தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்- 100 கிராம்
புளி -ஒரு நெல்லிகாய் அளவு (ஊற வைத்தது)
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
பூடு-முழுதாக ஒன்று
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கடுகு, ஊளுந்து,கடலைபருப்பு-1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-கால்ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
சாம்பார் பொடி-2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- ஒரு குழி கரண்டி
வெண்டைக்காயை சுத்தம் செய்து நீரை துடைத்து விட்டு 2 இன்ச் அளவுக்கு வெட்டவும். அதை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு 5 நிமிடம் வதக்கவும். இதன் மூலம் பிசிபிசிப்பு தன்மை ஓரளவுக்கு நீங்கும் :-)
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, கடலைபருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்து முடித்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உரித்த பூடுகள் சேர்த்து வதக்கவும்
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். குழைந்ததும் வதக்கிய வெண்டிக்காயை சேர்க்கவும்.
அதன் பின்னர் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்
மசாலா ஒன்றோடொன்று சேர்ந்ததும் புளி கரைசலை சேர்த்து வேகவிடவும்.
மசாலா நீர் பாதியாக வற்றி சுருண்டதும் இறக்கிவிடவும்.
வெண்டைக்காய் புளிக்கறி (வெண்டைக்காய் மண்டி) தயார். வெரைட்டி ரைஸ், சாம்பார் சாதம் உடன் அருமையாக இருக்கும். மிக முக்கியமாக பழைய கஞ்சிக்கு சூப்பர் காம்பினேஷன். சுண்ட வச்ச குழம்பு இல்லையென்று நினைப்பவர்களுக்கு உடனடியாக இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் :-)
குறிப்பு- புளியை நீரில் ஊற வைப்பதற்கு பதில் அரிசி கலைந்த நீரில் ஊற வைத்து உபயோகித்தால் இன்னும் சுவை கூடும். வீட்டுல மண்சட்டி இருந்தா மிஸ் பண்ணாதீங்க. அதுல செஞ்சா இன்னும் கிராமிய மணமும், மண் வாசனையும் சேர்ந்து கூடுதலா 2 கோப்பை கஞ்சி உள்ளே போகும் :-))
30 comments:
வெங்காயம் படத்தில் உள்ளது போல் அல்லாமல் இன்னும் போடி பொடியாக நறுக்கினால் சுவையில் மாற்றம் இருக்குமா?
ஆமி வெண்டைக்காய் புளி கறி படங்களும் செய்முறையும் ரொம்ப நல்லா இருக்கு.
//வெங்காயம் படத்தில் உள்ளது போல் அல்லாமல் இன்னும் போடி பொடியாக நறுக்கினால் சுவையில் மாற்றம் இருக்குமா?//
முழுசா இருக்குற 2 வது போட்டோவில் போட்டத சொல்றீங்களா? :-)
நீளவாக்கில் நறுக்கினாலும் பொடிபொடியாய் நறுக்கினாலும்சுவையில் மாற்றம் இருக்காது சகோ. நான் நீளவாக்கில் நறுக்கியுள்ளேன். :-)
நன்றி மாமி :-)
இந்தக்கடைய(website)எப்ப ஆரம்பிச்சீங்க? வெண்டைக்காய் போட்டோவை ரொம்ப க்ளோஸ் அப்ல காட்டாதீங்க. இருக்குற பசிக்கு சிஸ்டத்த கடிச்சிற போறேன்.
அருமை....
நாம அப்படி சமைத்ததே இல்லை.....
செய்து பார்க்கனும்....
எங்க ஊரில்....புளிக்கரைசலுக்குப் பதில்....தேங்காயின் இருக்கமான பால் கொஞ்சம் ஊற்றி சமைப்போம்....
வலைப்பூ டிசைன் அசத்தல்.
எல்லாப்படமும் போட்டீங்களே? அதை சாப்பிட்டு முடிச்சவங்க ரியாக்சனை போடவே இல்லையே?
படம் ஐந்தை பார்த்து கேட்டேன், தகவலுக்கு நன்றி
நல்ல சமையல் தான்.எங்க அம்மாவைதான் செய்ய சொல்லனும்
கடலை பருப்பு போட்டு செய்ததில்லை.ஏறக்குறைய இது மாதிரி தான் செய்வேன்.உங்க முறையில் ட்ரை பண்ணி பாத்துடறேன் ஆமி.நல்லாஇருக்கு குறிப்பு.அரிசி கழுவின தண்ணிய சேர்த்தா கொஞ்சம் கிரேவியா இருக்கும் . கரெக்டா ஆமி..))
@சிவகுமார்
//இந்தக்கடைய(website)எப்ப ஆரம்பிச்சீங்க? வெண்டைக்காய் போட்டோவை ரொம்ப க்ளோஸ் அப்ல காட்டாதீங்க. இருக்குற பசிக்கு சிஸ்டத்த கடிச்சிற போறேன்...
//
இதுக்கு தான் கட பக்கம் அடிகடி வரணும்னு சொல்றது... விபரீத முடிவு எடுத்து விபரமா எழுதிய பின்னுமா இந்த கேள்வி? ஐயகோ என் செய்வேன் :-))
@நிகாஷா
//அருமை....
நாம அப்படி சமைத்ததே இல்லை.....
செய்து பார்க்கனும்....
எங்க ஊரில்....புளிக்கரைசலுக்குப் பதில்....தேங்காயின் இருக்கமான பால் கொஞ்சம் ஊற்றி சமைப்போம்....//
வெண்டைககய் பால் கறியை சொல்றீங்களா?
செய்து பாருங்க நிகாஷா
நல்லா இருக்கும்
@சிவகுமார்
//வலைப்பூ டிசைன் அசத்தல்//
:-)
நன்றி சகோ
//எல்லாப்படமும் போட்டீங்களே? அதை சாப்பிட்டு முடிச்சவங்க ரியாக்சனை போடவே இல்லையே?//
:-(
டுக்கா
@சூர்யஜீவா
மிக்க நன்றி சகோ
@சதீஷ்
அம்மாவ செய்ய சொல்லிட்டு எப்படி இருந்துச்சுன்னு என்கிட்ட சொல்லுங்க ;-)
@ராதா
ஆமா ராதா.. கொஞ்சம் கொழகொழப்பு கொடுக்கும். :-)
தயிர் சாதத்திற்க்கு நல்ல காம்பினேஷன்!!
ஸலாம் சகோ..
முதல் முதல்ல வந்துருக்கேன்..பால்பாயாசம் எதாவது குடுத்து விருந்தாளிய,அண்ணன உபசரிப்பிங்களா?? :)
(அண்ணன்கிர மருவாதி இல்லாமலா போய்டும்..ம்ம்.பாப்போம்..)
சமையல் குறிப்பு எல்லாம் நல்லாவே போடுரீங்க..
பட்................
இதுல எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்..:)
புளி -ஒரு நெல்லிகாய் அளவு (ஊற வைத்தது)
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
இதெல்லாம்...
100 வெண்டக்காய்க்கு பத்துமா?....இருந்தாலும் 100 வெண்டக்கா ஜாஸ்தி...
வெண்டக்கா நெரையா சாப்டா கணக்கு வரும்னு கணக்கு பண்ணுதியலா??? ஹி ஹி ஹி..
அன்புடன்
ரஜின்
@மேனகா
ம் ஆமா...
நானும் ட்ரை பண்ணி பார்த்துருக்கேன் (பட் நா சாப்பிடல. என்னவர் சொன்னாக :)
வருகைக்கு நன்றி மேனகா
@ரஜின் அண்ணா
வ அலைக்கும் சலாம் வரஹ்
//ஸலாம் சகோ..
முதல் முதல்ல வந்துருக்கேன்..பால்பாயாசம் எதாவது குடுத்து விருந்தாளிய,அண்ணன உபசரிப்பிங்களா?? :)
//
உங்களுக்காகவே புதுவிதமா பாயாசம் பண்ணலாம்னு இருக்கேன். சைனைட் பாயாசம் :-)
எப்படி இருக்கு தலைப்பு... கூடிய விரைவில் :-))
எப்படா வாரலாம்னு காத்துட்டிருக்குற மாதிரியே தெரியுதே....
100 கிராம். இப்ப மாத்திட்டேன் போதுமா? :-))
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா
முடியல.... இவுகளுக்காகவே குளுகோஸ் ஏத்தணும் போல
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமினா அக்கா,
இந்த ரெஸிப்பி செய்து பார்க்க விருப்பம்.படங்களைப் பார்த்தாலே ஆவலாக உள்ளது.
1.தக்காளி(2),வெங்காயம்(2) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ முடியுமா.
2.நீங்கள் படத்தில் காட்டியிருக்கும் முழு பூடு சிறிதாக உள்ளது.
இங்கு மலைப்பூடு தான் கிடைக்கிறது.பெரிய பெரிய பற்களாக உள்ளது.இந்த ரெஸிப்பிக்கு எத்தனை பூண்டுபல் உபயோகிக்கலாம்.
நன்றி.
தாமத்திற்கு மன்னிக்கவும் ராஜ்
//1.தக்காளி(2),வெங்காயம்(2) போன்றவை கிராம் அளவில் தந்து உதவ முடியுமா//
தக்காளி- 50 கிராம்
வெங்காயம்- 50 கிராம்
//.நீங்கள் படத்தில் காட்டியிருக்கும் முழு பூடு சிறிதாக உள்ளது.
இங்கு மலைப்பூடு தான் கிடைக்கிறது.பெரிய பெரிய பற்களாக உள்ளது.இந்த ரெஸிப்பிக்கு எத்தனை பூண்டுபல் உபயோகிக்கலாம்.//
அப்படியே உபயோகிக்கலாம் சகோ. மாற்றம் எதுவும் இருக்காது. இன்னும் சுவை கூடவே செய்யும். பத்து போடுங்க
நன்றி
ஆமினா அக்கா,
உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி.
இன்று உங்கள் வெண்டைக்காய் மண்டி செய்தோம்.தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது,very nice combination .எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.செய்வதற்கு சுலபமாக, அதேநேரம் சுவை அலாதியாக இருந்தது.சுவையானதொரு குறிப்பை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி.
ஆமினா அக்கா ரொம்ப அருமையாக இருக்கு. நான் செய்துருக்கிறேன் அக்கா. ஆனாலும் நீங்கள் சொல்லும் அளவில் நான் நாளைக்கு செய்து பார்த்து சொல்கிறேன் அக்கா.
முடிந்தால் என்னுடை வலைப்பூவை சற்று திறந்து பாருங்கள் அக்கா....
என்னுடைய கருத்தை காணவில்லை ஆமினா அக்கா .
நீங்கள் சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது வெண்டைக்காய் புளிக்கறி சூப்பர் டேஸ்ட். நம் நட்பு தொடரட்டும் அக்கா....
@viji
முந்தைய கமென்ட் நான் கவனிக்கல... ஸ்பாம்ல இருந்தது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஜி
நிச்சயம் உங்க ப்ளாக் வருகிறேன்
நன்றி
mikka nanri akka..
Post a Comment