Powered by Blogger.
RSS

ப்ளைன் சிக்கன் பிரியாணி





தேவைப்படும் பொருட்கள்
பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி- ஒரு கிலோ
சிக்கந் ஒரு கிலோ
நெய்- 2 குழிகரண்டி
எண்ணெய்-ஒரு குழிகரண்டி
வாசனை பொருட்கள் (பட்டை,ஏலம்,கிராம்பு etc)- தேவைக்கு
முந்திரி-10
வெங்காயம்-3
கொத்தமல்லி- ஒரு கப்
புதினா- ஒருகப்
பச்சைமிளகாய்-5
இஞ்சிபூண்டு விழுது- 3 குழிகரண்டி
தக்காளி-5
தயிர்- ஒரு கப்
தேங்காய் பால்- 4 கப்
தண்ணீர்- 4 கப்
பிரியாணி எசன்ஸ்- 2 ஸ்பூன்
ஆரஞ்ச் கலர்- சிறிதளவு
எலுமிச்சை -3



குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு வாசனை பொருட்கள் மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.





அதன் பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.





கொத்தமல்லி,புதினா, மிளகாய் சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.




இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.





பின்னர் தக்காளி மற்றும் தயிர் சேர்த்து  உடைபடாமல் வதக்கவும்.





இப்போது சிக்கனை சேர்த்து கால் மணி நேரம்(அரை வேக்காடாக) வதக்கவும்.




அதன் பின்னர் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.





கொதிக்கும் முன்பே (நுரை பொங்கி வரும் போதே) சுத்தம் செய்த அரிசியை சேர்க்கவும்.




முக்கால் வாசி நீர் வற்றியதும் எசன்ஸ், எலுமிச்சை சாறு விட்டு ஒருசேர எல்லா இடங்களிலும் படும்படிகிளறவும்.





அதன் பின் ஆரஞ்சு கலரில் நீர் விட்டு கலந்து சுற்றி ஊற்றிவிட்டு கிளறாமல் அப்படியே தம்மில் போடவும்.


 10 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு ஆவி அடங்கியதும் பரிமாறவும்.
பிரியாணிக்கு என்னன்ன சைட்டிஸ் மெய்ன் டிஸ்ன்னு நா சொல்லியா தெரியணும் ;-)

















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

11 comments:

தாமரைக்குட்டி said...

அப்பிடியே தாமரைக்கு ஒரு பார்சல்....

Unknown said...

ஓகே.... நீங்க சொன்ன மாதிரியே செய்தாகிவிட்டது. கடைசியில் குக்கரை திறந்து பார்த்தால் அல்வா பதத்தில் ஒரு அயிட்டம் இருக்கிறதே. இதை என்ன செய்ய வெட்டி பரிமாறவா இல்லை ஐஸ் கிரீம் ஸ்கூப்பில் எடுக்கவா????

Unknown said...

இந்த ஓரே பிரியாணியை எத்தனை நாளைக்குத்தான் செய்வீங்க. மாத்தி யோசிக்கவே மாட்டீங்களா????

ஹாலிவுட்ரசிகன் said...

இது நமக்கு முடியாது போல இருக்கு. நம்ம அக்காவை காக்கா புடிச்சு ஞாயிறு செஞ்சு பாத்திருவோம்.

Radha rani said...

சிக்கன் ,அரிசி ,இரண்டும் ஒரே அளவா சொல்றிங்களே...சரி ட்ரை பண்றேன்.

ஆமினா said...

@தாமரை
//அப்பிடியே தாமரைக்கு ஒரு பார்சல்....//

கொரியர் பணம் மறக்காம அனுப்பிடுவதானே???

ஆமினா said...

@விஜயன்

//ஓகே.... நீங்க சொன்ன மாதிரியே செய்தாகிவிட்டது. கடைசியில் குக்கரை திறந்து பார்த்தால் அல்வா பதத்தில் ஒரு அயிட்டம் இருக்கிறதே. இதை என்ன செய்ய வெட்டி பரிமாறவா இல்லை ஐஸ் கிரீம் ஸ்கூப்பில் எடுக்கவா????//

மாரியாத்தாவுக்கு நேர்த்திக்கடன்னா? உங்கள ப்ரியாணி பண்ண சொன்னா கூழாக்கி விட்டா என்ன செய்வேன்?? அவ்வ்வ்வ்வ்

இருந்தாலும் ஐடியா நல்லா இருக்கு! என் பேர சொல்லி சாப்டுங்க! உயிரோட இருந்தா பேஸ்புக் ஸ்டேடஸ் மூலமா மீட்டிக்கலாம்! :-)

ஆமினா said...

@விஜயன்

//இந்த ஓரே பிரியாணியை எத்தனை நாளைக்குத்தான் செய்வீங்க. மாத்தி யோசிக்கவே மாட்டீங்களா????//

ஙே...?

இது கொஞ்சம் வித்தியாசமா செஞ்சுருக்கேன்! ட்ரை பண்ணி பாருங்கோ.. வித்தியாசம் தெரியும் !

ஆமினா said...

@ஹாலிவுட் ரசிகன்

//இது நமக்கு முடியாது போல இருக்கு. நம்ம அக்காவை காக்கா புடிச்சு ஞாயிறு செஞ்சு பாத்திருவோம்.//

அடிச்சு பிடிச்சாவது ஞாயிறு செய்ய சொல்லி மறக்காம இந்த அக்காவுக்கு பதில் போட்டுடுங்கோ

ஆமினா said...

@ராதா ராணி

//சிக்கன் ,அரிசி ,இரண்டும் ஒரே அளவா சொல்றிங்களே...சரி ட்ரை பண்றேன்.//

ஆமா ராதா! பிரியாணிக்கு எப்பவும் சரிசமமா தான் போடணும்.

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

Anonymous said...

ஆமி,
சூப்பர் பிரியாணி...

Post a Comment