Powered by Blogger.
RSS

சிக்கன் கிரேவி நூடுல்ஸ்





தேவையான பொருட்கள்
ப்ளைன் நூடுல்ஸ் -  1 கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
பட்டை,ஏலக்காய், கிராம்பு- ஒவ்வொன்றிலும் 2
பச்சைமிளகாய்-2
எண்ணெய்- 4 ஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
சின்ன வெங்காயம்- 20
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
தக்காளி-3
தயிர்-3 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
மல்லிதூள்- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- கால் ஸ்பூன்
மிளகுதூள்- கால் ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு-தேவைக்கு

செய்முறை





குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய் சேர்க்கவும்.





கறிவேப்பிலை, பொடியாய் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.





இஞ்சி பூண்டு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.





பின்னர் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.





பின்னர் கெட்டித்தயிர் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.





தூள் வகைகளை சேர்த்து  வதக்கி வேகவிடவும்.





சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி சுருளும் வரை வதக்கிவிடவும்.



வேக வைத்த எடுத்த  நூடுல்ஸை சேர்த்து ஒருசேர  கிளறவும்.  3 நிமிடங்கள் நன்கு  மசாலா சேர கிளறி விட்டு பின்னர் இறக்கவும்.





சிக்கன் க்ரேவி நூடுல்ஸ் தயார்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

26 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பிளாக்கு சும்மா பளிச்சினு இருக்கு

வலையுகம் said...

போட்டோக்களும் பளிச் பளிச்சுனு இருக்கு
தேளிவான படங்கள்

Aashiq Ahamed said...

assalaamu alaikum...

masha allah

Radha rani said...

நூடுல்ஸ் நல்லா கமகமன்னு இருக்கும் போல இருக்கே... படமும் தெளிவா இருக்கு.செய்து பார்க்கிறேன் ஆமி..:)

ஆமினா said...

@ஹைதர் அண்ணா

வ அலைக்கும் சலாம் வரஹ்...

//பிளாக்கு சும்மா பளிச்சினு இருக்கு//
ப்ளீச்சிங்க் பவுடர் போட்டதுனால இருக்குமோ ஹி..ஹி...ஹி...

ஆமினா said...

@ஹைதர் அண்ணா

/போட்டோக்களும் பளிச் பளிச்சுனு இருக்கு
தேளிவான படங்கள்//

நன்றி அண்ணா

ஆமினா said...

@சகோ ஆஷிக்

வ அலைக்கும் சலாம் வரஹ்...

நன்றி சகோ

ஆமினா said...

@ ராதா ராணி
//நூடுல்ஸ் நல்லா கமகமன்னு இருக்கும் போல இருக்கே... படமும் தெளிவா இருக்கு.செய்து பார்க்கிறேன் ஆமி..:)//

ரொம்ப நன்றி ராதா :-)

காட்டான் said...

இத நான் வீட்டில் செய்து பார்க்கப்போறேன். சரிவராட்டி நீங்கதான் செலவை திருப்பி தரனும்.;-)) படங்களே தெளிவான விளக்கம் தருகின்றது..!!

ஹாலிவுட்ரசிகன் said...

ஆமினாக்கா ... சிக்கன் துண்டு ஏற்கனவே வேகவைத்து இருக்க வேண்டுமா? 3 நிமிடங்களில் பச்சை இறைச்சி அவிந்துவிடுமா?

இனி தனியான இரவுநேரங்களிற்கு மாகி நூடுல்ஸை தவிர்த்து இதை செய்து பார்க்க வேண்டும்.

ஆமினா said...

@காட்டான் அண்ணா

கவலபடாம ட்ரை பண்ணுங்க :-)


நன்றி அண்ணா

ஆமினா said...

@ஹாலிவுட் ரசிகன்

இல்ல தம்பி! 3 நிமிடம் என்பது இடைவெளிவிட்டு அடுத்த பொருள் சேர்க்க சொன்னது! வேகும் வரை ப்ரஷர் குக்கரில் இருக்க வேண்டும். போன் இல்லாததால் வேகும் நேரம் கம்மியா தான் இருக்கும்.


கண்டிப்பா செய்து பாருங்க

K said...

ப்ளைன் நூடுல்ஸ் - 1 கப் ./////

ப்ளேன் நூடுல்ஸா? கேள்விப்பட்டதே இல்லையே? அதாவது நாம ப்ளேனில் போகும் போது, அங்க குடுப்பாய்ங்களே, அந்த நூடுல்ஸா?

K said...

எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் /////

கரீக்டா 100 கிராம் மட்டும் தானா? 105 கிராம் போட்டா என்னாகும்? :-)

K said...

பட்டை,ஏலக்காய், கிராம்பு- ஒவ்வொன்றிலும் 2 //////

கராம்பு தெரியும்! அதென்ன கிராம்பு?

K said...

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய் சேர்க்கவும்.//////

ஸாரி, எந்த எண்ணைன்னு சரியா சொல்லுங்க! ஒரே கன்ஃபியூஷன்!

K said...

பின்னர் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.////////

அப்போ மேலே சொன்ன வெங்காயம், பச்சைமிளகாய் இதையெல்லாம் சுத்தம் செய்ய்த் தேவையில்லையா?

K said...

சிக்கன் க்ரேவி நூடுல்ஸ் தயார்.///////

அவ்ளோ தானா?
கையைக் கழுவிட்டு சாப்பிடணும்!
சாப்பிட்டதுக்கு அப்புறம் தண்ணீர் குடிக்கணும்னு ஏன் சொல்லல?

K said...

ஹா ஹா ஹா நிஜமாவே சிறந்த சமையல் குறிப்பு ஆமினா! நா ச்சும்மா கலாய்ச்சேன்! ஒவ்வொரு படங்களிலும் உங்க கடின உழைப்பு தெரியுது! வாழ்த்துக்கள்!

ஆமினா said...

எப்பா ஐடியா

மொதல்ல கண்ணாடிய கழட்ட்டி வச்சுட்டு வாசீங்கோ

ஆமினா said...

@ஐடியாமணி

எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் /////

கரீக்டா 100 கிராம் மட்டும் தானா? 105 கிராம் போட்டா என்னாகும்? :-)//

குட் கொஸ்டீன்
அதாவது அதாகப்பட்டது என்னாகும்னா

1. கண்ணு அவிஞ்சுடும்
2.காது புகைஞ்சுடும்
3. வயிறு எரிஞ்சுடும்
4. கை கால் வெளங்காம போயிடும்.

இதெல்லாம் தேவையா? நீங்களே யோசிச்சுக்கோங்க ஹா...ஹா..ஹா...

ஆமினா said...

@ஐடியா

பட்டை,ஏலக்காய், கிராம்பு- ஒவ்வொன்றிலும் 2 //////

கராம்பு தெரியும்! அதென்ன கிராம்பு?//


கடல்ல... நீந்திக்கிட்டே போகுமே... அது தான் அது அவ்வ்வ்வ்வ்
(யோ எங்க ஊரில் கிராம்பு அல்லது லவங்கம்னு சொல்லுவோம்)

ஆமினா said...

@ஐடியாமணி
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய் சேர்க்கவும்.//////

ஸாரி, எந்த எண்ணைன்னு சரியா சொல்லுங்க! ஒரே கன்ஃபியூஷன்!
//

வெளெக்கெண்ணெய்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆமினா said...

@ஐடியாமணி

பின்னர் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.////////

அப்போ மேலே சொன்ன வெங்காயம், பச்சைமிளகாய் இதையெல்லாம் சுத்தம் செய்ய்த் தேவையில்லையா?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வேணாம்லே... அழுதுடுவேன்!!!!

உங்களையெல்லாம் ஏன் சுனாமி தூக்கிட்டு போகல? :'(

ஆமினா said...

@ஐடியாமணி

சிக்கன் க்ரேவி நூடுல்ஸ் தயார்.///////

அவ்ளோ தானா?
கையைக் கழுவிட்டு சாப்பிடணும்!
சாப்பிட்டதுக்கு அப்புறம் தண்ணீர் குடிக்கணும்னு ஏன் சொல்லல?//

சாரி சாரி
ஆக்சுவலி அதையெல்லாம் ஐடியாமணிக்கு கண்டிப்பா சொல்லியிருக்கணும்! யார் யார் செய்யலையோ அவங்களுக்கு தானே சொல்ல முடியும்.. நாத்தப்பயலுவளா.... ஹி..ஹி...ஹி...

ஆமினா said...

@ஐடியாமணி

ஹா ஹா ஹா நிஜமாவே சிறந்த சமையல் குறிப்பு ஆமினா! நா ச்சும்மா கலாய்ச்சேன்! ஒவ்வொரு படங்களிலும் உங்க கடின உழைப்பு தெரியுது! வாழ்த்துக்கள்!//

அடடா
இப்பவாவது மனசு வந்துச்சே :-)

ரொம்ப நன்றிங்க

வீட்டில் செய்து பாக்க சொல்லுங்க

வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி சகோ

Post a Comment