Powered by Blogger.
RSS

நண்டு மசாலா

நண்டு - 1 கிலோ
தேங்காய் பால்- ஒரு கப் 
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மிளகுதூள்-  அரை ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
பிரிஞ்சி-1


நண்டை மேல் ஓடு நீக்கி இரண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி மட்டும் வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கவும்.

 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை,ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி சேர்க்கவும். பட்டை முறிந்து வந்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் வெங்காயம்,உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின்னர்  மிளகாய் தூள்  சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் வாசம் (நெடி) போனதும் தக்காளியை பிசைந்து/நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்

 எண்ணெய் பிரிந்து ஓரத்தில் வரும் ஸ்டேஜில் நண்டை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். மசாலா அனைத்திலும் ஒட்டியவுடன் தேங்காய் பாலை சேர்த்து வேகவிடவும்.

 15 நிமிடங்கள் லோ ப்ளேமில் வேக வைத்த பின் மிளகுதூளை சேர்த்து 5 நிமிடம்  ஹை ப்ளேமில் நீர் வற்ற  கிளறி பின்னர் இறக்கவும்.
 சுவையான நண்டு மசாலா தயார். கிரேவியின் அளவு  அவரவர் விருப்பத்திற்கு தகுந்தது போல் மாற்றிக்கொள்ளலாம். அதிகமாக வற்ற விடாமல் குழம்பாகவும் உபயோகிக்கலாம். சாம்பார், ரசம் உடனும் வெறும் மசாலவை சாதத்தில் பினைந்தும் சாப்பிடலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள், 1 வருடம் பூர்த்தியாகாத குழந்தைகளை தவிர மற்ற அனைவரும் சாப்பிட கூடியது.  சளி வந்தா ஒடனே நண்ட வாங்கி சாப்பிடுங்க....... டாக்டர்க்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சம் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

13 comments:

aotspr said...

மிகவும் அருமையான சமையல்.........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Asiya Omar said...

wow !looks fresh and tasty..

ஆமினா said...

நன்றி கண்ணன்

ஆமினா said...

நன்றி ஆசியா

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஆமினா,
சுவையான பதிவு. நன்றி.

"நண்டு சாப்பிடுவது எப்படி?"... என்று யாராவது (நன்றாக நண்டு சாப்பிட தெரிந்தவர்) ஒரு பதிவு போட்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும்..!

ஆமினா said...

வ அலைக்கும் சலாம் வரஹ்

வருகைக்கு நன்றி சகோ ஆஷிக்

மெய்யாலுமே சொல்றீகளா? :-)

முன்னமே தெரிஞ்சுருந்தா நண்டு சாப்பிட தெரியாத என்னவருக்கு நா டெமோ காட்டுனத போட்டோ போட்டிருப்பேனே :-))

Radha rani said...

நண்டு மசாலா சூப்பர்! செய்துடறேன் ஆமி..

ஆமினா said...

நன்றி ராதா.... செய்துட்டு சொல்லுங்க :-)

Unknown said...

super samaiyal

மாய உலகம் said...

எளிமையாக அருமையா அழகா செய்முறை விளக்கங்களோடு நண்டு மசாலா செய்வதை சொல்லிட்டீங்க.. பார்க்கும்போது உண்பதற்க்கு ஆவல் வருகிறது.. பகிர்வுக்கு நன்றி சகோ!

F.NIHAZA said...

ஸலாம் ஆமினா....
மசாலா சூப்பரா இருக்கும் போல.....

Jaleela Kamal said...

நண்டு சாப்பிட மாட்டோம் செய்ததில்லை

Anonymous said...

நண்டு சாப்பிட்டது இல்லை ஆனால் உங்க போட்டோஸ் பார்க்கும்போது சாப்பிட தூண்டுது ஆமினா,போட்டோஸ் எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கு.
நானும் உங்களை நம்ம்பி இங்க வந்துருக்கேன் :)))

Post a Comment