இறால்- அரை கிலோ
இஞ்சி- 3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் (காரத்திற்கேற்ப குறைக்கலாம்)
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
ஆரஞ்ச் கலர்- ஒரு பின்ச் (காஷ்மிரி மிளகாய் தூள் என்றால் தேவைப்படாது)
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- பொரிக்க தகுந்த அளவு
இறாலை சுத்தம் செய்து வைக்கவும். அதில் எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களை சேர்த்து கலந்து வைக்கவும்
இந்த கலவை அரை மணி நேரம் ஊற வேண்டும் (விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து ஊற வைக்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் இறாலை மொத்தமாக சேர்க்கவும். 10 நிமிடம் சிறு தீயில் மூடியிட்டு வேக விடவும். பின் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.
சிம்பிள் இறால் 65 தயார். சாம்பார், ரசம், வெரைட்டி ரைஸ் உடன் நல்ல காம்பினேன்
__________________________________________
குறிப்பு
__________________________________________
குறிப்பு
- இறாலை முதலில் எண்ணெயில் போட்டதும் ரப்பர் போல் இறைச்சி மாறிவிடும்.
- அடுத்த சில நிமிடங்களில் மெருதுவாய் இருக்கு. இந்த ஸ்டேஜில் தான் எண்ணெயில் இருந்து எடுக்க வேண்டும்
- மெருதுவாய் ஆன பிறகு இன்னும் வேகட்டும் என விட்டு வைத்தால் பழையபடி ரப்பர் ஸ்டேஜ்ஜுக்கு போய்டும் :-)
- இறால் செய்யும் போது இது மட்டும் தான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பெரிய இறாலை விட பொடி இறாலில் சுவை அதிகமாக இருக்கும்
19 comments:
present madam
அப்படி :-)
ஆமி,இறால் சூப்பர்!சின்ன சந்தேகம்.மூடி போட்டு வேக விட்டால் இறாலில் நீர் விடாதா...தப்பிருந்தால் மன்னிக்கவும்.
விடும் என்றாலும் சுவையில் மாற்றம் இருக்காது ராதா. இது பக்கா 65 இல்லையே... அதனால் மொருமொருப்பு தன்மை தேவையில்லை :-)
ஸலாம் சகோ.ஆமினா,
//மெருதுவாய் ஆன பிறகு இன்னும் வேகட்டும் என விட்டு வைத்தால் பழையபடி ரப்பர் ஸ்டேஜ்ஜுக்கு போய்டும் :-)//
---நீங்க மெய்யாலுமே "சமையல் டாக்டர்"தான்..! தொடர்ந்து கலக்குங்க சகோ.
ஆமாம்... தெரியாமத்தான் கேட்கிறேன்... அது ஏன் 65 என்று பெயர் வைத்தீர்கள்..? ஒருவேளை 65 இறால் வாங்கினீர்களோ..?
அல்லது,
முதல் படத்தில் உள்ள ஆறரை இறால்கள் பிளேட்தான் பிளாக்கர் டேஷ்போர்ட் ப்ரிஷோவில் உள்ளன. எனவே, பதிவின் தலைப்பை...
"இறால் 6.5"
...என்றுகூட மாற்றினால் ரொம்ப பொருத்தமாக இருக்குமோ..?
டிஸ்கி:-
இந்த டைல்ஸ்தான் எங்க வீட்டிலும் போட்டிருக்கோம். வழுக்கி விடாத 'க்ரிப்நஸ்' கொண்ட அழகிய டிசைன்.
@சகோ ஆஷிக்
வ அலைக்கும் சலாம் வரஹ்.....
ரொம்ப கூர்ந்து கவனிச்சு கறிவேப்பிலை மறச்சுதுனால 6.5 ஆன வரைக்கும் :-)))
நன்றி சகோ
டிஸ்கி- பின்னூட்டத்தில் டிஸ்கி போட்ட பின்னூட்டவாதி :-)
இந்த வீட்டுக்கு வந்ததும் மொதல்ல பிடிச்ச விஷயமே டைல்ஸ் தான் சகோ.... ரொம்ப அட்ராக்டிவ்வா இருக்கும் :-)
//
//மெருதுவாய் ஆன பிறகு இன்னும் வேகட்டும் என விட்டு வைத்தால் பழையபடி ரப்பர் ஸ்டேஜ்ஜுக்கு போய்டும் :-)//
---நீங்க மெய்யாலுமே "சமையல் டாக்டர்"தான்..! தொடர்ந்து கலக்குங்க சகோ.//
எல்லாம் பட்டு திருத்தியது தான்..... சொதப்பல் சமையல் அனுபவத்தில் அதுவும் ஒன்று :-)
நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும் :-)
இறால் மீனா சூப்பர்
ஆஹா பாக்கும்போதே நாவில் ஊறுதுங்கோ... எங்க ஊர்ல கிடைக்காது. சிட்டிக்கு போனா தான் வாங்க முடியும்... கண்டிப்பா ஒரு நாள் செய்து சாப்பிடனும்ம்..
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!
இறால் வறுவல் எனக்கு ரொம்ப பிடிக்கும். சோறு சாப்பிட்ட பிறகு இறால் மட்டும் நிறைய எடுத்து சாப்பிடுவேன்.
ஏழு இறாலை வச்சு 65-னு சொல்றது என்ன நியாயம் சகோ?
சதீஷ் மாய உலகம்
வருகைக்கு கருத்துக்களுக்கும் நன்றி சகோஸ்
யம் ;P
@இமா
மிக்க நன்றி இமா :-)
Avargal Unmaigal has left a new comment on your post "இறால் 65":
உங்கள் பிரெசண்டேசன் அருமையாக உள்ளது.
நானும் நன்றாக குக் பண்ணுவேன். நான் செய்யும் முறையை உங்கள் பார்வைக்காக வைத்துள்ளேன்.
இறாலில் சிறிது மஞ்சள் பொடி, கரம் மசாலா , சிறிது சில்லி பவுடர், கரு மிளகு பவுடர், சிறிது எலுமிச்சம் ஜூஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்ந்து கலந்து ஃப்ரிஜரில் கலந்து வைத்து கொள்ளவும். எப்போ தேவையோ அப்போது அதை எடுத்து வடை சட்டியில் சிறிதளவு எண்னெய் சேர்த்து அது காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்டை சிறிது சேர்த்து அதன் பிறகு இறாலை அதி கலந்து சில நிமிடங்கள் முடி போட்டு அதன் பிறகு அதனை திறந்து வைத்து அதைல் உள்ள தண்ணி வற்றும் வரை வறுத்து கடைசியில் கருவேப்பிலை சேர்த்து இறக்கி பறிமாறுங்கள்.
இந்த முறையில் செய்வதால் எண்ணெய் அதிக அளவு சேர்க்க வேண்டாம். இது நான் செய்யும் முறை இது
@அவர்கள் உண்மைகள்
மிக்க நன்றி சகோ குறிப்புக்கு
இதை குறித்து வைத்துக்கொள்கிறேன்... அடுத்த முறை செய்து உங்க பேரை போட்டே குறிப்பு கொடுக்குறேன் :-)
சமையல் எக்ஸ்பிரஸ் சூப்பர்.இதனை இப்ப தான் பார்க்கிறேன்.அருமையாக இருக்கு ப்ளாக்..குறிப்புக்களும் சூப்பர்.
சூப்பர் இறா சிக்ஸ்டி பைவ்.பார்க்கவே நன்றாக உள்ளது.
நன்றி ஆசியா அடிக்கடி வாங்க :-)
சாதிகா அக்கா
மிக்க நன்றி உங்க வருகைக்கு
Post a Comment