Powered by Blogger.
RSS

தேங்காய் சாதம் (ப்ரைட் ரைஸ்)


தேவையான பொருட்கள்

சாதம்-  ஒரு கப்
வெங்காயம்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பச்சைமிளகாய்-3
கொத்தமல்லி- சிறிதளவு
வெள்ளைபூடு-10
தேங்காய்- கால்மூடி
வரமிளகாய்-2
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
எண்ணெய்- 4 ஸ்பூன்

தாளிக்க
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைபருப்பு
நிலக்கடலைபருப்பு-விரும்பினால் மட்டும்




வெங்காயம், கொத்தமல்லி, பூடு,   ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நான்காக நறுக்கிக்கொள்ளவும்.




 தேங்காயை துருவிக்கொள்ளவும். அல்லது நீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.



 கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களுடன் பூடு, பச்சைமிளகாயை  சேர்த்து வதக்கவும்.




வாசனை மாறியதும் கறிவேப்பிலை, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.





பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.




மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடங்கள் மட்டும் வதக்கிவிடவும்.






தீயை அணைத்துவிட்டு சாதம் கொட்டி கிளறவும்.





காரமான கிரேவி வகைகள், தாளிச்சா,  பொரியல் வகைகள்,  வறுத்த மீன், சிக்கன் 65 முதலியவை நல்ல காம்பினேஷன் :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

15 comments:

Radha rani said...

இதே முறையில் தான் நானும் செய்வேன் ஆமி..தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காய் பாலெடுத்து செய்வேன்.

Radha rani said...

இதே முறையில் தான் நானும் செய்வேன் ஆமி..தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காய் பாலெடுத்து செய்வேன்.

அஸ்மா said...

வித்தியாசமான தேங்காய் சாதம். ட்ரை பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் :) நாங்க வேறு விதமா செய்வோம் ஆமி.

விச்சு said...

தேங்காய் சாதமும் நீங்கள் சொன்ன காம்பினேஷனையும் நினைத்தால் ஸ்ஸ்ஸ் சூப்பர்.

Unknown said...

இன்றைய சமையல் சூப்பர்

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

ஜெய்லானி said...

//என்னையும் நம்பி வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் //

இதுல எதுவும் வில்லங்கம் இல்லையே...ஹி..ஹி... :-)))

ஜெய்லானி said...

தேங்காய் சாதம் மதியம் சாப்பிட்டு தூங்கினா இரவு 3 மணிக்குதான் விழிப்பு வரும் எனக்கு வெரி பேட் :-)))).சோ நோ கமெண்ட்ஸ் :-))



தட்டு , பிளேட் , கடாய் சூப்பர் :-))))))))))))

ஆமினா said...

@ராதாராணி

அட! அந்த செய்முறையை போடுங்க ராதா! நானும் செய்ய ஏதுவா இருக்கும்

ஆமினா said...

@அஸ்மா
சமையலில் நீங்க தான் ராணி ஆச்சே! அந்த செய்முறையை சொல்லுங்க... அதையும் செஞ்சுடுறேன் :-)

ஆமினா said...

@விச்சு
ரொம்ப நன்றிங்க

ஆமினா said...

@சதீஷ்

ரொம்ப நாளைக்கு அப்பறம் பார்த்ததில் சந்தோஷம் சதீஷ்

வருகைக்கு நன்றி

ஆமினா said...

@ஜெய்லானி
////என்னையும் நம்பி வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் //

இதுல எதுவும் வில்லங்கம் இல்லையே...ஹி..ஹி... :-)))//

இப்படியா டவுட்டா கேக்குறது :-))) சந்தேகமே வேணாம் ஹி..ஹி..ஹி.. நோ வில்லங்கம்னு சொல்ல வந்தேன் அவ்வ்வ்வ்

ஆமினா said...

@ஜெய்லானி
//தேங்காய் சாதம் மதியம் சாப்பிட்டு தூங்கினா இரவு 3 மணிக்குதான் விழிப்பு வரும் எனக்கு வெரி பேட் :-)))).சோ நோ கமெண்ட்ஸ் :-))
//
ஹா..ஹா..ஹா...

நீங்களே ஆல்ரெடி கட்டில்க்கு கீழ எப்பவும் தூங்குறவரு! (ஆன்லைன்ல இருந்தாலும் :-) தேங்காய் சாதம்னா சொல்லவா வேணும் :-)

//தட்டு , பிளேட் , கடாய் சூப்பர் :-))))))))))))//
//

ஹி..ஹி..ஹி..

:-)))))))))))))))))))

arul said...

nice presentation

cookbookjaleela said...

mika arumai

Post a Comment