ளி விடுவது போல்?//

நன்றி அக்கா

விக்குது அக்கா... நான் தான் இன்னும் அருவாமனையும் கத்திய தூக்கி போடாம இருக்கேன்... :-)

ஆமினா said...

@லெட்சுமி மாமி
இப்ப என்ன ஆச்சு? அடுத்த முறை ஈரோட்டுக்கு வரும் போது செஞ்சுடுங்க. இல்லைன்னா மும்பைக்கு கொடுத்தனுப்புறேன் :-)

ஆமினா said...

@சிவா
///Jaleela Kamal said...
சத்தான் வடை //

சத்தான் வடை....புதுசா இருக்கே!!!//

நல்லவேள சாத்தான் வடைன்னு பல்பு கொடுக்கல! அக்காவுக்கு வேலை பிசி.. அதான் :-)

VijiParthiban said...

மிகவும் அருமையான வாழைப்பூ வடை சூப்பர் அக்கா..படங்களும் சூப்பர் அக்கா ....

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

Post a Comment