Powered by Blogger.
RSS

பெப்பர் சிக்கன்

தேவைப்படும் பொருட்கள்

    * சிக்கன் -1 கிலோ
    * மிளகு- 2 ஸ்பூன்
    * வரமிளகாய்- 6
    * உப்பு-தேவைக்கு
    * வெங்காயம்-3
    * தக்காளி-4
    * கறிவேப்பிலை- ஒரு கொத்து
    * இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
    * எண்ணெய்- 2 குழி கரண்டி

செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து நீரை முழுவதுமாக வடித்து வைக்கவும்.

பட்டை,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்யவும்.மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

சிக்கனில் மிளகு தூள்,உப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து பின்னர்  15 நிமிடம் ஊற வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடித்த வாசனை தூளை சேர்த்து வதக்கவும்.
பின் ஊற வைத்த கோழியை சேர்த்து கிளறவும். நீர் சேர்க்க தேவையில்லை. கறி விடக்கூடிய  நேரே போதுமானது.
கோழி வேகும் வரை மிதமான தீயில் வைத்து முக்கால் பாகம் வெந்ததும்  ஹை ப்ளேமில் சுருள சுருள கிளறவும்.வெறும் தக்காளி மற்றும் மிளகுதூள் கொடுக்கும் கலரே இதற்கு போதுமானது. (மஞ்சள் தூளோ, மிளகாய் தூளோ சேர்க்க வேண்டாம்.
பெப்பர் சிக்கன் தயார். தேங்காய் சாதம், பிரியாணி போன்றவற்றுடனும் ரசம், சாம்பார் போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். செமி கிரேவி பதத்தில் இருக்க வேண்டும்.


***************************

சாதிகா அக்காவுக்காக அவசரம் அவரசமாய் இந்த பதிவு.  போன பதிவில் பலருக்கும் படம் தெரியவில்லை. என்ன காரணம்னு தெரியல (என்ன காரணம்னு கூகுள்க்கே தெரியலையாம், நம்மலாம் எம்மாத்திரம் ஹி..ஹி...ஹி...). இன்னும் சிலருக்கு ஒரே போட்டோ இரு முறை வருவதாக சொன்னார்கள். விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என நினைக்கிறேன் (இறைவன் நாடினால்).


இந்த குறிப்பிலும் படங்கள் தெரியவில்லை எனில் தெரியப்படுத்தவும். அடுத்தடுத்து வரும் பதிவுகளில் படங்களை தவிர்த்து வெறும்  எழுத்து குறிப்பு மட்டும் கொடுத்து பிரச்சனை சரியானதும் மீள் பதிவிடலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

13 comments:

angelin said...

ரெசிபி சூப்பர் .ஒன்பது .meat pictures தெரியுது ஆமினா .

Riyas said...

சலாம்,
படங்கள் அசத்தல்,, தொடர்ந்து அசத்துங்க ஆமினா,,

அஸ்மா said...

சலாம் ஆமினா! 'பெப்பர் சிக்கன்' எனக்கு மிகவும் பிடித்தவற்றில் ஒன்று :) ஃபோட்டோஸ் எல்லாம் அருமை.

//இன்னும் சிலருக்கு ஒரே போட்டோ இரு முறை வருவதாக சொன்னார்கள். விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என நினைக்கிறேன் (இறைவன் நாடினால்). இந்த குறிப்பிலும் படங்கள் தெரியவில்லை எனில் தெரியப்படுத்தவும்//

ஓகே, தெரியப்படுத்துகிறேன் :)

"சிக்கனை சுத்தம் செய்து நீரை முழுவதுமாக வடித்து வைக்கவும்" - இதற்கான படம் லார்ஜ் சைஸில் 7 முறையும், ஸ்மால் சைஸில் 1 முறையும் தெரிகிறது. (ஒரு தடவை ஃபோட்டோ போட்டால் எங்களுக்கு புரியாது, மக்குன்னு நினைச்சிட்டீங்களோ? :)))))

"வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். சிக்கனில் மிளகு தூள்,உப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து பின்னர் 15 நிமிடம் ஊற வைக்கவும்" - இதற்கான ஃபோட்டோ லார்ஜில் 1, ஸ்மாலில் 1 உள்ளது தோழி. அதற்கடுத்த 2 போட்டோக்களும் இரண்டிரண்டு தடவை வந்து, பிறகு மீண்டும் "சிக்கனை சுத்தம் செய்து..." போட்டோ 2 முறை பதிவாகியுள்ளது. புதுசா சமையல் கத்துக்கிறவங்க பெப்பர் சிக்கன் ரெடியானவுடன் மீண்டும் சிக்கனை சுத்தம் செய்து விடப்போகிறாங்கபா... பார்த்து... ஜாக்கிரதையா ஃபோட்டோவ உடனே திருத்துங்க ;))))

suryajeeva said...

திருவள்ளுவரின் குறள் வழி நடப்பதால் நான் சைவ குரங்கு

ஸாதிகா said...

ரொம்ப சந்தோஷம் ஆமினா.நான் இப்பதான் ரெஸிப்பி பார்த்தேன்.அதற்குள் இன்னிக்கு லஞ்ச் வேலை முடிந்துவிட்டது.எனக்காக இவ்வளவு விரைவாக ரெஸிப்பீ போட்டதற்கு மிக்க மகிழ்ச்சி ஆமினா.அடுத்த வெள்ளி உங்கள் ரெஸிப்பிதான்.செய்ததுடன் படமும் எடுத்து மெயில் மபண்ணுகின்றேன்.

சிக்கனின் போட்டோ மட்டும் ஐந்து முறை தெரிகின்றது.கவனிக்கவும்.

ராதா ராணி said...

ஆமி..எனக்கு ஒரே படம் 5 முறை வருகிறது..செய்முறை விளக்கம் நல்லா இருக்கு.சளித்தொல்லைக்கு இப்பிடி செய்து சாப்பிட்டா ரொம்ப நல்லது.

ஆமினா said...

riyas

வ அலைக்கும் சலாம் வரஹ்

மிக்க நன்றி சகோ

ஆமினா said...

ஏஞ்சலின்,அஸ்மா,சாதிகா அக்கா,ராதா

என்ன பிராப்ளம்னே தெரியல..... போட்டோஸ்லாம் எல்லாருக்கும் நிறைய தடவ காட்டுது (எனக்கு மட்டும் சரியா காட்டுது :-(

இப்ப ஒரே ஒரு போட்டோ மட்டும் வச்சுருக்கேன்....

தகவலுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோஸ்

சூர்ய ஜீவா
மிக்க நன்றி சகோ

Powder Star - Dr. ஐடியாமணி said...

புதிய பதிவுக்கு வாழ்த்துக்கள்! டெம்ப்ளேட் அசத்தலா இருக்கு!

மாய உலகம் said...

ஹய்யோ ஹய்யோ கலக்கலான நான் வெஜ் ஐட்டம்ஸ்.. ஆரம்பத்துலயே கலக்க ஆரம்பிச்சுட்டீங்க.. அடுத்த வாரத்திலருந்து செய்து சாப்பிட்டுட வேண்டியதான்.. சூப்பர் டிப்ஸ்

Asiya Omar said...

இன்று தான் இந்த பதிவை பார்க்கிறேன்.அருமை.படங்கள் சூப்பர்.

கூகிள்சிறி .கொம் said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

SmArt said...

ella picture-hm theriyuthu... over.....over...........

Post a Comment