Powered by Blogger.
RSS

நாசிகோரிங்

தேவைப்படும் பொருட்கள்
சாதம்-2 கப்
முட்டை-3
தக்காளி-3
வெங்காயம்-4
பச்சை மிளகாய்-3
கொத்தமல்லி-கால் கப்
உப்பு-தேவைக்கு
வெள்ளை பூடு- 1


சாத்தை உதிர்த்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.  தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளைபூடு அனைத்தையும் பொடியாய் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், பூடு சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இப்போது முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
முட்டையானது எண்ணெயுடன் சேர்ந்து  நுரை பொங்கி வருவது போல் வரும்.அந்த  நேரத்தில் தக்காளி, கொத்தமல்லி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
பின்னர் சாதத்தை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும்.
டொமெட்டோ சாஸ், சிக்கன்65, பொரித்த மீன் உடன் அருமையான காம்பினேஷனாக இருக்கும்











குறிப்பு: மீதமான சாதத்தில் இவ்வாறு செய்யலாம். சாதம் மட்டும் குழையாமல் இருக்க வேண்டும். இல்லையேல் முட்டையின் வாசம் வரும். டிபன் பாக்ஸில் கொடுத்துவிட எளிமையாக செய்ய கூடியது.


நாசி- சாதம்,ரைஸ்
கோரிங்- பொரித்தல்,பிரைட்
ஆக இதுவும் நாசி கோரிங் தானே  :-))

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

22 comments:

Angel said...

சூப்பரா இருக்கே .செய்திட்டு சொல்றேன் .ஆங் சொல்ல மறந்திட்டேனே
உங்க ரெசிபி மிளகு சிக்கன் செய்தேன் ,ரொம்ப டேஸ்டா இருந்ததுன்னு கணவர் சொன்னார் இங்கே குளிருக்கு சாப்பிட ரொம்ப நல்ல இருந்ததாம்

Asiya Omar said...

ஈசியாக செய்து காட்டிட்டீங்க,சூப்பர்.

SURYAJEEVA said...

மலேசியா சமையலா?

ஆமினா said...

@ஏஞ்சலின்

மிக்க நன்றி ஏஞ்சலின்....

என்னை நம்பி செய்து பார்த்ததுக்கும் மறக்காம பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்தியதற்கும் மனமார்ந்த நன்றிகள் பல

ஆமினா said...

@ஆசியா

மிக்க நன்றீ ஆசியா

ஆமினா said...

@சூர்ய ஜீவா

கிட்ட தட்ட. ஆனா அங்கே காய்கறிகள்,சாஸ் வகைகள் சேர்ப்பாங்க. அதெல்லாம் இல்லாம கொஞ்சம் நம்மூர் ஸ்டைலில் செஞ்சுருக்கேன்.

வருகைக்கு நன்றி சகோ சூர்ய ஜீவா

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இதற்கு பெயர் முட்டை சோறுன்னு சொல்லுவோம். நல்லா கலர்புல்லா இருக்கு.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
நலமா?
நாசிக்கோரிங் ரெசிப்பி அசத்தலாக இருக்கிறது.
இப்போதே செய்து பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது.

ஹுஸைனம்மா said...

ஸலாம் ஆமினா.

ரொம்ப நாளா வரணும் வரணும்னு நினைச்சி இன்னிக்குத்தான் வரமுடிஞ்ச்து. படபடன்னு எத்தனை போஸ்ட் அதுக்குள்ள? அப்படின்னா நீங்க தினமும் சமைப்பீங்களா?? (நோ, நோ, அழக்கூடாது :-))) )

எனக்குத் தோதான நிறைய ரெஸிப்பீஸ் கிடைச்சிருக்கு. செஞ்(சா)சுட்டு சொல்றேன்.

அப்புறம், நீங்க எடுத்த ஃபோட்டோஸ்ல பாத்திரத்தின் அடியில் இருக்கும் டைல்ஸ் (அ) மேசைவிரிப்பு அழகா இருக்குப்பா. ’கிழிஞ்சுது, சமையலை ரசிக்கச் சொன்னா டேபிள்மேட்டை ரசிச்சிகிட்டு... இப்பத்தானே புரியுது இவ ஏன் தெனமும் சமைப்பீங்களான்னு கேட்டான்னு...’ அப்படின்னு உங்க மனசு சொல்றது இங்க எனக்கு கேக்குது... அதையெல்லாம் கண்டுக்கிட மாட்டேன், டோண்ட் வொர்ரி!! :-))))

அப்புறம் இன்னொரு டிப்ஸ் (எனக்கேவான்னு பொங்கக்கூடாது.. ;-)) ) அதாவது, வெட்டுன வெங்காயம், தக்காளியோட முட்டையையும் வச்சிருக்கீங்க. அது நல்லதில்லை. முட்டையை வாங்கிட்டு வந்தவுடனே கழுவிடணும். ஏன்னா, அதுமேலே கோழியின் உடலிலுள்ள கிருமிகள், அசுத்தங்கள் இருக்கும். அப்படியே கழுவினாலும், கிருமிகள் முழுமையாப் போகாதுல்லியா? அதனால அதை உணவுகளோட ஒரே தட்டில் வைக்கக் கூடாது. அதேபோல அதை ஒவ்வொரு முறை கையில் எடுத்தபின், கையை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். அதாவது raw meat/fish-ஐ எப்படி safe handle பண்ணுவோமோ, அதேபோலத்தான் முட்டையையும் ஹேண்டில் பண்ணனும். இது பறவைக் காய்ச்சல் அபாயம் இருந்தபோது (ஆனா எந்நேரமும் கடைபிடிக்க வேண்டியது) இங்கே அமீரகத்தில் சுகாதார அமைச்சகம் சொன்ன அறிவுரை.

குறை சொல்லுவதாக நினைக்க வேண்டாம்.

'பரிவை' சே.குமார் said...

//நாசி- சாதம்,ரைஸ்
கோரிங்- பொரித்தல்,பிரைட்
ஆக இதுவும் நாசி கோரிங் தானே //

அது சரி...
சூப்பரான பதார்த்தம் ரெடி.

F.NIHAZA said...

நல்லாத்தான் இருக்கும்....இருக்கனும்...ஏன்னா நான் இதுபோல செஞ்சிருக்கேன்.....

மணம்தான் இதுல தூள்கிளப்பும்...இல்லையா ஆமினா.....

மாய உலகம் said...

சூப்பரா இருக்கே .செய்திட்டு சொல்றேன் சகோ! செய்முறை விளக்கம் சூப்பர்...

ஆமினா said...

@சகோ ஆஷிக்

//அஸ்ஸலாமு அலைக்கும்,

இதற்கு பெயர் முட்டை சோறுன்னு சொல்லுவோம். நல்லா கலர்புல்லா இருக்கு.

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ//

வ அலைக்கும் சலாம் வரஹ்....
நாங்களும் அப்படி தான். இன்னும் 2 முறைல முட்டைய வச்சு வெரைட்டி ரைஸ் செய்ய இருப்பதால பெயர் குழப்பத்துக்காக இப்படி பேரு :-)

வருகைக்கு நன்றி சகோ

ஆமினா said...

@நிரூ

// வணக்கம் அக்கா,
நலமா?
நாசிக்கோரிங் ரெசிப்பி அசத்தலாக இருக்கிறது.
இப்போதே செய்து பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது.
//
எளிமை தான். செய்துட்டு சீக்கிரம் சொல்லுங்க :-)

ஆமினா said...

@ஹுசைனம்மா

வ அலைக்கும் சலாம் வரஹ்

பாத்திரத்துக்கு அடியில் உள்ளது டைல்ஸ் தான். இப்ப தாங்க தெரியுது உண்மை :-))

உங்களுக்கு தோதாவா? என் சமையலே இப்படி தான் இருக்கும் :-) அப்ப ஒன்ன்க்குள்ள ஒன்னா :-))


கழுவிட்டா சரியாய்டும்னு நெனச்சென். உங்க டிப்ஸ் ரொம்ப உபயோகமா இருக்கும்.
தேங்க்ஸ் பா

வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

ஆமினா said...

@சே.குமார்
//நாசி- சாதம்,ரைஸ்
கோரிங்- பொரித்தல்,பிரைட்
ஆக இதுவும் நாசி கோரிங் தானே //

அது சரி...
சூப்பரான பதார்த்தம் ரெடி.//

மிக்க நன்றி சகோ

ஆமினா said...

@நிகாஷா

நல்லாத்தான் இருக்கும்....இருக்கனும்...ஏன்னா நான் இதுபோல செஞ்சிருக்கேன்.....

மணம்தான் இதுல தூள்கிளப்பும்...இல்லையா ஆமினா.....//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உண்மை தான். பூண்டும், முட்டையும் சேர்ந்த வாசனைக்கே சாப்பாடு நல்லா இறங்கும் ;-)

வருகைக்கு நன்றி பா

ஆமினா said...

@மாய உலகம்
//சூப்பரா இருக்கே .செய்திட்டு சொல்றேன் சகோ! செய்முறை விளக்கம் சூப்பர்...//

செய்துட்டு சொல்லுங்க சகோ :-)

Unknown said...

சூப்பரா தான் இருக்கும் போல

ஸாதிகா said...

நாசி- சாதம்,ரைஸ்
கோரிங்- பொரித்தல்,பிரைட்
ஆக இதுவும் நாசி கோரிங் தானே :-))///அட...சூப்பர்!

Unknown said...

சலாம்

என்னிடம் கீழ்க்கண்டவை இல்லை .. இதற்க்கு மட்டறு வழி என்ன

கொத்தமல்லி இலை , கருவப்பிள்ளை , புதின தலை இவற்றுக்கெல்லாம் மாற்று வழி என்ன .. இலை யாக வாங்கினால் காய்ந்து விடுகிறது . வேஸ்ட் ஆகுது .. அதுக்குத்தான் , பொடி யாக கிடைக்குமா ... ?

சமையலுக்கு புதிது .. அதநாள் தான் இந்த கேள்வி ..

அப்படியே பச்சை மிளகாய் பொடியாக கிடைக்குமா .. ரெட் சில்லி தான் கிடைக்குது ... ரெண்டுக்கும் taste வேற .. அதான் கேள்வி .

அப்புறம் தக்காளி பேஸ்ட் வாங்கி பயன் படுத்தலாமா ? இது உடம்புக்கு நல்லதா ... ஏன்னா தக்காளி வாங்குனோம்னா கேட்டு போயி விடுகிறது . இரண்டு நாட்களில் .. அதான் vaste ஆகுது . .. நானா தான் சமைத்து சாப்பிடுகிறேன் .. ஒரு ஆள் சமையலுக்கு மட்டும் ..

பதில் கொடுங்க .. சிஸ்டர் .. ஜசகல்லாஹ் கைர்

எழுத்தில், கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

I am in foreign outside india..

ஆமினா said...

வ அலைக்கும் சலாம்

//கொத்தமல்லி இலை , கருவப்பிள்ளை , புதின தலை இவற்றுக்கெல்லாம் மாற்று வழி என்ன ..//

இத போடாமலும் சமைக்கலாம்.. போட்டால் சுவை கூடும்..மணம் கூடும்.. அவ்வளவுதான்... ப்ரிஜ்ஜில் வையுங்களேன்... இல்லைன்னா பேஸ்ட் செய்து பிரிஜ்ஜில் வையுங்கள்....

வெளிநாடுகளில் உள்ள முறைகள் பத்தி தெரியவில்லை.. அங்கே இத்தகைய பொடிகள் இருப்பின் வாங்கிபயன்படுத்துங்கள்...

டின்களில் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் எப்போதும் உடலுக்கு கெடுதி தான்... முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்...

ஒருநாளுக்கு சமையல் எனினும் கொஞ்சமாக வாங்கி பயன்படுத்தலாமே தம்பி... :-)



Post a Comment