Powered by Blogger.
RSS

சிம்பிள் தேங்காய் சாதம்

இந்த எளிய முறை தேங்காய் சாதம் எங்கம்மாவின் பாட்டி எங்க அம்மம்மாவுக்கு கத்து கொடுத்து எங்க அம்மம்மா எங்கம்மாவுக்கு சொல்லி கொடுத்து காலத்தின் கொடுமையாய்  என் கைக்கு வந்துருக்கு (பரம்பரை பரம்பரையா செஞ்சுட்டு வர  சமையலாக்கும் :-)  சிலோன் தேங்காய் சாதம்னு அவங்களா பேர வச்சுக்கிட்டாங்க. ஏன்னா அங்கே தான் தேங்காய்லாம் அதிகமா சேத்துக்குவாங்களாம் :-))  (அப்ப கேரளாலாம் உங்க லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டீங்களா?)


தேவைப்படும் பொருட்கள்
புழுங்கல் அரிசி- 2 டம்ளர்
தேங்காய் பால்- 6 டம்ளர்
கறிவேப்பிலை-3 கொத்து
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
எண்ணெய்-தாளிக்க
உப்பு-தேவைக்கு

செய்யும் முறை
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.(ஜாதிக்காய் பொடி,அன்னாசிபூ விருப்பப்பட்டால் சேர்க்கலாம்).
கறிவேப்பிலை நிறம் மாறும் முன்பே தேங்காய் பாலை சேர்க்கவும்.


நுரைத்து வரும் போது அரிசியும் உப்பையும் சேர்க்கவும்.ஹை ப்ளேமில்  பாதியளவாக பால் வற்றும் வரை வைத்திருக்கவும்.


பாதி அரிசி பாதி பால் என கீழே உள்ள போட்டோவில் உள்ள ஸ்டேஜில் இருக்கும் போது ஸ்லோ ப்ளேமில் 10 நிமிடங்கள் தம்மில்  வைக்கவும்.


அவ்வளவு தான். கமகம தேங்காய் சாதம் தயார்.  (எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் என்றால் இன்னும் ரொம்ப சுலபம். கேஸ் அடிப்பில் தாளித்து,பாலில் நுரை பொங்கியதும் ரைஸ் குக்கர் அடுப்புக்கு மாத்திடலாம்.வெங்காய ரைத்தா, மட்டன் குழம்பு, பெப்பர் சிக்கன் க்ரேவி உடன் செம காம்பினேஷன் :-)

சில குறிப்புகள்:
 • பேச்சுலர்ஸ் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் செய்யுங்க. அது  ரொம்ப ரொம்ப ஈசி. இன்னும் சாதம் உதிரி உதிரியாக வரும். அப்ப நீ ஏன் அதுல செய்யலன்னு கேட்கப்படாது :-) வழக்கம் போல என் ஒரு சொதப்பலில் அது என்ன ஆச்சுன்னு அதுக்கே தெரியல........
 • வீட்டில் உபயோகிக்கும் சாதாரண அரிசியே போதுமானது. விருப்பப்பட்டால் சீரகசம்பாவில் செய்யலாம். பாஸ்மதியிலும் செய்யலாம். ஆனால்  அரிசியின் வாசம் உண்மையான தேங்காய் சாத ருசியை கொஞ்சம் குறைக்கும்.
 • கறிவேப்பிலை தான் ரொம்ப முக்கியமான மணம் தரும் பொருள். கம்மியா போட்டுடாதீங்க. சொன்னபடி 3 கொத்து போட்டுடணும் :-)
 • அரிசி போட்ட பிறகு தான் உப்பு போடணும். இல்லைன்னா பால் திரிந்தது போல் இருக்கும்
 • நெய் தேவையில்லை. விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. நெய்யில் முந்திரி வறுத்தும் சேர்க்கலாம்
 • அடுத்த முக்கிய பொருள் தேங்காய் பால். முடிந்தவரை முதலில் பிழியும் பாலை உபயோகப்படுத்துங்க. 

அம்மம்மா சொன்ன கதை- ஊரில் வறட்சி மற்றும் வீட்டின் வறுமையின் காரணமா மற்றவர்களை போல் தினமும் புதுசாதம் குழம்பும் செய்ய முடியாதாம். ரம்ஜான் நேரத்தில் மற்ற பணக்கார குழந்தைகளை பார்த்து தன்னோட குழந்தைகளும் ஏங்கிட கூடாதுன்னு வீட்டில் இருந்த பொருட்கள வச்சு "இதான் தேங்கா சோறு"ன்னு சொல்லி கொடுப்பாங்களாம் அவங்க அம்மா.  அதனால் தான் வீட்டில் இருக்கும்  எளிய பொருட்களை மட்டுமே வச்சு செய்ய கூடிய குறிப்பா இருக்கு.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

29 comments:

F.NIHAZA said...

ஆஹா...
நா ஊருது....
படம் அருமை....

angelin said...

ஆமினா இது நாகர்கோவில் பக்கமும் ஸ்பெஷல் எங்க பாட்டி வீட்ல செய்வாங்க. SUPERB .பார்க்கவே அருமையா இருக்கு .

ஸாதிகா said...

புதிய சமையல் வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்!ஆஹா...தேங்காய்சாத ம் பரமக்குடியில் இருந்து இங்கு வரை மண மணக்குதே.அநேக இஸ்லாமிய இல்லங்களில் வெள்ளிக்கிழமைகளில் தயாரிக்கப்படும் மெனு அல்லவா நீங்கள் வாழை இலை பறிமாறி இருப்பவை!

ஆமினா said...

@நிகாஷா

தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி சகோதரி

ஆமினா said...

@ஏஞ்சலின்

ஓ அங்கே செய்வாங்களா..... இது பாட்டியின் கண்டுபிடிப்புன்னு தான் ரொம்ப நாளா என்னைய ஏமாத்திட்டிருக்காங்க வீட்ல :-)

ஆமினா said...

@ஸாதிகா அக்கா

இன்னும் தாளிச்சா, எள் கத்திரிக்காய்லாம் விட்டு போய்ச்சு லிஸ்ட்ல :-)

ஆமினா said...

நன்றி நிகாஷா
நன்றி ஏஞ்சலின்
நன்றி சாதிகா அக்கா

உங்களனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

இமா said...

வாழ்த்துக்கள் ஆமி.

7, 9, 10 & கடைசி 2 படமும் தெரியல எனக்கு.

ராதா ராணி said...

ஆமி,சமையல் எக்ஸ்பிரஸ் தேங்காய் சாதத்தோட ஆரம்பமே சூப்பர்...வாழ்த்துக்கள் !

ஆமினா said...

@இமா

நன்றி இமா

எனக்கு தெரியுதே இமா.....

மற்ற யாருக்காவது தெரியுதா?.....

ஆமினா said...

@ராதா

மிக்க நன்றி ராதா

இமா said...

இப்பவும் எனக்குத் தெரியல ஆமி.

கருப்புப் பெட்டில வெள்ளை முக்கோணமும் அதன் நடுவே வெள்ளை நிற ஆச்சரியக்குறியீடும்தான் தெரியுது. மீதிப் படங்கள் எல்லாம் ஒழுங்கா தெரியுது. சொன்ன இலக்கங்கள் மட்டும்தான் இப்படி இருக்கு.

சே.குமார் said...

ஆரம்பமே சூப்பர்...வாழ்த்துக்கள் !

ஸாதிகா said...

thokku pool seythu irukkum pepper chicken grevy kurippu utanee pootungkaL.next friday iwtha menuthaan.

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

முதல் பதிவு பிரியாணி போட்டு இருக்கலாம்

தேங்காய் சோறு அருமை. நாங்கள் நெய் விட்டு தாளித்து நெய் சோறு என்போம். ஊருக்கு ஊரு சாப்பாடு வித்தியாசம்தான்.

ஆமினா said...

@இமா
//இப்பவும் எனக்குத் தெரியல ஆமி.

கருப்புப் பெட்டில வெள்ளை முக்கோணமும் அதன் நடுவே வெள்ளை நிற ஆச்சரியக்குறியீடும்தான் தெரியுது. மீதிப் படங்கள் எல்லாம் ஒழுங்கா தெரியுது. சொன்ன இலக்கங்கள் மட்டும்தான் இப்படி இருக்கு.//

என்ன ப்ராப்ளம்னு தெரியல இமா.... பார்த்துட்டிருக்கோம்.....

இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே பிரச்சனை முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்

ஆமினா said...

@சாதிகா அக்கா
இன்னைக்கே உங்களுக்காக போட்டுடலாம்னு பார்த்தேன்.. போட்டோஸ்லாம் யாருக்கும் தெரியலையாம். என்ன பிரச்சனைன்னு தெரியல. சால்வ் ஆனதும் போட்டுடுறேன் அக்கா.... நெக்ஸ்ட் ப்ரைடே குள்ள :-)

ஆமினா said...

@ஆயிஷா

அடுத்தடுத்து போட்டுட்டா போச்சு..... :-)

நெய் சோறு நானும் பண்ணுவேன் ஆயிஷா.. அதுலையே தேங்காய் பால் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி,புதினா சேர்த்து பண்ணுனா தேங்காய் சோறுன்னு சொல்லுவோம் :-)

முடியும் போது பதிவுடுகிறேன்

வருகைக்கு நன்றி சகோதரி

ஆமினா said...

@சே.குமார்

மிக்க நன்றி சகோ உங்களின் தொடர் ஆதரவுக்கு

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் அக்கா,

சமையல் எக்ஸ்பிரஸில் மொதல் பதிவு வந்திட்டுதா..
வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

ஆஹா தேங்கா சாதத்துக்கு நான் வெஜ் காம்பினேசனா புதுசா இருக்கே... சாப்பிட்டு பாத்துட வேண்டியதான்... வாழ்த்துக்கள் தொடர்ந்து அசத்துங்கோ

Lakshmi said...

ஆமி இது புதுசா? இன்னிக்குத்தான் பாத்தேன். முதல்ல உள்ளவரவே பயம்தான். ஒரே நான் வெஜ் ஐட்டமா இருந்தது. அப்புரமா தேங்கா சாதம் பாத்துட்டு உள்ள வந்தேன். ஆமா இதுக்கு புழுங்கல் அரிசியா யூஸ் பண்ணூவாங்க?

ஆமினா said...

@நிரூபன்

மிக்க நன்றி தம்பி

ஆமினா said...

நன்றீ மாய உலகம்

ஆமினா said...

மாமி

இனி சைவம்னு ப்ராக்கெட்ல குடுத்துடுறேன் மாமி... அப்ப வர உங்களுக்கு ஈசியா இருக்கும்.

பழைய புழுங்கல் அரிசி தான் யூஸ் பன்ணனும். அறுசுவைல அன்பரசி பாஸ்மதியில் செஞ்சியிருந்தாங்க. நல்லா வந்ததாக சொன்னாங்க.

Lakshmi said...

நானும் சீரக சம்பாவில் செய்வேன்.

Jaleela Kamal said...

நாங்களும் அடிக்கடி செய்வோம், தேங்காசோறூ மீன் குழம்புன்னா ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ச்ச்
முத்துபேட்டை காரங்க
இதில் சிறிது இறாலும் சேர்ப்பார்கள்.

ஆமாம் இஞ்சி பூண்டு சேர்க்கலையா?

Jaleela Kamal said...

வாழையிலை பார்த்ததும் இப்பவே சாப்பிடனும் போல இருக்கு

Mohammed Mohaideen said...

thank u

Post a Comment