Powered by Blogger.
RSS

சிம்பிள் தேங்காய் சாதம்

இந்த எளிய முறை தேங்காய் சாதம் எங்கம்மாவின் பாட்டி எங்க அம்மம்மாவுக்கு கத்து கொடுத்து எங்க அம்மம்மா எங்கம்மாவுக்கு சொல்லி கொடுத்து காலத்தின் கொடுமையாய்  என் கைக்கு வந்துருக்கு (பரம்பரை பரம்பரையா செஞ்சுட்டு வர  சமையலாக்கும் :-)  சிலோன் தேங்காய் சாதம்னு அவங்களா பேர வச்சுக்கிட்டாங்க. ஏன்னா அங்கே தான் தேங்காய்லாம் அதிகமா சேத்துக்குவாங்களாம் :-))  (அப்ப கேரளாலாம் உங்க லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டீங்களா?)


தேவைப்படும் பொருட்கள்
புழுங்கல் அரிசி- 2 டம்ளர்
தேங்காய் பால்- 6 டம்ளர்
கறிவேப்பிலை-3 கொத்து
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
எண்ணெய்-தாளிக்க
உப்பு-தேவைக்கு





செய்யும் முறை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.(ஜாதிக்காய் பொடி,அன்னாசிபூ விருப்பப்பட்டால் சேர்க்கலாம்).




கறிவேப்பிலை நிறம் மாறும் முன்பே தேங்காய் பாலை சேர்க்கவும்.


நுரைத்து வரும் போது அரிசியும் உப்பையும் சேர்க்கவும்.ஹை ப்ளேமில்  பாதியளவாக பால் வற்றும் வரை வைத்திருக்கவும்.


பாதி அரிசி பாதி பால் என கீழே உள்ள போட்டோவில் உள்ள ஸ்டேஜில் இருக்கும் போது ஸ்லோ ப்ளேமில் 10 நிமிடங்கள் தம்மில்  வைக்கவும்.


அவ்வளவு தான். கமகம தேங்காய் சாதம் தயார்.  (எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் என்றால் இன்னும் ரொம்ப சுலபம். கேஸ் அடிப்பில் தாளித்து,பாலில் நுரை பொங்கியதும் ரைஸ் குக்கர் அடுப்புக்கு மாத்திடலாம்.



வெங்காய ரைத்தா, மட்டன் குழம்பு, பெப்பர் சிக்கன் க்ரேவி உடன் செம காம்பினேஷன் :-)

சில குறிப்புகள்:
  • பேச்சுலர்ஸ் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் செய்யுங்க. அது  ரொம்ப ரொம்ப ஈசி. இன்னும் சாதம் உதிரி உதிரியாக வரும். அப்ப நீ ஏன் அதுல செய்யலன்னு கேட்கப்படாது :-) வழக்கம் போல என் ஒரு சொதப்பலில் அது என்ன ஆச்சுன்னு அதுக்கே தெரியல........
  • வீட்டில் உபயோகிக்கும் சாதாரண அரிசியே போதுமானது. விருப்பப்பட்டால் சீரகசம்பாவில் செய்யலாம். பாஸ்மதியிலும் செய்யலாம். ஆனால்  அரிசியின் வாசம் உண்மையான தேங்காய் சாத ருசியை கொஞ்சம் குறைக்கும்.
  • கறிவேப்பிலை தான் ரொம்ப முக்கியமான மணம் தரும் பொருள். கம்மியா போட்டுடாதீங்க. சொன்னபடி 3 கொத்து போட்டுடணும் :-)
  • அரிசி போட்ட பிறகு தான் உப்பு போடணும். இல்லைன்னா பால் திரிந்தது போல் இருக்கும்
  • நெய் தேவையில்லை. விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. நெய்யில் முந்திரி வறுத்தும் சேர்க்கலாம்
  • அடுத்த முக்கிய பொருள் தேங்காய் பால். முடிந்தவரை முதலில் பிழியும் பாலை உபயோகப்படுத்துங்க. 

அம்மம்மா சொன்ன கதை- ஊரில் வறட்சி மற்றும் வீட்டின் வறுமையின் காரணமா மற்றவர்களை போல் தினமும் புதுசாதம் குழம்பும் செய்ய முடியாதாம். ரம்ஜான் நேரத்தில் மற்ற பணக்கார குழந்தைகளை பார்த்து தன்னோட குழந்தைகளும் ஏங்கிட கூடாதுன்னு வீட்டில் இருந்த பொருட்கள வச்சு "இதான் தேங்கா சோறு"ன்னு சொல்லி கொடுப்பாங்களாம் அவங்க அம்மா.  அதனால் தான் வீட்டில் இருக்கும்  எளிய பொருட்களை மட்டுமே வச்சு செய்ய கூடிய குறிப்பா இருக்கு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS